Published:Updated:

அமெரிக்கா: சிசிடிவி-யில் சிக்கிய மர்மமான உருவம் - வைரலாகும் வீடியோ காட்சி!

மர்ம உருவம்

வெள்ளை நிறத்தில் மர்மமான உருவம் இருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

அமெரிக்கா: சிசிடிவி-யில் சிக்கிய மர்மமான உருவம் - வைரலாகும் வீடியோ காட்சி!

வெள்ளை நிறத்தில் மர்மமான உருவம் இருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
மர்ம உருவம்

அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டின் அருகே வெள்ளை நிறத்தில் மர்மமான உருவம் இருப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி-யில் பதிவாகி இருக்கிறது. இதனை Paranormality Magazine தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

கென்டக்கியில் உள்ள மோர்ஹெட் (Moorhead) அருகே இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்று அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளனர். அது என்னவாக இருக்கும் என்று உலகம் முழுவதும் உள்ள அமானுஷ்ய ஆர்வலர்களிடையே இந்த வீடியோ விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவை ஹாலிவுட்டில் 'ஸ்பெக்ட்ரல்' (Spectral) என்ற திரைப்படத்தில் பெரும் அழிவை ஏற்படுத்திய உருவங்களைப் போன்று இருக்கிறது என்று கூறுகின்றனர். 33 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த மர்ம உருவம் மனிதனைப் போன்று இருக்கிறது.

அது அந்த வீட்டின் தோட்டத்திற்குப் பின் குனிந்த நெளிந்தபடி செல்கிறது. வீட்டு உரிமையாளரின் காரை நெருங்கும்போது அது கவனமாக முன்னே நகர்ந்து சுற்றிப் பார்க்கிறது. அந்த வீடியோவில் ஒருவர், "அதன் முகத்தை நீங்கள் தெளிவாகக் காணலாம்" என்று கூறுவது கேட்கிறது. "KY, Moorhead அருகே பாதுகாப்பு கேமராவில் சிக்கிய உயிரினத்தின் வீடியோ இதோ" என்ற தலைப்புடன் பகிரப்பட்ட அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பகிர்ந்துள்ளனர். பல ட்விட்டர் பயனர்கள் இந்த வீடியோவை ஆர்வமாகப் பார்த்து, இது என்னவாக இருக்கும் என்று விவாதித்துவருகின்றனர்.

ஒரு சிலர் இது பிராங்க் வீடியோ என்றும், வேண்டுமென்றே இப்படி எடிட் செய்து உருவாக்கப்பட்டது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!