Published:Updated:

``என்கிட்ட பேசாதீங்க, நான் பயங்கரமான...” - பி.ஹெச்டி மாணவரின் வைரல் அறிவிப்பு

மன அழுத்தம் ( மாதிரிப்படம் )

இந்த அறிவிப்பு குறித்த போட்டோவை, ஸ்டீவ் பிங்காம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பி.ஹெச்டி மாணவர்களுக்கு இப்படிப்பட்ட தேவை உள்ளது போலிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதனைப் பகிர்ந்தும், பதிலளித்தும் வருகின்றனர்.

``தயவுசெய்து என்னிடம் பேச வேண்டாம். ஏனென்றால், நான் பயங்கரமாக தள்ளிப்போடக்கூடிய நபர்” என்று பி.ஹெச்டி மாணவர் ஒருவரின் அறிவிப்பு, சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

பொதுவாக கல்வி என்பதே, மாணவர்களுக்கு ஒருவகையில் அழுத்தம் தரக்கூடியது. அதுவும் பி.ஹெச்டி போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். பல நூல்களைப் படிக்க வேண்டும்; ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.

twitter
twitter
@Steve_Bingham92

இந்த நிலையில், பி.ஹெச்டி படித்து வரும் மாணவர் ஒருவர், பேப்பர் ஒன்றில் பிரின்ட் அவுட் எடுத்து தனது கம்ப்யூட்டர் அருகே ஒட்டியுள்ள அறிவிப்பு, சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், `தயவுசெய்து என்னிடம் பேச வேண்டாம். எனது பி.ஹெச்டி வேலையில் நான் மூழ்கியிருக்கிறேன். என்னிடம் பேச ஆரம்பித்தால் என்னால் பேசுவதை நிறுத்த இயலாது. ஏனென்றால், நான் பயங்கரமாக தள்ளிப்போடக்கூடிய நபர்’ என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தன்னிடம் ஏதாவது தெரியப்படுத்த வேண்டுமென்றால், இ-மெயில் செய்யும்படியும் அந்த மாணவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்த போட்டோவை, ஸ்டீவ் பிங்காம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, பி.ஹெச்டி மாணவர்களுக்கு இப்படிப்பட்ட தேவை உள்ளது போலிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதனைப் பகிர்ந்தும், பதிலளித்தும் வருகின்றனர்.

ஒருவர் தனது பதிலில் ``ஒவ்வொரு பி.ஹெச்டி மாணவருக்கும் சில தருணங்களில் இது தேவைப்படும் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார். இன்னொரு பதிவர், ``இன்றுள்ள சூழலில் நாம் அனைவருமே இதுபோன்ற நிலையில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். ``இந்த அறிவிப்பினை எனது நெற்றியில் ஒட்டிக் கொள்ள விரும்புகிறேன்” என்று இன்னொருவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.