Published:Updated:

`மக்களைக் கட்டுப்படுத்த சிங்கங்களை சாலையில் விட்டதா ரஷ்ய அரசு?’ - வைரல் படத்தின் பின்னணி

ரஷ்ய அதிபர்

ரஷ்யாவில் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க சிங்கங்களை அந்நாட்டு அரசு சாலையில் விட்டதாகப் பரவிவரும் செய்தி உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது.

`மக்களைக் கட்டுப்படுத்த சிங்கங்களை சாலையில் விட்டதா ரஷ்ய அரசு?’ - வைரல் படத்தின் பின்னணி

ரஷ்யாவில் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க சிங்கங்களை அந்நாட்டு அரசு சாலையில் விட்டதாகப் பரவிவரும் செய்தி உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது.

Published:Updated:
ரஷ்ய அதிபர்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தொடர்ந்து கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அனைத்து நாடுகளிலும் முக்கியமாகக் கடைப்பிடிக்கும் ஒரு நடவடிக்கையாக இருப்பது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்களை வெளியில் வராமல் தடுப்பதற்கு பல்வேறு நாடுகளும் பல முறைகளைக் கையாண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனாவில் ட்ரோன்கள் மூலம் மக்கள் வீதிகளில் நடமாடுவது கண்காணிக்கப்பட்டு கண்டிக்கப்பட்டனர். ரோபோக்கள் மூலம் கண்டிப்பு, காவலர்கள் கண்காணிப்பு, கைது நடவடிக்கை போன்றவையும் பல நாடுகளில் எடுக்கப்படுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின. இந்தியாவிலும் நேற்று ஜனதா ஊரடங்கு நடைமுறையிலிருந்த போது வீட்டை விட்டு வெளியில் வந்த மக்களுக்குக் காவலர்கள் மலர்கள் கொடுத்து வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்திய நிகழ்வும் நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதே போல ரஷ்யாவில் ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்ததாக கடந்த சில நாள்களாக சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. சாலைகளில் திரியும் சிங்கத்தின் புகைப்படத்துடன் பகிரப்பட்டுள்ள பதிவில், ரஷ்யாவில் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் நாடு முழுவதும் 800 சிங்கம் மற்றும் புலி போன்ற விலங்குகளைச் சாலைகளில் விட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுவரை பல ஆயிரக்கணக்கான மக்கள் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால், அந்த புகைப்படமும் தகவலும் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள உண்மை கண்டறியும் செய்தியில், அந்த சிங்கத்தின் புகைப்படம் ரஷ்யாவில் எடுக்கப்பட்டது இல்லை. அது 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தென்னாப்ரிக்காவின் ஜோஹனஸ்பர்க் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. கொலம்பஸ் என்ற பெயர் கொண்ட அந்த சிங்கம், சினிமா படப்பிடிப்புக்காக படக்குழுவினரால் சாலைக்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism