Published:Updated:

"ஆண்களுக்கான தனி உலகம்தான் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது" - சமூக ஆர்வலர் ஓவியா!

"ஆண்களுக்கான தனி உலகம்தான் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது" - சமூக ஆர்வலர் ஓவியா!

"ஆண்களுக்கான தனி உலகம்தான் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது" - சமூக ஆர்வலர் ஓவியா!

"ஆண்களுக்கான தனி உலகம்தான் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது" - சமூக ஆர்வலர் ஓவியா!

"ஆண்களுக்கான தனி உலகம்தான் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது" - சமூக ஆர்வலர் ஓவியா!

Published:Updated:
"ஆண்களுக்கான தனி உலகம்தான் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது" - சமூக ஆர்வலர் ஓவியா!

மார்ச்-8. இன்று, உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் பெண்கள் அவரவர் துறைகளில் முன்னேற்றமடைந்து வருகிறார்கள். இன்னொரு பக்கம் அவர்களை சிலர் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

இதுபோன்ற நெருக்கடியான, கடினமான சூழ்நிலையிலும், பெண்கள் தங்களின் இலக்கை நோக்கிப் பயணித்து, வாழ்வில் வளர்ச்சியடைய என்ன செய்ய வேண்டும்? அவர்கள் வளர்ச்சியின் தற்போதைய நிலை எப்படி உள்ளது என்பது குறித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுத் தலைவர் வாசுகியிடம் பேசினோம். 

"நாட்டின் 70 ஆண்டு கால சுதந்திரத்தில் பெண்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அது மறுக்க முடியாத ஒன்று. பொதுவாக, ஆயுட்காலம், கல்வி எனப் பல துறைகளில் பெண்கள் முன்னேற்றமடைந்திருந்தாலும், அவற்றுக்குள் மட்டுமே பெண்களைச் சுருக்கிவிட முடியாது. பல விஷயங்களுடன் ஒப்பிட்டுப்  பார்த்தாலும், நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால், அங்கு வசிக்கும் சாமான்யர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் இடையே வளர்ச்சியின் குறியீடுகள் குறைந்துதான் உள்ளன. அந்தக் குறியீடுகள் மாற்றுத்திறனாளிகள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று பிரித்துப் பார்க்கும்போது, அவர்களின் வளர்ச்சி இன்னமும் குறைந்து காணப்படுகிறது. இதுபோன்று குறைந்த குறியீட்டில் உள்ள பெண்களின் வளர்ச்சியில் பெரிய முன்னேற்றம் இல்லை. 1910-ம் ஆண்டு மகளிர் தினத்திற்கான அறைகூவல் விடுத்தபோது, மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று

பெண்களுக்கான வாக்குரிமை, இரண்டு உலக சமாதானம், மூன்றாவதாக எட்டு மணி நேர வேலை ஆகியன. ஆனால், தற்போதைய காலத்திலும் இந்த மூன்று கோரிக்கைகளும் வெவ்வேறு வடிவத்தில் நிறைவேறாமல் இன்றும் தேவையாக இருக்கிறது.

அரசியலைப் பொறுத்தவரை, இந்தியாவில் மகளிருக்காக 33 சதவிகித இட ஒதுக்கீடு இன்னமும் கிடைக்கவில்லை. உலக சமாதானமும் இன்றளவும் நிறைவேறவில்லை. இலங்கையில் நடக்கும் பிரச்னையாக இருந்தாலும் சரி, சிரியாவில் நடக்கும் போராக இருந்தாலும் சரி, அதுபோன்ற சம்பவங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். அன்று 8 மணி நேர வேலை என்று தீர்மானித்தது. இப்போது அது முறையான, நிரந்தரமான வேலைகளைக் குறைத்துக்கொண்டே போகிற பொருளாதாரக் கொள்கைகள்தான் இருக்கின்றன. இந்தக் காலகட்டதில் வேலையின்மை மிக மோசமாக அதிகரித்துள்ளது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற மாற்றங்கள் வேலையின்மை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. எல்லோருக்கும் வேலை வேண்டும். ஆனால், பொருளாதார சுதந்திரம்தான் பெண் விடுதலைக்கான முன் நிபந்தனை. இதனால், பெண் விடுதலைக்கான பயணம் இன்னும் நீள்கிறது. அவர்களுக்கானப் போராட்டத்தை அவர்களே நடத்த வேண்டும். பெண்கள் அவர்களுடைய சுதந்திரத்திற்காகவும், உரிமைகளுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் இல்லாதது, உரிமைகள் மறுக்கப்படுவது, பொருளாதாரக் கொள்கைகள் இல்லாதது, பெண் சமத்துவத்துக்கான கருத்துகள் இல்லாதது போன்ற போராட்டங்களுக்கு அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்" என்றார்.

