Election bannerElection banner
Published:Updated:

நேரலைக்குத் தயாரான நிருபரிடம் செல்போன் பறிப்பு! - கேமராவில் பதிவான திருட்டு #ViralVideo

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

அப்போது திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர், டியாகோவின் கையிலிருந்த அவரது ஸ்மார்ட்போனை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார்.

நேரலையில் செய்தி வழங்கத் தயாராகிக்கொண்டிருந்த டி.வி நிருபர் ஒருவர் கையிலிருந்த ஸ்மார்ட்போனை முகமூடி அணிந்துவந்த இளைஞர் பறித்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் டியாகோ டெமார்கோ (Diego Demarco). உள்ளூர் செய்தித் தொலைக்காட்சியான `என் விவோ எல் நியூவ்’ (En Vivo El Nueve) என்னும் நிறுவனத்தில் நிருபராகப் பணியாற்றிவருகிறார்.

அர்ஜென்டினாவின் சரண்டி (Sarandi) என்னும் நகரத்திலிருந்து நேரலையில் செய்தி வழங்க டியாகோ டெமார்கோ தயாராகிக்கொண்டிருந்தார்.

சென்னை: ரூ.3,000 டு 10,000; மூன்று கை மாறும் செல்போன்கள்! -திருட்டு நெட்வொர்க் சிக்கிய பின்னணி

அப்போது திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர், டியாகோவின் கையிலிருந்த அவரது ஸ்மார்ட்போனை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார். ``எனது மொபைலை என்னிடம் திரும்பக் கொடுத்துவிடு” என்று ஸ்பானிஷ் மொழியில் கத்தியவாறே இளைஞரைத் துரத்திப் பிடிக்க டியாகோ முயல்வது வரையிலான காட்சிகள் வீடியோ கேமராவில் பதிவாகியிருக்கின்றன. பின்னர், சிறிது தொலைவிலேயே டியோகோவின் பார்வையிலிருந்து அந்தத் திருடன் மறைந்துவிடுகிறார்.

வைரல் வீடியோ
வைரல் வீடியோ

கேமராவில் பதிவான காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலாகிவருகின்றன. அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதி மக்கள் அந்தத் திருடனை அடையாளம் கண்டுகொண்டதுடன், டியாகோவுக்கு உதவவும் முன்வந்தனர். திருடனின் வசிப்பிடத்துக்குச் சென்று, டியாகோவின் ஸ்மார்ட்போனையும் அவருக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வீடியோவை டியாகோவும், சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு