Published:Updated:

`இந்த கிஃப்ட்டுக்கே இப்படி ஒரு ரியாக்ஷனா?' - தாயை நெகிழவைத்த குழந்தை #ViralVideo

குழந்தையின் வைரல் வீடியோ
குழந்தையின் வைரல் வீடியோ

"நான் என் மகளைக் கேலி செய்வதற்காக இப்படி ஒரு மோசமான பரிசை அவளுக்குக் கொடுத்தேன்."

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, ஒரு தாய் தன் மகளுக்கு சாதாரண வாழைப்பழ பரிசு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பரிசைப் பார்த்து குழந்தை வெளிப்படுத்திய மகிழ்ச்சி வீடியோ வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவில் நீதிபதியாக இருப்பவர் மொஜிகா. இவர் தன் 2 வயது மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு ஒன்றைக் கொடுக்க விரும்பியுள்ளார். வழக்கமாக, கிறிஸ்துமஸ் விழாவுக்குக் கொடுக்கும் கேக்கைப் பரிசாகக் கொடுக்காமல், வித்தியாசமான முறையில் வாழைப்பழத்தைத் தந்து குழந்தையை விளையாட்டாகச் சீண்டலாம் என்று நினைத்துள்ளார்.

ஜென்டில் பேரன்டிங், ஏர்லி லேர்னிங், மான்ட்டிசரி பேரன்டிங்... குழந்தை வளர்ப்பில் எது பெஸ்ட்?

அதோடு அந்தப் பரிசை திறந்து பார்க்கும்போது குழந்தையின் உணர்வு என்னவாக இருக்கும் என்பதை அறியவும் நினைத்திருக்கிறார். ஆனால், குழந்தையின் ரியாக்ஷனோ வேற லெவல். அம்மா தந்த பரிசைப் பார்த்த குழந்தை ஆர்யா, இரு கைகளையும் உயர்த்தி, கண்களையும் விரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது. அந்தக் குழந்தையின் மகிழ்ச்சியான அந்த உணர்வுக் காட்சி, அவரின் தாய் மொஜிகாவைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. தினந்தோறும் சாப்பிடுகிற வாழைப்பழமாக இருந்தாலும் எல்லைகளற்ற மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டது ஆச்சர்யம்தானே!

அந்த அழகிய தருணத்தை வீடியோவாக எடுத்த நீதிபதி மொஜிகா சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி 2 கோடி பேர் பார்த்திருக்கின்றனர். மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான கமென்ட்களையும் பதிவுசெய்து வருகின்றனர். ``கள்ளம் கபடமற்ற குழந்தைகளின் உலகம் மிகவும் விந்தையானது. அவர்களிடத்தில் எதிர்மறை எண்ணங்களைக் காண முடியாது. அன்பு மட்டுமே அவர்களிடத்தில் நிறைந்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

இது குறித்துப் பேசிய மொஜிகா. ``நான் என் மகளைக் கேலி செய்வதற்காகச் சாதாரணமான பரிசைக் கொடுத்தேன். ஆனாலும், அதை அவள் கொண்டாடிய விதம் மகிழ்ச்சிக் கடலில் திளைக்கச் செய்கிறது. மேலும், அவளுடைய இந்த மகிழ்ச்சியை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது குறித்து குழந்தைகளிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு