Published:Updated:

கூகுள் சந்தேகங்களுக்கு ரூ.1000 பீஸ்; வைரலாகும் மருத்துவரின் ஆலோசனைக் கட்டண போஸ்டர்!

நோட்டீஸ்

மருத்துவர் ஒருவர் தனது மருத்துவமனையில் 'கூகுள் சந்தேகங்களுக்கு ரூ. 1000 பீஸ்' என ஒட்டியுள்ள வித்தியாசமான நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கூகுள் சந்தேகங்களுக்கு ரூ.1000 பீஸ்; வைரலாகும் மருத்துவரின் ஆலோசனைக் கட்டண போஸ்டர்!

மருத்துவர் ஒருவர் தனது மருத்துவமனையில் 'கூகுள் சந்தேகங்களுக்கு ரூ. 1000 பீஸ்' என ஒட்டியுள்ள வித்தியாசமான நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
நோட்டீஸ்

கூகுள்... மனிதனின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒரு அங்கமாக மாறிவிட்டது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எந்தவொரு சந்தேகத்திற்கும் கேள்விகளுக்கும் பதில் வேண்டுமென்றால் கூகுளில் தேடினால் போதும் உடனே பதில் கிடைத்துவிடும். ஆனால் அதேசமயம் அதைமட்டுமே நம்புவது சில நேரங்களில் ஆபத்தாகிவிடுகிறது. அதுவும் மருத்துவம் தொடர்பான விஷியங்களில் அது மிகவும் ஆபத்தாக அமைந்துவிடக்கூடும். எனவே மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மருத்துவரைச் சந்தித்து உரிய சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது.

Google
Google

இதற்கிடையில் பலர் மருத்துவரைச் சந்திக்கும் முன்னரே இணையதளங்களில் நிறைய படித்துக் குழப்பம் அடைந்துவிட்டு அதன்பின் மருத்துவரைச் சந்திக்கின்றனர். அப்போது மருத்துவரிடம் நிறைய சந்தேகங்களையும் கேள்விக் கணைகளையும் தொடுகின்றனர். இதனால் மருத்துவர்கள் நிறைய நேரங்கள் செலவிட்டு அவர்களின் கூகுள் குழப்பங்களுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது. சில மருத்துவர்கள் இப்படிப்பட்ட தருணங்களில் கடிந்துகொள்வதும் நிகழும். இந்நிலையில் இதற்குத் தீர்வு காணும் வகையில் மருத்துவர் ஒருவர் தனது மருத்துவமனையில் வித்தியாசமான நோட்டீஸ் ஒன்றை ஒட்டியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதில் 'நானே நோயைக் கண்டறிந்து நானே அதற்கு சிகிச்சை அளித்தால் ₹200 கட்டணம், நான் நோயைக் கண்டறிந்த பிறகு அதற்கு நீங்கள் கூறும் ஆலோசனைப் படி சிகிச்சை அளிக்க வேண்டுமென்றால் ₹500. உங்கள் கூகுள் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டுமென்றால் ₹1000, நீங்களே நோயைக் கண்டறிந்து அதற்கு என்னை சிகிச்சை அளிக்கச் சொன்னால் ₹1500, நீங்களே நோயையும் கண்டறிந்து அதற்கு நீங்களே சிகிச்சைக்கான ஆலோசனையும் வழங்கினால் ₹2000’ என்று குறிப்பிட்டு நோட்டீஸ் ஒட்டியுள்ளார். இவரின் இந்த நோட்டீஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism