Published:Updated:

`போட்டோஷாப்பா, நிஜமா?!' இந்தியாவுல இப்படிலாமா டிராஃபிக் ரூல்ஸை ஃபாலோ பண்றாங்க? வைரல் போட்டோ பின்னணி!

மிசோரம் டிராஃபிக்

இந்த ஒரு படமே மிசோரம் மக்களின் பொறுப்புணர்வையும், சட்டத்தைச் சத்தியத்தைப்போல் காப்பதையும் சொல்கிறது. இந்தப் படத்தைப் பல விஐபிக்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து, பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர்.

`போட்டோஷாப்பா, நிஜமா?!' இந்தியாவுல இப்படிலாமா டிராஃபிக் ரூல்ஸை ஃபாலோ பண்றாங்க? வைரல் போட்டோ பின்னணி!

இந்த ஒரு படமே மிசோரம் மக்களின் பொறுப்புணர்வையும், சட்டத்தைச் சத்தியத்தைப்போல் காப்பதையும் சொல்கிறது. இந்தப் படத்தைப் பல விஐபிக்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து, பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர்.

Published:Updated:
மிசோரம் டிராஃபிக்

ஒரு பேருந்து இருக்கையில் அமர்கிறீர்கள். இரண்டு இருக்கைகளுக்கும் சேர்த்து நடுவில் ஒரே ஒரு ஆர்ம் ரெஸ்ட்தான் இருக்கும். ‘ஆர்ம்ரெஸ்ட் உனக்கா எனக்கா’ என்று முழங்கையை வைத்துச் சண்டை போடுபவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

பெட்ரோல் பங்க்கில் நிற்கிறீர்கள். சர்ரென ஒரு பைக்கின் முன் வீல் நம்மை முந்தினால்... ‘ஹலோ பின்னாடி வாங்க’ என்று முறைத்துப் பார்த்துவிட்டு ரெண்டு இன்ச் முன்னேறுபவர்களைப் பார்த்திருப்பீர்கள்!

‘இந்த டிராஃபிக்கில் இருந்து தப்பிக்க இதான்பா ஒரே வழி’ என்று ஆம்புல்ன்ஸ் பின்னாடியே ஓடுபவர்களையும் பார்த்திருப்பீர்கள்!

ஆனால், கிடைத்த கேப்பில் புகுந்து புறப்படாமல்… ‘போனால் என் பாதையில்தான் போவேன்’ என்று வாகனம் ஓட்டும் நேர்மையான வாகன ஓட்டிகளைப் பார்த்ததுண்டா! மேம்போக்காக நடக்காமல் டிராஃபிக் விதிமுறைகளைக்கூட சத்தியத்தைப்போல் காத்து வருகிறார்கள், இந்தியாவில் உள்ள ஒரு மாநில மக்கள். அந்த மாநிலம் மிசோரம். அப்படி ஒரு வியக்க வைக்கும் படம்தான் இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அந்தப் படத்தில், நம் ஊர் பீக் அவர்ஸ் ஓஎம்ஆர் சாலை மாதிரி கடுமையான டிராஃபிக் தெரிகிறது. இடது பக்கம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. அதே சாலையின் எதிர்ப்புறம்… அதாவது வலது பக்கம் மிட் நைட் ஈசிஆர் சாலை மாதிரி அத்தனை காலியாகக் கிடக்கிறது. ஆனால், இடது பக்கத்தில் இருப்பவர்கள், தங்களுக்கான பார்டரைத் தாண்டாமல் அப்படியே டிராஃபிக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பைக்கின் வீல்கூட அந்தச் சாலையின் நடுவே இருக்கும் வெள்ளைக் கோட்டைத் தொட்டிருக்கவில்லை என்பதுதான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். (நீங்களே படத்தைப் பாருங்க!)

