Published:Updated:

`ஜெஃப் பெஸோஸின் சொத்து மதிப்பு எவ்வளவு?' - அரிசி கணக்கீடும் டிக்டாக் வைரல் வீடியோவும்

Tik tok
Tik tok

இதற்காக அவருக்கு 26 கிலோ அளவுள்ள அரிசி தேவைப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ, டிக்டாக்கில் மட்டுமல்ல... ட்விட்டரிலும் வைரலானது.

டிக் டாக்கில், அமேசானின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெஸோஸின் (jeff bezos) சொத்து மதிப்பைக் கணக்கிடும் வித்தியாச வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில், அரிசியை வைத்து ஜெஃப் பெஸோஸின் சொத்து மதிப்பைக் கணக்கிடுகிறார் டிக்டாக் ஸ்டாரான ஹம்பிரெய் யாங் (humphrey yang)

Jeff Bezos
Jeff Bezos

இ-காமர்ஸ் (e-commerce) ஆலோசகரான ஹம்பிரெய் யாங், டிக்டாக்கில் நிதியறிவு தொடர்பான புரிந்துகொள்ளும்படி வீடியோக்களைப் பதிவிடுபவர். மேலும், டிக்டாக்கில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார்.

கொரோனா பரவாமல் தடுக்கும் அடிப்படை சுகாதார நடவடிக்கைகள்!- டிக்டாக்கை கையிலெடுக்கும் WHO

டிக்டாக் ரசிகர்களுக்கு, அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெஸோஸின் (jeff bezos) சொத்துமதிப்பை அறியவைக்க அரிசியைக் கொண்டு புது முயற்சியைக் கையாண்டுள்ளார் யாங். முதல் வீடியோவில், ஒரு அரிசியை 100,000 டாலர் எனக் குறிப்பிட்டார். 10,000 அரிசிகளைக் கொண்டு ஒரு பில்லியன் டாலரைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். பிறகு, பத்து அரிசிகளைக் கொண்டு 1 மில்லியன் டாலரையும் குறிப்பிட்டுக் காட்டி, ஜெஃப் பெஸோஸின் சொத்து மதிப்பை அவரின் ரசிகர்களுக்கு எடுத்துக் கூறுகிறார்.

Amazon
Amazon

முதல் வீடியோவின் வெற்றிக்குப் பிறகு, 122 பில்லியன் டாலரை எண்ணுவதற்கு எவ்வளவு அரிசி தேவைப்படும் என்பதைக் காட்ட மற்றொரு வீடியோ பதிவிட்டார் யாங். பெஸோஸின் மொத்த சொத்து மதிப்பு 122 பில்லியன் டாலர் ஆகும். இதற்காக அவருக்கு 26 கிலோ அளவுள்ள அரிசி தேவைப்பட்டது எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ, டிக்டாக்கில் மட்டுமல்ல... ட்விட்டரிலும் வைரலானது.

அடுத்த கட்டுரைக்கு