Published:Updated:

`சபதம் நிறைவேறாமல் குளிக்க மாட்டேன்...’ - 22 ஆண்டுகளாகக் குளிக்காமல் இருக்கும் பீகார் மனிதர்

குளிக்காமல் இருக்கும் பீகார் மனிதர் தர்மதேவ் ( ட்விட்டர் )

இவரின் மனைவி, மூத்த மகன் இறந்தபோதுகூட குளிக்காமல், இருந்த இடத்தைவிட்டு அசையாமல் இருந்தார்.

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் தர்மதேவ். இவர் கடந்த 22 ஆண்டுகளாகக் குளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தனியார் ஊடகத்துக்கு தர்மதேவ் அளித்த பேட்டியில், "மேற்கு வங்கத்திலுள்ள தனியார் தொழிற்சாலையில் 1975-ம் ஆண்டு பணியாற்றிவந்தேன். 1978-ல் திருமணமும் செய்துகொண்டேன். அப்போது திடீரென பெண்களுக்கு எதிரான வன்முறைகள், விலங்குகளைக் கொல்லுதல், நிலத்தகராறு போன்றவை அதிகரிப்பதை உணர்ந்தேன்.

பெண் குழந்தைகள் மீதான வன்முறை
பெண் குழந்தைகள் மீதான வன்முறை

அதைத் தொடர்ந்து எனக்கான குருவைத் தேடிக் கண்டறிந்தேன். அதை முழுமையாகப் பின்பற்றினேன். அப்போது முதல் இப்போது வரை ராமரை தினமும் தியானித்துவருகிறேன். இந்த நிலையில்தான், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், விலங்குகளைக் கொல்லுதல், நிலத் தகராறு போன்றவை எப்போது முற்றிலுமாக நிறுத்தப்படுகிறதோ அப்போதுதான் குளிப்பது எனச் சபதமேற்றேன். அதை இப்போதுவரை பின்பற்றியும் வருகிறேன். நான் குளிப்பதில்லை என்பதால் வேலையைவிட்டு நிறுத்தப்பட்டேன். இப்போதும் யாரும் வேலை கொடுப்பதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குளிக்காமல் இருக்கும் பீகார் மனிதர் தர்மதேவ்
குளிக்காமல் இருக்கும் பீகார் மனிதர் தர்மதேவ்
ட்விட்டர்

மேலும், கிராம மக்கள் தர்மதேவ் தொடர்பாகப் பேசுகையில்... `இவரின் மனைவி, மூத்த மகன் இறந்தபோதுகூட குளிக்காமல், இருந்த இடத்தைவிட்டு அசையாமல் இருந்தார். இவருக்கு இது வரை எந்த நோயும் வந்து நாங்கள் பார்த்தது இல்லை' எனவும் ஆச்சர்யமாகத் தெரிவிக்கிறார்கள்.