Published:Updated:

`மினியன்' கெவின்; ஒற்றைக் கண்! - தாய்லாந்தில் பிறந்த அதிசய நாய்க்குட்டி

ஒற்றைக்கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி
ஒற்றைக்கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி

`கெவின் குட்டி எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்'' என்று கூறி மகிழ்கிறார் அதன் உரிமையாளரான ஷோம்ஜாஸ்.

மினியான் தொடர்கள், குழந்தைகள் மனதை மட்டுமல்ல பெரியவர்கள் மனதையும் கொள்ளை கொள்வன. இத்தொடரில் கெவின், ஸ்டூவர்ட்,பாப் ஆகிய மூன்று மினியான்கள்தான் முக்கிய கதாபாத்திரங்கள். மூவரில் கெவினுக்குத்தான் ரசிகர்கள் ஏராளம். ஒற்றைக் கண்ணுடன் கெவின் செய்யும் சேட்டைகளை ரசிக்கவே தனிக்கூட்டமுண்டு. கெவினைப்போல் தாய்லாந்தில் ஒரு நாய்க்குட்டி பிறந்துள்ளது. அந்தச் செய்தி வைரலாகவே, அந்த குட்டியைப் பார்க்க வருகிறவர்கள்,`இது கெவின் மாதிரி இருக்கே' என்று விளையாட்டாகக் கூற அந்த நாய்க்குட்டிக்கு கெவின் என்றே பெயர் வைத்து விட்டார் அதன் உரிமையாளர் ஷோம்ஜாஸ்.

ஒற்றைக்கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி
ஒற்றைக்கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி
Twitter

``கெவின் குட்டி பிறந்த உடனே அதை ஒரு கூடைக்குள்ள வைத்தேன். பின்னர்தான் தெரிந்தது அந்தக் குட்டிக்கு ஒரு கண்தான் இருக்கு என்பது. இந்த மாதிரி ஒரு குட்டியை வளர்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே. அதைப் பார்க்க வருகிறவர்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு. சிலர் தங்களுக்குக் கொடுத்துவிடும்படி கேட்டார்கள். நாங்கள் கொடுக்கப்போவதில்லை. கெவின் குட்டி எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்'' என்று கூறி மகிழ்கிறார் கெவினின் உரிமையாளரான ஷோம்ஜாஸ் ( Somjaj )

கெவினுக்கு இருக்கிற ஒரு கண்ணும் பார்க்க உதவுமா என்பது இன்னும் இரண்டு மாதங்கள் கழித்தே தெரியும் என்கிறார்கள் மருத்துவர்கள். கெவினுக்கு வாய்ப்பகுதியில் பாதிப்பு இருப்பதால், தன் தாயிடமிருந்து பால் அருந்த முடியவில்லை. புட்டிப் பால் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரச்னை உள்ள நாய்கள் நீண்ட நாள்கள் வாழாது என்று கூறப்பட்டாலும் உற்சாகமாகவே இருக்கிறது கெவின்.

ஒற்றைக்கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி
ஒற்றைக்கண்ணுடன் பிறந்த நாய்க்குட்டி

கெவினின் தாயான காய்னுயி (Khainui ), பிலிப்பைன்ஸ் நாட்டு நாயினமான ஆஸ்பின் வகையைச் சார்ந்தது. பிறந்த இரண்டு நாள்களில், பாட்டில் மூலம் பால் குடித்துக்கொண்டு ஆரோக்கியமாக உள்ளது. இந்த வகை நாய் இனம் 14 வருடம் வாழக்கூடியது என்றாலும், இதன் உடல் உறுப்பு குறைகளான, ஒற்றைக்கண், குரங்கு போன்ற உதடுகளால் இதன் வாழ்நாள் குறையும் வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஒற்றைக்கண் நாய்கள் பிறப்பது ஒன்றும் புதிதல்ல. ஒற்றைக் கண் நாய்கள் சாதாரண வாழ்க்கைக்கு பழகி விடும். ஆனால், கெவினுக்கு வாய் அமைப்பு மற்றும் சில குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும். வாலை ஆட்டிக்கொண்டு சந்தோஷத்துடன் தன் தாய் மற்றும் உடன் பிறப்பான மா ( Mah) மற்றும் உரிமையாளர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது கெவின்.

அடுத்த கட்டுரைக்கு