பெண்கள் வளர்ச்சிக்கு முக்கியமான விஷயமாக நீங்கள் எதைக் கருதுகிறீகள்? என்று சமூக ஆர்வலர் ஓவியாவிடம் கேட்டோம். "பெண் விடுதலைக்கான கோரிக்கை வைத்தபோது, பால்ய வயதில் திருமணம் கூடாது. கட்டாயக் கல்வி கொடுக்கப்பட வேண்டும். விதவைத் திருமணம் போன்றவை முன்வைக்கப்பட்டன. பெண்களின் திருமண வயது 18 என்று அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், இன்னமும் சில இடங்களில் குழந்தை திருமணங்கள் 20 முதல் 30 சதவிகிதம் வரை நடந்துகொண்டுதான் இருக்கின்றன. 

ஒரு பெண் மறுமணம் செய்துகொள்வது இன்றைக்கும் ஒரு பிரச்னைக்குரிய விஷயமாகத்தான் இருக்கிறது.  முன்பை விட

இப்போது மறுமணங்கள் ஓரளவு நடக்கின்றன. ஆனால், பெண்கள் அதற்காக நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியுள்ளது. இன்னும் விதவைத் திருமணங்களை சமூகம் முழுமையாக ஏற்றுகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இப்போது நிறையவே முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆண்களை விடவும் பெண்களின் கல்வியறிவு மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. இதில், குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம். ஆனால், வேலைவாய்ப்பைப் பார்க்கும்போது, எல்லா வேலைகளும் பெண்களுக்குச் சாத்தியமாகி விட்டதா என்றால், நிச்சயம் இல்லை. இது ஆண்களுக்கான வேலை என்று சில வேலைகள் ஒதுக்கப்படுகின்றன. 'ஆண்களுக்கான உலகம்' என்ற ஒன்று இப்போதும் தனியாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான சவாலாக இப்போது உருவாகியுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பை வைத்துக்கொண்டு பெண்கள் தங்களுடைய ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதில் இன்னும் 10 சதவிகிதம்கூட வளர்ச்சியடையவில்லை. சில பெண்கள் ஆளுமையை வளர்த்துக்கொள்வதையும், சுயநலமாக இருப்பதையும் குழப்பிக்கொள்கிறார்கள். ஒரு கட்டம் வரைக்கும் தனக்காகச் சிந்திப்பது, சுயநலமாக இருப்பது அவர்களுக்கு நல்லது. ஆனால், அதற்குள்ளேயே அவர்கள் தங்களைச் சுருக்கிக் கொண்டால் ஆளுமையை வளர்த்துக்கொள்வது கடினம். அதற்கான முயற்சியில் இனி பெண்கள் ஈடுபட வேண்டும். ஒருபெண் தன்னை வளர்த்துகொள்ள நினைத்தால், முதலில் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும், பொது விஷயங்களையும் தெரிந்துகொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும். ஒரு ஆண் பொது விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் காட்டும் ஆர்வம், பெண்களிடத்தில் இருப்பதில்லை. உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், முதலில் நாட்டிலும், உலகிலும் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்" என்றார்.

ஒரு பக்கம் பாராட்டுகளும், இன்னொரு பக்கம் வன்கொடுமைகளும் நிறைந்த சூழ்நிலையில், ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு உதவியாக இருந்தால் அது, இருவரும் வளர்ச்சியடைய வழிவகுக்கும். பெண்களின் வளர்ச்சிக்காக அவர்களுக்கு ஊக்கம் அளிக்காவிட்டாலும்கூட, அவர்களின் எதிர்காலக் கனவுகளைக் கலைக்கும் வகையிலான சொற்களைக் கூறி, வளர்ச்சியைத் தடுக்காமல் இருந்தாலே போதும் என்பதே இந்த மகளிர் தினத்தில் நாம் சொல்லும் சேதி.

உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்...!