Published:Updated:

Pradeep Mehra: வைரலான வீடியோ; உதவிய மக்கள்; தாயின் மருத்துவத்துக்குக் கிடைத்த ரூ.2.5 லட்சம்!

பிரதீப் மெஹ்ரா

அண்மையில் பிரதீப் மெஹ்ரா என்ற 19 வயது இளைஞன் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, ராணுவத்தில் சேர்வதற்காக இரவில் 10 கி.மீ தூரம் ஓடிய வீடியோ இந்தியா முழுவதும் வைரலானது.

Pradeep Mehra: வைரலான வீடியோ; உதவிய மக்கள்; தாயின் மருத்துவத்துக்குக் கிடைத்த ரூ.2.5 லட்சம்!

அண்மையில் பிரதீப் மெஹ்ரா என்ற 19 வயது இளைஞன் பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, ராணுவத்தில் சேர்வதற்காக இரவில் 10 கி.மீ தூரம் ஓடிய வீடியோ இந்தியா முழுவதும் வைரலானது.

Published:Updated:
பிரதீப் மெஹ்ரா

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான பிரதீப் மெஹ்ரா என்பவர் குடும்பச் சூழல் காரணமாக உணவகத்தில் பகலில் வேலை பார்த்துக்கொண்டு, ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க இரவில் தினமும் 10 கி.மீ தூரம் ஓடும் வீடியோவை பிரபல பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகி அனைவரது பாராட்டையும் அன்பையும் பெற்றிருந்தது. மேலும் அந்த வீடியோவில் அவர் தனது அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இதை அறிந்த 'Shoppers Stop' என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் பிரதீப் மெஹ்ராவுடைய அம்மாவின் மருத்துவச் செலவிற்காக ரூ.2.5 லட்சம் வழங்கியுள்ளது.

இதை ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் வினோத் காப்ரி, 'மிட்நைட் ரன்னர் பிரதீப் மெஹ்ரா அன்பு மற்றும் ஆதரவால் நிரம்பி வழிகிறார்' என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் 'ஷாப்பர்ஸ் ஸ்டாப் (shoppers stop) அவரது அம்மாவின் மருத்துவ செலவிற்காக ரூ.2.5 லட்சம் வழங்கியுள்ளது. பிரதீப் இனி அவரது கனவைத் தொடரலாம்' எனப் பதிவிட்டிருந்தார்.

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா என்பவர் பிரதீப் மெஹ்ராவை ராணுவத் தேர்வில் மெரிட்டில் தேர்ச்சி பெற வைப்பதற்கான பயிற்சியை வழங்குவதற்கு தான் உதவி செய்வதாக ட்வீட் செய்திருந்தார். இவர்களைப் போலவே சமூக வலைதளங்களில் பலரும் பிரதீப்புக்கு உதவ முன் வருகின்றனர். இதனால் பிரதீப் மெஹ்ரா அனைவரது அன்பால் எந்தத் தடையுமின்றி தனது கனவை நோக்கி பயணப்படவுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism