Published:Updated:

நிலநடுக்கத்தில் குலுங்கிய ஸ்டூடியோ! - லைவ் நியூஸில் மேஜைக்கு அடியில் ஒளிந்த செய்தி வாசிப்பாளர் #ViralVideo

நிலநடுக்கம்
நிலநடுக்கம் ( CBS news )

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின்போது, அங்குள்ள செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தபோது, வாசிப்பாளர்கள் பதற்றமடைந்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரண்டு நாள்களுக்கு முன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிட்ஜ்கிரேஸ்ட் நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருந்த பல்வேறு கட்டடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது. சில கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. அதேபோல சாலைகளிலும் விரிசல்கள் ஏற்பட்டன.

கட்டடங்கள் அதிர்ந்தன
கட்டடங்கள் அதிர்ந்தன
AP

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளியாக பதிவானது. இதன் தொடர்ச்சியாக மீண்டும் தெற்கு கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.1 புள்ளியாகப் பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்த நிலையில், நிலநடுக்கத்தின்போது, அங்கிருந்த செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளர்கள் செய்தி வாசித்துக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென நிலநடுக்கம் ஏற்பட, செய்திவாசிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். லைவ் ரெக்கார்டிங் சென்றுகொண்டிருக்கும்போதே, அவர்களின் ஸ்டூடியோ அதிரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

நிலநடுக்கம்
நிலநடுக்கம்
CBS news

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது குறித்து வாசிப்பாளர் சாரா டச்சே,``நாங்கள் சக்திவாய்ந்த பலமான நிலநடுக்கம் ஒன்றை உணர்ந்தோம். மேஜைக்கு அடியில் சென்று நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று கருதினோம்” என்றார். மேலும், கலிபோர்னியாவில் தொடர் நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு