Published:Updated:

காதல் சொல்ல வைத்தோம்!

காதல்
பிரீமியம் ஸ்டோரி
காதல்

‘அட! எப்படியெல்லாம் புரபோஸ் பண்ணுறாங்கப்பா!’

காதல் சொல்ல வைத்தோம்!

‘அட! எப்படியெல்லாம் புரபோஸ் பண்ணுறாங்கப்பா!’

Published:Updated:
காதல்
பிரீமியம் ஸ்டோரி
காதல்
காதல் சொல்ல வைத்தோம்!
காதல் சொல்ல வைத்தோம்!

துர்தேவதை மூலம் நூறு ஆண்டுகள் தூங்க சபிக்கப்பட்ட ஓர் அழகிய இளவரசியைப் பற்றிய விசித்திரக் கதை, ‘ஸ்லீப்பிங் பியூட்டி.’ இளவரசியின் இந்த சாபத்தை, காதல் நிறைந்த ஓர் இளவரசனின் முத்தத்தால் மட்டுமே சரிசெய்ய முடியும். இந்த அனிமேஷன் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்துதி டேவிட்டுக்கு, திடீரென ஆச்சர்யம். காரணம், முத்தமிட்டதும் அந்த இளவரசியின் முகம் ஸ்துதி போன்று மாறியது. இளவரசன் முகம், ஸ்துதியின் நீண்ட நாள் நண்பன் லீ லோச்லெரின் சாயலில் இருந்தது. என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்குள், ஸ்துதி முன்பு மண்டியிட்டுத் தன் காதலை வெளிப்படுத்தினார் லீ.

love proposal
love proposal

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்ப்ரைஸ் சந்தோஷத்தில் மூழ்கிய ஸ்துதி தன் காதலனின் புரபோசலுக்கு நெகிழ்ச்சியுடன் ‘எஸ்’ சொல்ல, திரையரங்கில் பார்வையாளர்கள் போர்வையில் அமர்ந்திருந்த ஸ்துதி மற்றும் லீயின் நண்பர்கள் வாழ்த்து சொல்ல... வாவ்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘அட! எப்படியெல்லாம் புரபோஸ் பண்ணுறாங்கப்பா!’ என்று இணையவாசிகளை சமீபத்தில் ஹார்ட்டின் தட்டிவிடச் செய்த க்யூட் புரபோசல் வீடியோ இது.

காதல் சொல்ல வைத்தோம்!

‘இதெல்லாம் இப்போ நம்முர்லயும் நடக்குது பாஸ்’ என்கிறார்கள், ‘தி மேஜர் அண்ட் மைனர் சர்ப்ரைஸ் பிளானர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர்களும், காதல் தம்பதிகளுமான பிரியங்கா மற்றும் தீபக்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘உங்க அண்ணன்கிட்ட சொல்லட்டுமா?!’

‘வித்தியாசமா பயமுறுத்தி புரபோஸ் பண்ணணும் பாஸ்’ என்ற கோரிக்கையோடு எங்களைத் தேடி வந்தார் அனிதா. ‘சிறப்பா பண்ணிடலாம்’ என்று சொல்லி, அனிதா புரபோஸ் செய்யவிருந்த ஜீவாவை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு வரச் சொன்னோம்.

love proposal
love proposal

அங்கு நாங்கள் அனிதாவின் அண்ணனின் நண்பர்களைப்போல நடித்து, ‘உங்க அண்ணன்கிட்ட சொல்லட்டுமா?’ என்று அனிதாவை மிரட்ட ஆரம்பித்தோம். அதைப் பார்த்து மிரண்டுபோன ஜீவாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துத் தன் காதலை வெளிப்படுத்தினார் அனிதா!

ரொமான்டிக் டின்னர்!

‘ரொமான்டிக் ஃபீல் கொண்டுவந்து புரபோஸ் பண்ணணும் ஜி’ என்று கேட்டுக்கொண்டார் பிரஷாந்த். அதற்காக நாங்கள் ஒரு ஸ்பெஷல் டின்னர் பிளான் செய்தோம். ஓர் அமைதியான அறை முழுவதும் பூக்களால் அலங்கரித்து, மெழுகுவத்தி ஏற்றி, மெலடி பாடல்கள் ஒலிக்கவிட்டுக் காத்திருந்தார் பிரஷாந்த்.

தீபக் - பிரியங்கா
தீபக் - பிரியங்கா

ப்ரியா வந்ததும் அவர் கையில், இருவரின் புகைப்படம் அச்சடிக்கப்பட்ட, ‘கிஸ் பரோட்டா(Kiss Parotta)’, ‘ஹக் காபி(Hug Coffee)’ என அவர்களுக்காகவே தயாரித்திருந்த பிரத்யேக மெனு கார்டைக் கொடுத்தோம். ப்ரியா எப்படி ‘யெஸ்’ சொல்லாமல் போவார்?!” என்று சிரிக்கிறார்கள் பிரியங்காவும் தீபக்கும்.

படகு, கடல், கேக்!

சென்னையைச் சேர்ந்த காதல் தம்பதி, அதிதி, தேவானந்த். “2013-ல கமிட்டாகி 2018-ல திருமணம் செஞ்சுக்கிட்டோம்’’ என்ற அதிதி, ‘`காதலருக்கு சர்ப்ரைஸ் புரபோசல் செய்ய ஆசைப்பட்டது, அவர் கணவரான பின்னர்தான் நிறைவேறியது. அவருடைய பிறந்தநாள் அன்று, வீட்டிலிருந்தே அவர் கண்களைக் கட்டிக் கூட்டிட்டுப்போக, ‘ஹேய் எங்க போறோம்?’னு நொடிக்கு நொடி அவர் சர்ப்ரைஸ் அதிகமாயிட்டே இருந்தது’’ என்றவரைத் தொடர்ந்தார் கணவர் தேவானந்த்.

சர்ப்ரைஸ் புரபோசல்
சர்ப்ரைஸ் புரபோசல்

“கண்கட்டை அவிழ்த்தா, சென்னை தலைமைச் செயலகம் கடற்கரைப் பகுதியில், அவ்ளோ அழகா அலங்கரிக்கப்பட்ட படகுல, என் மனசுக்குப் பிடிச்ச அதிதிகூட நான். நடுக்கடல்ல கேக் கட் செய்து, ‘பி மை ஃபார்எவர்’னு புரபோஸ் செய்து... வேற லெவல்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism