Published:Updated:

`எனது பேச்சை மொழிபெயர்க்க முடியுமா?'- ராகுலுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து டிரெண்டான 12-ம் வகுப்பு மாணவி

ராகுல் காந்தி - மாணவி ஸபா பெஃபின்
ராகுல் காந்தி - மாணவி ஸபா பெஃபின்

வழக்கமாக ராகுல் காந்தி உரையை காங்கிரஸ் தலைவர்கள் மொழிபெயர்ப்பு செய்வதுதான் வழக்கம்.

`அடி பொலி.... ஸபா பெஃபின்' என்று மலையாள நெட்டிசன்கள் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கொண்டாடி வருகின்றனர். அந்த மாணவியை அப்படிக் கொண்டாட என்ன காரணம் என்று கேட்கிறீர்களா.. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பி-யுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக கேரளா வந்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் இன்று காலை வயநாடு தொகுதிக்கு உட்பட்ட கருவாராக்குண்டு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அத்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ கட்டிக்கொடுத்த புதிய கட்டடத்தை திறந்துவைத்தார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தத் தொடங்கினார். வழக்கமாக, ராகுல் காந்தி உரையை காங்கிரஸ் தலைவர்கள் மொழிபெயர்ப்பு செய்வதுதான் வழக்கம்.

ராகுல் காந்தி - மாணவி ஸபா பெஃபின்
ராகுல் காந்தி - மாணவி ஸபா பெஃபின்

ஆனால், இன்று ராகுல் தனது உரையை தொடங்குவதற்கு முன்னதாக மாணவர்களை நோக்கி, ``எனது பேச்சை மொழிபெயர்க்க முடியுமா?" எனக் கேட்டார். ராகுல் அப்படிக் கேட்கவே அங்குள்ள மாணவர்கள் மத்தியில் ஒருவித படபடப்பு உருவானது. அப்போது அந்தப் பள்ளியில் படிக்கும் ஸபா பெஃபின் என்ற 12-ம் வகுப்பு மாணவி தைரியமாக மேடைக்கு வந்தார். மாணவியை வரவேற்ற ராகுல், அவர் பெயரை கேட்டுக்கொண்டார். பின்னர், ராகுல் மாணவர்கள் மத்தியில் அறிவியல் குறித்தும் நாடு குறித்தும் பேச அதைத் தெளிவாக மலையாளத்தில் மொழிபெயர்த்தார் ஸபா. அவரின் மொழிபெயர்ப்பை மாணவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

Vikatan

கடைசியாகப் பேசி முடித்ததும் ``நன்றாக மொழிபெயர்த்தீர்கள்'' என ஸபாவை வெகுவாகப் பாராட்டிய ராகுல் காந்தி அவருக்கு சாக்லேட் கொடுத்து அசத்தினார். இந்தக் காட்சிகளைத்தான் இணையத்தில் பகிர்ந்து ஸபாவைக் கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய அப்பள்ளி ஆசிரியர் ஒருவர், ``ராகுல் காந்தியின் உரையை ஸபா சிரமமின்றி மொழிபெயர்த்தார். அவள் பொருத்தமான வார்த்தைகளைக் குறிப்பாக மலப்புரம் பாஷையில் உடனுக்குடன் மொழிபெயர்த்து எங்கள் அனைவரையும் திகைக்க வைத்துவிட்டாள். ஸபாவால் எங்கள் பள்ளிக்குப் பெருமை" எனக் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி - மாணவி ஸபா பெஃபின்
ராகுல் காந்தி - மாணவி ஸபா பெஃபின்
manoramaonline
ராகுல் காந்தி - மாணவி ஸபா பெஃபின்
ராகுல் காந்தி - மாணவி ஸபா பெஃபின்
manoramaonline

இதற்கிடையே, ``இப்படி நான் மொழிபெயர்ப்பது முதல்முறை. ராகுல் காந்தி மொழிபெயர்க்க யாராவது வர முடியுமா எனக் கேட்டதும், நான் போக வேண்டும் என நினைத்தேன். ஆனால், எனக்குத் தயக்கமாக இருந்தது. என்னால் அது முடியுமா என யோசித்தேன். ஆனால் என் நண்பர்கள், ஆசிரியர்கள்தான் ஊக்கம் தந்து என்னை மேடையேற வைத்தனர். மேடைக்கு போனதும் இது கனவா என யோசித்தேன். ஆனால், ராகுல் காந்தி எளிய வார்த்தைகளைப் பேசி என் வேலையை எளிதாக்கினார்" என்று விழா முடிந்த பிறகு மாணவி ஸபா மகிழ்ச்சி பொங்கப் பேசியுள்ளார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு