Published:Updated:

`இன்ஷூரன்ஸ் பணம் கொடுக்க லேட்டாயிடுச்சு; அதுக்காக இப்டியா பண்ணுவீங்க!’ - மிரண்ட அதிகாரிகள்

``நாங்கள் பணக்காரர்கள் இல்லை. நாங்கள் மிகவும் வறுமையில் வாடுகிறோம் எங்களுக்கு சேர வேண்டிய தொகையைத் தர மறுக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் இறந்தவரின் உடலை உறவினர்கள் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு எடுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவின் குவாசுலு- நடால் மாகாணத்தைச் சேர்ந்த 45 வயதான Sifiso Justice Mtshali நவம்பர் 7-ம் தேதி காலமானார். அந்த நபர் தன் பெயரில் இன்ஷூரன்ஸ் செய்துவைத்துள்ளார். அவர் மரணமடைந்ததையடுத்து குடும்பத்தினர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை அனுகியுள்ளனர். அந்நிறுவனத்திடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது. போதிய பணம் இல்லாததால் அவரது இறுதிச்சடங்கு நடத்துவதிலும் காலதாமதம் ஏற்பட்டது. நவம்பர் 11-ம் தேதி அந்த நபர் மரணமடைந்தது தொடர்பாக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். 48 மணி நேரத்தில் பணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், இன்ஷூரன்ஸ் பணம் வந்தாகத் தெரியவில்லை.

`இன்ஷூரன்ஸ் பணம் கொடுக்க லேட்டாயிடுச்சு; அதுக்காக இப்டியா பண்ணுவீங்க!’ - மிரண்ட அதிகாரிகள்

இதையடுத்து இறந்தவரின் உடலை நீல நிறப்பையில் கிடத்தி இன்ஷூரன்ஸ் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்காக அவ்வாறு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை வழங்க ஏற்பாடு செய்தது. இதுகுறித்துப் பேசிய உறவினர்கள், ``நாங்கள் பணக்காரர்கள் இல்லை. நாங்கள் மிகவும் வறுமையில் வாடுகிறோம் எங்களுக்குச் சேர வேண்டிய தொகையைத் தர மறுக்கிறார்கள். அவர்களின் செயல்கள் ஆத்திரம் ஏற்படுத்துவதாக இருந்தது. இதுபோன்ற இன்ஷூரன்ஸ் க்ளைம் எல்லாம் இறந்த 8 மணி நேரத்தில் கிடைத்துவிடும். அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தும் எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதனால்தான் அவர் இறந்து விட்டார் என்பதை நிரூபிப்பதற்காக உடலை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றோம்” என்றனர்.