Published:Updated:

Viral Video: `இதல்லவா தேசப்பற்று..!' ராணுவ வீரருக்கு மரியாதைசெய்த சிறுமி - மனம் நெகிழும் இணையவாசிகள்

ராணுவ வீரருக்கு மரியாதைசெய்த சிறுமி

``என் அளவுக்கு நீங்கள் யாரும் ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தியிருக்க மாட்டீர்கள்!" என நம்மைப் புருவம் உயர்த்தச் செய்யும் அளவுக்கு நெகிழச் செய்திருக்கிறாள் சிறுமி ஒருவர்.

நாட்டுக்குச் சேவை வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் ராணுவத்தில் இணைபவர்கள், மழை, வெயில் என பாராமல் நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க, தங்கள் குடும்பங்களைப் பிரிந்து, காடு மலையென எல்லைகளில் தீவிரவாதிகளுக்கெதிராக போராடுகிறார்கள்.

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்

நாட்டுக்காக தங்கள் குடும்பங்களைப் பிரிந்து எல்லையில் போராடும் ராணுவ வீரர்கள், பல நேரங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்களிலும், எதிரி நாடுகளின் தாக்குதல்களிலும் வீரமரணமடைந்து விடுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராணுவ வீரனின் கால்களை தொட்டு வணங்கும் குழந்தை - viral
ராணுவ வீரனின் கால்களை தொட்டு வணங்கும் குழந்தை - viral

பொதுவாகவே ராணுவ வீரர்கள் என்றாலே நம் மனதில் மரியாதை ஏற்படும். ஆனால், ``என் அளவுக்கு நீங்கள் யாரும் ராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தியிருக்க மாட்டீர்கள்!" என நம்மைப் புருவம் உயர்த்தச் செய்யும் அளவுக்கு நெகிழச் செய்திருக்கிறாள் சிறுமி ஒருவர்.

ரயில் நிலையம் ஒன்றில் சில ராணுவ வீரர்கள் ரயிலுக்காக நின்றுகொண்டிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த சிறுமி ஒருவர், ராணுவ வீரர்களின் அருகில் செல்கிறாள். பின்னர், ராணுவ வீரர் ஒருவரின் கால்களைத் தொட்டு அவருக்கு மரியாதை செய்கிறாள். இதைக் கொஞ்சமும் எதிர்பாராத வீரர், நெகிழ்ச்சியில் புன்னகைத்தபடி அந்த சிறுமியின் தலையைத் தொட்டு ஆசீர்வாதம் செய்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் அனைவராலும் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. சிறுமியின் தேசப்பற்றையும், அவள் மரியாதைசெய்த விதத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.