இந்த ஒரு படமே மிசோரம் மக்களின் பொறுப்புணர்வையும், சட்டத்தைச் சத்தியத்தைப்போல் காப்பதையும் சொல்கிறது. இந்தப் படத்தைப் பல விஐபிக்கள் தங்கள் ட்விட்டரில் பகிர்ந்து, பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும் ஒருவர்.

‘‘ஒரு வாகனம்கூட சாலையின் டிவைடர் மார்க்கைத் தாண்டவில்லை. நமது வாழ்வின் தரத்தைக் கூட்டுவது நம் கையில்தான் என்பதை உணர வேண்டும். மிசோரம் மக்களுக்குப் பெரிய சல்யூட்!’’ என்று தனது ட்விட்டர் வலைதளத்தில் அவர் சொல்லியிருக்கிறார்.

இது எதேச்சையாக எடுக்கப்பட்ட புகைப்படமா? அல்லது மிசோரம் மக்கள் சட்டத்தை மதிக்கிறவர்களா?

உண்மையிலேயே மிசோரம் மக்கள் ஒழுக்கத்தையும் சட்டத்தையும் மதிப்பவர்கள். இங்கே ஃபேன்ஸியான கார்/பைக்குகள் கிடையாது; ‘சர் புர்’ரென்று ஒன்வேயில் புகுந்து புறப்படும் ஆட்டோக்கள்/டூ–வீலர்கள் கிடையாது; முக்கியமாக யாருமே வாகனத்தில் போகும்போது, தேவைப்பட்டால் தவிர ஹார்ன் அடிப்பதே இல்லை. அத்தனை பொறுமைசாலிகளாம்.

கார்களும் பைக்குகளும் தனித் தனி லேன்களில்...
கார்களும் பைக்குகளும் தனித் தனி லேன்களில்...

அதேபோல் யூடியூபில் இன்னொரு வீடியோவும் உலா வருகிறது. கார் போகும் லேன்களில் பைக்குகள் வரவில்லை; பைக் லேன்களில் கார்கள் போகவில்லை. இதையும் தங்கள் தார்மீகக் கடமைகளில் ஒன்றாகக் கடைப்பிடிக்கிறார்கள் மிசோரம் மக்கள். இதனாலயே மிசோரத்தில் விபத்து எண்ணிக்கைகளும் குறைவாகத்தான் இருக்கின்றனவாம்.

இதற்கு அவர்கள் கடைப்பிடிப்பது ஒன்றே ஒன்றுதானாம்! 10.00 மணி அலுவலகத்துக்கு 9.45–க்கு வீட்டிலிருந்து கிளம்பமாட்டார்களாம். அவசர அவசரமாகப் பயணம் செய்வதைத் தவிர்த்தாலே இதுபோன்ற ஒழுங்குமுறைகளை நாமும் கடைப்பிடிக்கலாம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள் மிசோரம் மக்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Uttarkhand traffic
Uttarkhand traffic
Andhra Traffic
Andhra Traffic

இது மிசோரம் மாநிலத்தில் மட்டுமில்லை; மேகாலயா, அஸ்ஸாம் போன்ற கிழக்கிந்திய மாநிலங்களிலும் இப்படி டிராஃபிக் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். எத்தனை மணி நேரம் காத்திருந்தாலும், லேன் மாறுவதே இல்லையாம்.

‘‘ஹலோ எங்க ஊர்லேயும் இப்படித்தான்… டிராஃபிக் ரூல்ஸை ஃபாலோ பண்ணுவோம்… நீங்களே பாருங்க!’’ என்று ஆந்திரா, உத்தரகாண்ட் போன்ற மாநிலத்தைச் சேர்ந்த நெட்டிசன்கள் சிலர், தங்கள் பங்குக்குச் சில விதிமீறல் இல்லாத படங்களை சோஷியல் மீடியாக்களில் போஸ்ட் செய்து வருகின்றனர்.

‘இது மாதிரி ஒழுங்கு, நம்ம ஊரிலும் உண்டு’னு யாராவது போட்டோஷாப் ஒர்க்காச்சும் செஞ்சு அனுப்புங்க மக்கா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism