Election bannerElection banner
Published:Updated:

நீங்கள் தூக்கத்தில் கும்பகர்ணனா? உங்களுக்குத்தான் இந்தப் போட்டி!

Sleep
Sleep ( சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன் )

இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் 1 லட்ச ரூபாய் உதவித்தொகை உண்டு. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகை உண்டு.

"நன்றாகத் தூங்குங்கள், 10 லட்சத்தை வெல்லுங்கள்", Wakefit என்ற இந்திய நிறுவனம் அறிவித்துள்ள புதிய போட்டியின் டேக்லைன்தான் இது. தூங்குவதற்கு 10 லட்சமா என்ற வியப்பு ஏற்படுகிறதா?

Wakefit நிறுவனம் கர்நாடகாவைச் சேர்ந்த மெத்தைத் தயாரிப்பு நிறுவனம். இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களைத் தங்கள் மெத்தைகளைப் பயன்படுத்தி 100 நாட்கள் தூங்க வைத்து, அதன் மூலம் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு மனித உடலுக்கு 9 மணி நேரத் தூக்கம் என்பது மிகவும் முக்கியம். இரவு தாமதமாகத் தூங்குவது, நடு இரவில் சாப்பிடுவது, அதிகமாக ஆல்கஹால் உட்கொள்வது, இப்படி எந்தப் பழக்கமும் இல்லாமல், நிம்மதியான உறக்கம் மட்டும் கொண்டவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் 1 லட்ச ரூபாய் உதவித்தொகை உண்டு. போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகை உண்டு. ஆனால், இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். Wakefit நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Wakefit இணையதளம்
Wakefit இணையதளம்
`அமேசான் காட்டில் நிலங்கள் விற்பனைக்கு...'- ஃபேஸ்புக்கில் விளம்பரம்! பின்னணி என்ன?

"தற்போது இருக்கும் காலத்தில் சரியான உறக்கம் என்பதே அரிதாகிவிட்டது. நடு இரவுதான் தற்போது தூங்குவதற்கான நேரமாக மாறிவிட்டது. தூங்கும் நேரமும் குறைந்துவிட்டது. தூக்கம் என்பது நமது உடல் நலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த ஆண்டு தூக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு இந்தத் திட்டத்தை நடத்துகிறோம்" என வேக்ஃபிட் நிறுவனத்தின் துணை-நிறுவனரான சைதன்யா ராமலிங்க கௌடா தெரிவித்துள்ளார்.

மேலும் தூக்கத்தை மட்டுமல்லாது, அது சார்ந்துள்ள காரணிகளான, உணவுப் பழக்கம், வேலைப்பளு, வாழ்வியல்முறை, உடல்நலம் ஆகியவற்றையும் சேர்த்துக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். நீங்களும் தூக்கத்தில் கும்பகர்ணன் என்றால் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பியுங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு