Published:Updated:

Tata Nexon: நெக்ஸான் நீயுமா! திடீரென பற்றி எரிந்த எலெக்ட்ரிக் கார்; என்ன சொல்கிறது டாடா

Nexon Fire ( Pic Courtesy: @KamalJoshi108 )

4 ஆண்டுகளில் இதுவரை 30,000 எலெக்ட்ரிக் நெக்ஸான்களை விற்றிருக்கிறது டாடா மோட்டார்ஸ். நாடு முழுவதும் கணக்கெடுத்ததில், சுமார் 100 மில்லியன் கி.மீ தூரம் ஓடியிருக்கிறது நெக்ஸான். அதற்குள் இப்படி ஒரு சம்பவத்தை டாடா மோட்டார்ஸே எதிர்பார்த்திருக்கவில்லை.

Tata Nexon: நெக்ஸான் நீயுமா! திடீரென பற்றி எரிந்த எலெக்ட்ரிக் கார்; என்ன சொல்கிறது டாடா

4 ஆண்டுகளில் இதுவரை 30,000 எலெக்ட்ரிக் நெக்ஸான்களை விற்றிருக்கிறது டாடா மோட்டார்ஸ். நாடு முழுவதும் கணக்கெடுத்ததில், சுமார் 100 மில்லியன் கி.மீ தூரம் ஓடியிருக்கிறது நெக்ஸான். அதற்குள் இப்படி ஒரு சம்பவத்தை டாடா மோட்டார்ஸே எதிர்பார்த்திருக்கவில்லை.

Published:Updated:
Nexon Fire ( Pic Courtesy: @KamalJoshi108 )
‘இப்படி நடக்கக் கூடாது’ என்று ஒரு எதிர்பார்த்த ஒரு விஷயம், எதிர்பார்த்த மாதிரியே நடந்து விட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் எரிந்து கொண்டிருந்தன. ‘எலெக்ட்ரிக் கார்களாச்சும் சேஃப்டியா இருக்கே’ என்று எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் நிம்மதியாக இருந்தது முடிவுக்கு வந்துவிட்டது.

ஆம், மும்பையில் டாடாவின் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ஒன்று எரிந்து போனது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான மேற்கு வாசை எனும் பகுதியில் சும்மா நின்றிருந்த நெக்ஸான் எலெக்ட்ரிக் கார், பகபகவெனத் தீக்கு இரையாகி புகை மண்டலமாகிப் போனதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, நெக்ஸான் பற்றி எரிந்ததுதான், ஷோசியல் மீடியாக்களில் பற்றிக்கொண்டு எரிகிறது.

‘கார்களாச்சும் எரியாம இருந்துச்சுனு நிம்மதியா இருந்தோம்; இப்போ அதுவும் நடந்துடுச்சே’ என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் இச்சம்பவம் விவாதத்தை உண்டு பண்ணியிருக்கிறது.

அதேபோல், ‘தீ விபத்தின்போது செய்யக்கூடாது’ என்ற ஒரு விஷயத்தையும் இந்தச் சம்பவத்தில் தெளிவாகச் செய்கிறார்கள் மக்கள். அதாவது, எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிக்கும்போது, தண்ணீர் ஊற்றி அனைப்பது மகா தவறு என்று பல முறை பல நிறுவனங்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற விஷயங்களில் தண்ணீர், தீக்கு நண்பன்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மண் அல்லது கோணிச்சாக்கு கொண்டு அணைப்பது நல்லது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த வீடியோ வைரலான கொஞ்ச நேரத்திலேயே, இது நெகட்டிவ் கமெண்ட்களை ஏற்படுத்தி விடக்கூடாது என்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனமே தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த வீடியோவைப் பதிவிட்டுவிட்டது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் எப்படி எரிந்து போனது என்று, இது சம்பந்தமாக இன்வெஷ்டிகேஷன் செய்து, பிரச்னைக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க ஆக்ஷனில் இறங்கியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறது டாடா மோட்டார்ஸ்.

Nexon EV Max
Nexon EV Max
Xavier Lorenzo

நெக்ஸான்தான் இப்போதைக்கு ஒரு நம்பகமான, விலை குறைவான, ஒரு எலெக்ட்ரிக் பட்ஜெட் கார். எலெக்ட்ரிக் மார்க்கெட்டில் டாப் செல்லிங் காரும்கூட! இதன் ஜிப்ட்ரான் தொழில்நுட்பம், இந்தியா முழுதும் பேசப்பட்டது. அட, எலெக்ட்ரிக் கார்களில் குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கும் வாங்கிய கார் நெக்ஸான். 30.2kWh லித்தியம அயன் பேட்டரி பேக் கொண்டிருக்கும் நெக்ஸானின் ரேஞ்ச்… அதாவது சார்ஜிங் தூரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று சமீபத்தில்தான் ‘நெக்ஸான் இவி மேக்ஸ்’ என்ற பெயரில் ரேஞ்ச் அதிகம் தரும் பெரிய 40.5kWh பேட்டரி கொண்ட, பெரிய நெக்ஸானை அறிமுகப்படுத்தியிருந்தது டாடா. நெக்ஸான் பிறந்த 4 ஆண்டுகளில் இதுவரை 30,000 எலெக்ட்ரிக் நெக்ஸான்களை விற்றிருக்கிறது டாடா மோட்டார்ஸ். நாடு முழுவதும் கணக்கெடுத்ததில், சுமார் 100 மில்லியன் கிமீ தூரம் ஓடியிருக்கிறது நெக்ஸான். அதற்குள் இப்படி ஒரு சம்பவத்தை டாடா மோட்டார்ஸே எதிர்பார்த்திருக்கவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘முழுமையான புலனாய்வு முடிந்ததும், எல்லோருக்கும் இதற்கான விளக்கம் என்னவென்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.’’ என்று சொல்லியிருக்கிறது டாடா.

ஏற்கெனவே, மற்ற எலெக்ட்ரிக் டூ–வீலர் நிறுவனங்கள், தங்கள் வாகனங்களை ரீ–கால் செய்து கொண்டிருக்கும் வேளையில், டாடாவும் இது தொடர்பாக நெக்ஸான்களை ரீ–கால் செய்யுமா என்பது தெரியவில்லை.

சீக்கிரம் பதில் சொல்லுங்க டாடா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism