Published:Updated:

பசியில் தவிக்கும் விலங்குகள்!- கையிழந்த குரங்கிற்குக் கையான காவலர் #Viralvideo

பழம் வழங்கும் காவலர்
பழம் வழங்கும் காவலர்

கையிழந்த குரங்குக்குக் காவலர் ஒருவர் வாழைப்பழத்தை ஊட்டிவிடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது

ஊரடங்கின் காரணமாக மனிதர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடப்பதால், சாலையில் உள்ள விலங்குகள் உணவளிக்க யாருமின்றித் தவிக்கின்றன. இதற்காகப் பல காவலர்கள் சாலையோர நாய்களுக்கு உணவு வழங்குகின்றனர். தன்னார்வலர்களும் ஆர்வமாக வந்து சாலையோர விலங்குகளுக்கு உணவளித்து உதவுகின்றனர். தற்பொழுது கையிழந்த ஒரு குரங்கிற்குக் காவல்துறை அதிகாரி ஒருவர் வாழைப்பழத்தை ஊட்டிவிடும் காணொளி மிக வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

அந்த நெகிழ்ச்சியான காணொளியில் முகக் கவசம் அணிந்த காவலர் ஒருவர் காவல் நிலையத்தில் தொலைபேசியில் பேசிக்கொண்டு அமர்ந்துள்ளார். தொலைபேசியில் பேசி முடித்தவுடன், அவருக்கு அருகில் இருக்கும் திண்ணையில் அமர்ந்துள்ள, இரண்டு கைகளையும் இழந்த அந்தக் குரங்கிற்குச் சாப்பிடுவதற்கு ஏதுவாக, வாழைப்பழத்தை உரித்து, ஒரு குழந்தைக்குத் தருவதைப்போல தருகிறார். குரங்கும் ஆவலுடன் சாப்பிடுகிறது.

`பசிக்கொடுமை; நிர்கதியான தொழிலாளர்கள்’ - குப்பையிலிருந்து உணவு தேடும் அவலம்

குரங்கு நன்றி உணர்வுடன் அவரை நோக்குகின்றது. இந்த இதயத்தைத் தொடும் காணொளியை ட்விட்டர் பக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பகிர்ந்தும் அந்தக் காவலருக்கு மற்ற உயிர்கள் மேல் உள்ள அன்பைப் பாராட்டியும் வருகின்றனர். இந்தக் காணொளியை குஷ்பூ சோனி என்பவர்," கையிழந்த குரங்கிற்கு உணவளிக்கும் காவல்துறை அதிகாரி" என்று இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதே போல் சமீபத்தில் டெல்லிக் காவலர்கள் சிலர் குழுவாகத் தங்கள் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் பசியுடன் வாடும் பறவைகள், குரங்குகளுக்கு உணவு அளித்து வருகின்றனர். அதேபோல் உத்தரப்பிரதேசத்திலும் காவலர்கள் இந்த ஊரடங்கால் பசியுடன் உள்ள குரங்குகளுக்கு உணவு அளித்து வருவது பாராட்டத்தக்கது. காவல் துறை நமக்கு மட்டும் நண்பன் அல்ல மற்ற விலங்குகளுக்கும் உற்ற நண்பன்தான் என்பது இந்தச் சம்பவங்கள் மூலம் நிரூபணமாகின்றது.

அடுத்த கட்டுரைக்கு