Published:Updated:

இரவுநேரத்தில் வன விலங்கு பூங்காவுக்குள் சென்றது ஏன்? சர்ச்சையில் `சத்குரு ஜக்கி வாசுதேவ்!'

சத்குரு ஜக்கிவாசுதேவ்
News
சத்குரு ஜக்கிவாசுதேவ்

பூங்காவின் பாதுகாப்புக்காக நிலம், கால்நடைகளைத் தியாகம் செய்து பல கஷ்டங்களை அனுபவித்துள்ளோம், ஆனாலும் சட்டங்களை மீறாமல் கடைப்பிடித்து வருகிறோம், ``வி.ஐ.பி-கள் சட்டங்களை அப்பட்டமாக புறக்கணிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது...

இரவுநேரத்தில் வன விலங்கு பூங்காவுக்குள் சென்றது ஏன்? சர்ச்சையில் `சத்குரு ஜக்கி வாசுதேவ்!'

பூங்காவின் பாதுகாப்புக்காக நிலம், கால்நடைகளைத் தியாகம் செய்து பல கஷ்டங்களை அனுபவித்துள்ளோம், ஆனாலும் சட்டங்களை மீறாமல் கடைப்பிடித்து வருகிறோம், ``வி.ஐ.பி-கள் சட்டங்களை அப்பட்டமாக புறக்கணிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது...

Published:Updated:
சத்குரு ஜக்கிவாசுதேவ்
News
சத்குரு ஜக்கிவாசுதேவ்

அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதிக்கரையோரம் காசிரங்கா வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா சமீபத்தில் திறந்து வைத்தார்.

ஈஷா அறக்கட்டளைத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், மாநிலத்தின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மூன்று நாள் `சிந்தன் ஷிவிர்' திறப்பு விழாவுக்கு காசிரங்காவில் இருந்தார்.

அப்போது, இரவில் சத்குரு ஜக்கி வாசுதேவ், முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா ஆகியோர் ஒரே காரில் இரவு பூங்காவுக்குள் வலம் வந்தனர். அந்த காரை ஜக்கி வாசுதேவ் ஓட்டிச் சென்றார்.

சத்குரு ஜக்கிவாசுதேவ், அஸ்ஸாம் அமைச்சர்கள்
சத்குரு ஜக்கிவாசுதேவ், அஸ்ஸாம் அமைச்சர்கள்

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறியதாகக் கூறி, அருகில்உள்ள  கிராமங்களில் வசிக்கும் மக்கள் நேற்று கோலாகாட் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அஸ்ஸாம் சூழல் ஆர்வலர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்த சோனேஸ்வர் நரா மற்றும் பிரபின் பேகு ஆகியோர், ``வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி , இரவில் பொதுமக்கள் யாரும் வனவிலங்கு பூங்காவுக்குள் செல்ல கூடாது. அது வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அந்தி வேளையில் வாகனத்தின் ஹெட்லைட்கள் எரியும் ஜீப்பில் வனத்துக்குள் செல்வது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972-ஐ மீறுவதாகும்.

சத்குரு ஜக்கிவாசுதேவ்
சத்குரு ஜக்கிவாசுதேவ்

எனவே விதிமுறைகளை மீறி, ஜீப்பில் சென்ற சத்குரு `ஜக்கி' வாசுதேவ், முதல்வர் சர்மா, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஜெயந்த மல்லா பருவா மற்றும் பலரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இல்லையெனில், சட்டத்தை மீறியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு பூங்காவுக்குள் நுழைந்து முகப்பு விளக்குகளை ஏற்றி ஜீப்பை ஓட்டியதற்காக சத்குரு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகார் அளித்த கிராம மக்கள் பேசியபோது, ``பூங்காவின் பாதுகாப்புக்காக நிலம், கால்நடைகளைத் தியாகம் செய்து பல கஷ்டங்களை அனுபவித்துள்ளோம். இருந்தாலும் வனவிலங்கு சட்டங்களை மீறாமல் கடைப்பிடித்து வருகிறோம், `வி.ஐ.பி-கள் சட்டங்களை அப்பட்டமாகப் புறக்கணிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது'' என்று தெரிவித்துள்ளனர்.

சத்குரு ஜக்கிவாசுதேவ்
சத்குரு ஜக்கிவாசுதேவ்

சமூக வலைதளங்களில் இது குறித்து சர்ச்சைகள் எழுந்தன. அதற்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா,

`இந்த விஷயத்தில் விதிமீறல் ஏதும் நடைபெறவில்லை. இரவு நேரங்களில் பூங்காவுக்கு பொதுமக்கள் செல்லக்கூடாது என்று சட்டம் இல்லை.' வனவிலங்கு சட்டத்தின்படி, இரவு நேரத்திலும் வார்டன் அனுமதி உடன் செல்லலாம். இரவில் மக்கள் பூங்காவுக்கு செல்ல தடை என எந்தச் சட்டமும் இல்லை. நாங்கள் பூங்காவை முறையாகத் திறந்து வைத்துள்ளோம். தற்போது சத்குருவும், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் வந்துள்ளனர். அவர்களின் வருகையால், இந்த முறை காசிரங்காவுக்கு சுற்றுலா சீஸன் சிறப்பாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.