Published:Updated:

அறுவைசிகிச்சையின்போது பாகுபலி-2 படம் பார்த்த பெண் நோயாளி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அறுவைசிகிச்சையின்போது பாகுபலி-2 படம் பார்த்த பெண் நோயாளி
அறுவைசிகிச்சையின்போது பாகுபலி-2 படம் பார்த்த பெண் நோயாளி

அறுவைசிகிச்சையின்போது பாகுபலி-2 படம் பார்த்த பெண் நோயாளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

 ஆந்திர மாநிலம், குண்டூரில் அறுவைசிகிச்சையின்போது பெண் நோயாளி, பாகுபலி-2 படம் பார்த்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அறுவைசிகிச்சையின்போது பாகுபலி-2 படம் பார்த்த பெண் நோயாளி


 

ஆந்திராவைச் சேர்ந்தவர் வினயா குமாரி. 43 வயதாகும் இவர், நர்ஸாகப் பணியாற்றி வந்தார். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட வினயா குமாரிக்கு மருத்துவப் பரிசோதனை நடந்தது. அப்போது, அவரின் மூளையில் கட்டியிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரின் மூளையில் அறுவைசிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த செப்டம்பர் 21-ம் தேதி வினயா குமாரிக்கு ஆந்திர மாநிலம் குண்டூரில் அறுவைசிகிச்சை நடந்தது. சிகிச்சையின்போது, நோயாளியான நர்ஸ் வினயா குமாரி, நினைவோடு இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கருதினர். இதுதொடர்பாக டாக்டர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, நோயாளி வினயா குமாரிக்குப் பிடித்த திரைப்படத்தை லேப்டாப்பில் ஒளிபரப்பலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி அறுவைசிகிச்சை நடந்த சமயத்தில் வினயா குமாரிக்கு பாகுபலி படம் திரையிடப்பட்டது. அதை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். அறுவைசிகிச்சை நடந்தபோது, படம் குறித்து டாக்டர்கள் வினயா குமாரியிடம் பேசினர். அதற்கு வினயா குமாரியும் படத்தில் வரும் பாடல்களைத் தெலுங்கில் பாடி அசத்தினார்.


 

அறுவைசிகிச்சையில் இடம் பெற்ற நரம்பியல் மருத்துவர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், "நோயாளி வினயா குமாரியின் மூளையிலிருந்த கட்டியை அறுவைசிகிச்சையின் மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த அறுவைசிகிச்சை மிக சிக்கலானது. ஏனெனில், அறுவைசிகிச்சையின்போது நோயாளி சுயநினைவோடு இருக்க பாகுபலி படத்தை நோயாளி பார்க்க ஏற்பாடு செய்தோம். சுமார் ஒன்றரை மணி நேரம் அறுவைசிகிச்சை நடந்தது. முக்கால்வாசி படத்தை வினயா குமாரி பார்த்தார். அறுவை சிகிச்சையையும் வெற்றிகரமாக முடித்துள்ளோம். இந்த அறுவை சிகிச்சைக்கு 'பாகுபலி பிரைன் சர்ஜரி' என்று பெயரிட்டுள்ளோம்'' என்றார்.

 நோயாளி வினயா குமாரி, 'அறுவைசிகிச்சையின் நீண்ட நேரம் நடக்கும் என்பதால் பாகுபலி படம் முழுவதையும் பார்க்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால், படம் முடிவதற்குள் அறுவைசிகிச்சை முடிந்துவிட்டது' என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு, 37 வயதான இசையமைப்பாளர் ஒருவருக்கு மூளையில் அறுவைசிகிச்சை நடந்தபோது அவர், கிட்டார் வாசித்தது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு