Published:Updated:

`90 கி.மீ வேகத்தில் சென்ற காருக்குள் தூங்கிய டிரைவர்’…அதிர வைத்த வைரல் வீடியோ!

Tesla
Tesla

காரில் பயணித்தவர்கள் யார் என்ற விவரம் இதுவரை தெரியாத காரணத்தால் எது உண்மை என்ற விஷயம் இது வரைக்கும் தெரியவில்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆட்டோமொபைல் துறையில் மின்சார வாகனங்கள் என்றாலே பலருக்கும் டெஸ்லா என்ற பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும். அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் கார்கள் அங்கே பரவலாகப் பயன்பாட்டில் இருக்கின்றன.

Tesla Auto Pilot
Tesla Auto Pilot

அந்த காரில் இருக்கும் முக்கியமான சில வசதிகளில் `ஆட்டோ பைலட்’ என்பதும் ஒன்று. இதன் மூலமாகக் காரை தானியங்கி முறையில் இயங்க வைக்க முடியும். ஆட்டோ பைலட் செயல்பாட்டில் இருக்கும்போது ஸ்டீயரிங்கைத் தொடத் தேவையிருக்காது. ஆட்டோ பைலட் வசதியின்மீது ஏற்கெனவே அதிகமாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் வீடியோ ஒன்றும் ஆட்டோ பைலட் தொழில்நுட்பம் பாதுகாப்பானதுதானா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

டகோட்டா ரண்டால் (Dakota Randall) என்பவர் அவரது ட்விட்டர் கணக்கில், சில நாள்களுக்கு முன்னால் 28 நொடிகள் ஓடக்கூடிய ஒரு வீடியோவை பதிவேற்றியிருந்தார். அதில் சாலையில் டெஸ்லா கார் செல்வதும், உள்ளே ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபரும் அருகில் மற்றொரு நபரும் தூங்கிக் கொண்டிருப்பது பதிவாகியிருந்தது.

மேலும், அந்த கார் மணிக்கு 88 முதல் 96 கி.மீ வேகத்தில் சென்றுகொண்டிருந்தது, அவர்களை ஹாரன் அடித்து எழுப்ப முயற்சி செய்தேன். ஆனால், அவர்கள் எழுந்திருக்கவில்லை என்றும் டகோட்டா ரண்டால் என்பவர் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டதால் தற்போது அதைப் பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறது டெஸ்லா நிறுவனம். ` இந்த விடியோவில் காணும் விஷயங்கள் அனைத்தும் பொய்யாகவோ அல்லது விளையாட்டாகவோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம். எங்களது டிரைவர் மானிட்டரிங் சிஸ்டம் ஓட்டுநர்கள் காருடன் தொடர்பில் இருப்பதைக் கண்காணித்துக்கொண்டே இருக்கிறது. எச்சரிக்கையை அவர் மீறும்போது ஆட்டோபைலட் வசதியைத் தடை செய்கிறது’ என டெஸ்லா தெரிவித்திருக்கிறது.

Tesla Auto Pilot
Tesla Auto Pilot

`` நிச்சயமாக இது பொய் கிடையாது. ஒரு வேளை காரில் இருந்தவர்கள் வேண்டுமானால் நடித்திருக்கலாம். ஆனால், நான் பொய் சொல்லவில்லை. சாலையில் பயணிக்கும்போது எனக்கு விநோதமாகப்பட்டதால் அதை வீடியோவாகப் பதிவு செய்தேன். எனக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது “ என டகோட்டா ரண்டால் தெரிவித்திருக்கிறார். காரில் பயணித்தவர்கள் யார் என்ற விவரம் தெரியாத காரணத்தால் எது உண்மை என்ற விஷயம் இதுவரைக்கும் தெரியவில்லை. அதே சமயம் இந்த விவகாரத்தில் டெஸ்லாவுக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்துவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு