Published:Updated:

ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் வாகனம் வெடிக்குமா? வாட்ஸ்-அப் வதந்தியில் பாதி உண்மை; பாதி பொய்!

பெட்ரோல் ஃபில்லிங்கில் கவனம்!

உங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல்/டீசல் போடும்போது, இவ்வளவு விஷயங்கள் கவனிக்கணுமா?

ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் வாகனம் வெடிக்குமா? வாட்ஸ்-அப் வதந்தியில் பாதி உண்மை; பாதி பொய்!

உங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல்/டீசல் போடும்போது, இவ்வளவு விஷயங்கள் கவனிக்கணுமா?

Published:Updated:
பெட்ரோல் ஃபில்லிங்கில் கவனம்!

நடிகர்/நடிகைகள் பற்றித்தான் வதந்திகள் உலவும் என்றில்லை. எல்லாவற்றிலும் வதந்திகள் புகுந்து புறப்பட ஆரம்பித்திருக்கின்றன. அப்படித்தான் ஒரு ‘அட்வைஸரி கார்டு’ ஒன்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் வாட்ஸ்அப்பில் செம வைரலாகப் போய்க் கொண்டிருந்தது.

‘‘வாகனங்களில் ஃபுல் டேங்க் எரிபொருள் நிரப்பாதீர்கள். அடிக்கிற வெயிலுக்கு உங்கள் வாகனம் வெடித்து உயிருக்கு ஆபத்தாகிப் போக வாய்ப்புண்டு. எனவே, பெட்ரோல் டேங்க்கில் கொஞ்சம்போல வேக்யூம் விட்டுவிட்டு எரிபொருள் நிரப்புங்கள்! அதுதான் நல்லது!’’ என்கிற மெசேஜ்தான் அது. இதை IOC (Indian Oil Corporation) நிறுவனம், பொதுநலன் கருதி வெளியிடுவதாகவும், IOC பெயரிலும் அது டேக் செய்யப்பட்டு வைரலாகப் போய்க் கொண்டிருந்தது.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே IOC–ன் அங்கீகரிக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்திலிருந்து, இதை மறுத்து ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்கள். ‘‘யாரும் இதை நம்பாதீர்கள். இது ஒரு Fake News . ஐஓசி இப்படிப்பட்ட ஒரு செய்தி எதையும் வெளியிடவில்லை!’’ என்று பதறியடித்து மறுப்பு வெளியிட்டிருந்தது. மேலும் அந்தச் செய்தியில், ‘‘எரிபொருள் நிரப்பும்போது ஒரு தடவையாவது டேங்க்கைத் திறந்து வையுங்கள். கேஸ் வெளியேறட்டும்!’’ என்றும் சொல்லப்பட்டிருந்தது. அதையும் மறுத்திருந்தது IOC.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இதை மறுப்பது இருக்கட்டும். உண்மையில், டேங்க் தழும்பத் தழும்ப எரிபொருள் நிரப்புவதால், வாகனம் வெடிக்கும் அளவு ஆபத்து உண்டா? ‘கதவைத் திற; காற்று வரட்டும்’ என்று கைலாசா அதிபர் நித்யானந்தா சொல்வது மாதிரி நிஜமாகவே, ‘டேங்க்கைத் திற; கேஸ் போகட்டும்’ என்பதெல்லாம் உண்மையா? எரிபொருள் நிரப்பும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்?

எரிபொருளை டேங்க் முழுக்கத் தழும்பத் தழும்ப நிரப்புவதால்… வாகனம் வெடிக்கும் அளவுக்கு ஆபத்து என்பதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் இருக்கிறது. எப்படி?

ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் வாகனம் வெடிக்குமா? வாட்ஸ்-அப் வதந்தியில் பாதி உண்மை; பாதி பொய்!

ஃபுல் லோடு அடித்துவிட்டு வாகனம் ஓட்டும்போது, இது வெடிக்கும் என்பது சுத்தப் பொய். ஆனால், அதுவே வாகனம் விபத்துக்குள்ளாகும்போது, இந்தச் செய்தி உண்மையாகிறது. இப்படிப் பல சம்பவங்கள் நம் ஊரில் நடந்திருக்கின்றன. சில மோசமான விபத்துகளை ஆராய்ந்தபோது, வாகனத்தின் டேங்க் முழுக்க எரிபொருள் நிரப்பப்பட்டிருந்ததால்… அதுதான் Explosion–க்குக் காரணமாகவும் அமைந்திருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. அதேபோல், Brim என்று சொல்லக்கூடிய விளிம்பு வரை எரிபொருள் நிரப்பும்போது, டேங்க்குக்குள் ஆவியாகும் தன்மையும் அதிகமாக நடக்கும் என்பதும் உண்மை. காற்றுக்கு இடமில்லாமல் அழுத்தம் அதிகரித்து, அதிலும் அதிக டெம்பரேச்சரில் இது நிச்சயம் சாத்தியம். இதனால், மைலேஜ் நிச்சயம் குறையும். ஆனால், இப்போது வரும் BS-6 வாகனங்களில் இதற்குப் பெரியளவு பயப்படத் தேவையில்லை என்கின்றன ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள். மற்றபடி, ‘டேங்க்கைத் திற; கேஸ் வெளியேறட்டும்’ என்பதுகூட அவசியமில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் வாகனம் வெடிக்குமா? வாட்ஸ்-அப் வதந்தியில் பாதி உண்மை; பாதி பொய்!

பெட்ரோல் போடும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். என்னனு பார்க்கலாம்!

  • நீங்கள் பெட்ரோல் போடும்போது, ‘ஜீரோ பார்த்துக்கோங்க சார்’ என்று ஊழியர்கள் சொல்வதைக் கவனித்திருப்பீர்கள். ஆனால், அந்த மீட்டர் வேகமாக நகர்வதைக் கவனித்திருக்கிறீர்களா? 1,000 ரூபாய்க்கு சர்ருனு ரோலர்கோஸ்டர் மாதிரி போகும்.. இதை ‘கன் பாயின்ட் லெவல் 3’ என்று சொல்வார்கள். இதுவே 100 ரூபாய்க்குப் போடும்போது அதே மீட்டர் ரொம்பவும் மெதுவாக நகர்வதைக் கவனித்திருக்கிறீர்களா? இது ‘கன் பாயின்ட் லெவல் 1’. மொத்தம் 3 லெவல்களில் ‘பாயின்ட் 1 வெச்சுப் போடுங்க’ என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்துங்கள். லெவல் 3 –ல் எரிபொருள் குறைவாக நிரப்ப வாய்ப்புண்டு. அதேபோல், கடைசி சொட்டுக்குப் பிறகே கன்னை வெளியே எடுக்கச் சொல்லுங்கள்!

ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் வாகனம் வெடிக்குமா? வாட்ஸ்-அப் வதந்தியில் பாதி உண்மை; பாதி பொய்!
  • சில கார் உரிமையாளர்கள் பங்க்கில் நுழையும்போது, தங்கள் காரின் பெட்ரோல் டேங்க் எந்தப் பக்கம் இருக்கும் என்று குழம்புவார்கள். இதை நீங்கள் உங்கள் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோலில் டேங்க் சிம்பலுக்குப் பக்கத்தில் உள்ள அம்புக்குறியை வைத்துக் கண்டுபிடிக்கலாம்.

  • தயவுசெய்து உங்கள் காரின் டேங்க்கில் டீசல்/பெட்ரோல் என்று 25 ரூபாய்க்கு ஸ்டிக்கர் ஒட்டிவிடுங்கள். பங்க் ஊழியர்கள் என்ன மூடில் இருப்பார்கள் என்று தெரியாது. பெட்ரோல் காரில் டீசலோ, டீசல் காரில் பெட்ரோலோ நிரப்பினால்… பெரும் சிக்கல்.

  • பைக்குக்கு பெட்ரோல் நிரப்பும்போது, குழந்தைகளை டேங்க்கில் வைத்துக் கொண்டு பெட்ரோல் போடுவது வன்மையான கண்டனம். பெட்ரோல் துளி குழந்தைகளின் கண்களில் தெறித்தால்… அவ்வளவுதான்!

  • சிலர் பைக்கில் பெட்ரோல் எவ்வளவு இருக்குனு பார்க்கிறேன் பேர்வழி என்று மொபைல் டார்ச்சை வைத்து டேங்க்குக்குள் அடித்துப் பார்ப்பார்கள். இது வேண்டாம். அந்நேரம் அழைப்பு வந்தால்… கதிர்வீச்சு அதிகமாகி எக்ஸ்ப்ளோஷன் ஆக வாய்ப்புண்டு.

  • அதேபோல், பெட்ரோல் பங்க்கில் மொபைலுக்கு அழைப்பு வந்தால்… ‘அப்புறமா கால் பண்றேன்’ என்று சொல்லக்கூட காலை அட்டெண்ட் செய்யாதீர்கள். கெட்ட பேர் ஏற்பட்டாலும் பரவாயில்லை; பங்க்கிலிருந்து வெளியே வந்துவிட்டு திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். எத்தனை விபத்துகளைப் பார்த்திருப்பீர்கள்!

  • காருக்கு எரிபொருள் நிரப்பும்போது, தயவுசெய்து இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு, கீழே இறங்கி நீங்களே டேங்க்கைத் திறந்து, மீட்டரை செக் செய்து, நீங்களே டேங்க்கைச் சரியாக மூடிய பிறகே காருக்குள் ஏறுங்கள். ஜமீன்தார் மாதிரி காருக்குள் உட்கார்ந்து பாட்டுக் கேட்பதைத் தவிர்க்கலாம். அதேபோல், டேங்க்கை மூடும்போது 2 அல்லது 3 தடவை ‘க்க்ர்ரிட்ட்’ சத்தம் கேட்டாலே போதும்; சிலர் நான்ஸ்டாப்பாக ‘க்க்ர்ரிட்ட்’ சத்தம் கேட்கும் வரை மூடுவார்கள். இது தவறு. டேங்க் லிட்டையும் நன்றாக மூடுங்கள். விஷமக்காரர்கள், டேங்க்கினுள் மண்ணையோ, தண்ணீரையோ ஊற்றினால்… இன்ஜின் காலி!

ஃபுல் டேங்க் பெட்ரோல் நிரப்பினால் வாகனம் வெடிக்குமா? வாட்ஸ்-அப் வதந்தியில் பாதி உண்மை; பாதி பொய்!
  • ஊழியர்களிடம் எவ்வளவுக்கு என்பதைச் சரியாகச் சொல்லுங்கள். 500–க்குச் சொல்லியிருப்பீர்கள்; வேண்டுமென்றே 100–ல் ஆஃப் செய்துவிட்டு, ‘500 ஆ சொன்னீங்க’ என்று மறுபடியும், ஜீரோ செட் செய்யாமல், 400 வரை ஓட்டுவார்கள். ‘100 ரூபாய் ஏற்கெனவே போட்டேன்; இப்போ 400’ என்பார்கள். 100 ரூபாய் உங்களுக்கு நட்டம்! முடிந்தவரை லிட்டரில் போட்டால் ரொம்ப நல்லது. முந்திதான் சில்லறைத் தட்டுப்பாடு இருக்கும். இப்போதான் Gpay, PayTm என்று டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை இருக்கே!

  • சிலர் பெட்ரோல் கடைசிச் சொட்டு காலியாகும்வரை ஓட்டுவார்கள். பழைய BS-3, BS-4 பைக்குகள் என்றால் பரவாயில்லை. இப்போதுள்ள BS-6 பைக்குகள் கோபக்கார பார்ட்டிகள். ரிசர்வ் அல்லது மஞ்சள் டேங்க் வார்னிங் வந்த உடனேயே பெட்ரோல் போட்டு விடுங்கள். எல்லாமே சென்ஸார் என்பதால், நடுவழியில் உங்களை நிற்க வைத்துவிடுவார்கள்.

  • காரில் எரிபொருள் நிரப்பும்போது, ‘ஆட்டோ கட்’டுக்குப் பிறகு தழும்பத் தழும்ப எரிபொருள் நிரப்புவது தப்பில்லை; ஆனால் தேவையில்லை. விபத்தின்போது இது ஆபத்து. ‘ஆட்டோ கட்’–ல் நிறுத்திவிட்டு, 150 – 200 கிமீ வரை ஓட்டிவிட்டு, மறுபடியும் ‘ஆட்டோ கட்’ நிரப்பிவிட்டு, லிட்டரைக் கணக்குப் போட்டால், உங்கள் கார் எவ்வளவு மைலேஜ் தந்திருக்கு என்பதை ஈஸியாகக் கண்டுபிடிக்கலாம்.

  • கார்களில் மஞ்சள் நிற டேங்க் வந்தால் ரிசர்வ் என்று அர்த்தம். அதைத் தாண்டி 20 – 25 கிமீ வரை வேண்டுமானால் ஓட்டுங்கள். அதற்கு மேல் ஓட்ட வேண்டாம்! ஏர்லாக் ஆக வாய்ப்புண்டு.

வாட்டர் அடல்ட்டரேஷன் Symbol
வாட்டர் அடல்ட்டரேஷன் Symbol
  • எரிபொருளில் ‘வாட்டர் அடல்ட்டரேஷன்’ என்றொன்று உண்டு. அதாவது, எரிபொருளில் தண்ணீர் கலப்பது இது. பெட்ரோலைவிட டீசலில்தான் இது சாத்தியம் அதிகம். இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் ஃப்யூல் ஃபில்ட்டர் வார்னிங்கோடு… அதற்கு அடியில் டாட்டட் லைன்கள் வந்தால்… இது வாட்டர் அலட்ட்ரேஷனுக்கான சிம்பல். இது வந்தால், ரொம்ப நேரம் கார் ஓட்ட வேண்டாம். இது எப்போதாவதுதான் நடக்கும்; ஆனால் நடந்தால் இன்ஜினில் 25–க்கும் மேற்பட்ட பாகங்கள் அவுட்! அண்டர்கிரவுண்ட் சம்ப்பில் தேக்கி வைக்கும் பெட்ரோல் பங்க்குகளில் இது ஓரளவு சாத்தியம்.

பெட்ரோல் போடுவதிலேயே இவ்வளவு விஷயம் இருக்கு! பெட்ரோலைப் பார்த்துச் செலவழிங்க மக்கா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism