Published:Updated:

``பெண்கள் வாழ்க்கை முழுக்க ஏதோவொரு வன்முறையை அனுபவிக்கிறார்கள்!" பாலிவுட் நடிகை தியா மிர்சா #MeToo #PayGap

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``பெண்கள் வாழ்க்கை முழுக்க ஏதோவொரு வன்முறையை அனுபவிக்கிறார்கள்!" பாலிவுட் நடிகை தியா மிர்சா #MeToo #PayGap
``பெண்கள் வாழ்க்கை முழுக்க ஏதோவொரு வன்முறையை அனுபவிக்கிறார்கள்!" பாலிவுட் நடிகை தியா மிர்சா #MeToo #PayGap

``பெண்கள் வாழ்க்கை முழுக்க ஏதோவொரு வன்முறையை அனுபவிக்கிறார்கள்!" பாலிவுட் நடிகை தியா மிர்சா #MeToo #PayGap

ஹாலிவுட்டில் பெரிதாக வெடித்த ஹார்வி வெய்ன்ஸ்டீன் பிரச்னைக்குப் பிறகு, பாலிவுட்டிலும் பாலியல் வன்முறைகுறித்த விவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலியல் வன்முறைகுறித்துப் பேசியிருக்கிறார், பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா. 'நடிகர்களுக்கு இணையான சம்பளம் என்பதைத் தாண்டி, கதாபாத்திரங்கள் எப்போது இணையாக வழங்கப்படுகின்றவனோ, அப்போதுதான் மாற்றம் தொடங்கும்' என்றும் சொல்லியிருக்கிறார். 

“இன்டஸ்ட்ரியில், பெண்களுக்கு எதிராகக் காட்டப்படும் வேறுபாடு குறித்துப் பேசவேண்டிய காலம் இது. பெண்களைச் சமமாக நடத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளாமல் மாற்றம் நிகழாது. இது, இரண்டு விஷயங்களை ஒன்றிணைப்பதன்மூலம் நடைபெறும். பெண்கள், அவர்களுடைய உரிமைகளுக்குக் குரல்கொடுக்க வேண்டும் மற்றும் பெண்களுடைய கதைகள் எழுதப்பட வேண்டும். பெண்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்படுவதற்கு, அவர்களுக்கு ஒதுக்கப்படும் சிறிய கதாபாத்திரமும் காரணம். 

ஒரு நடிகரின் பாப்புலாரிட்டியைப் பொறுத்து சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. அது, இருவருக்குமான சம வாய்ப்பை வழங்க வேண்டும். அந்தச் சமத்தன்மை என்பது நாம் நடந்துகொள்வதில் மட்டுமின்றி, கதை சொல்லும் விதத்திலும் இருக்க வேண்டும். கதைகளிலும் தேர்ந்தெடுக்கும் விஷயங்களிலும், நாம் எந்த வகையில் உறுதிப்படுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், ஆழமான பெண் கதாபாத்திரங்களுடன், நிறையப் படங்கள் வருகின்றன. இது போதாது. தொழில்நுட்பம் சார்ந்து, இயக்குநர்கள், கதாசிரியர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர் என்று பார்த்தால், பெண்களின் எண்ணிக்கை குறைவே. அங்கும் சமமின்மை இருக்கிறது. நான் சினிமாவுக்குள் வந்தபோது, தற்போது இருக்கும் தெளிவுகூட கிடையாது. எனக்கு ஒரு சம்பவம் இன்னமும் நினைவில் இருக்கிறது. ’ஒரு படத்தில் நடிக்க மாட்டேன்’ என்று கூறியபோது, ‘இந்தப் படத்தில் ஒரு பெரிய ஸ்டார் இருக்கிறார். உங்களுக்கு நான்கு பாடல்கள் இருக்கின்றன. ஏன் மறுக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். 

சமூக வலைதளங்கள், சமூக மாற்றங்களைக் கொண்டுவருவதில் மிகப்பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அது, நம் மனதைத் திறக்கவைத்திருக்கிறது. நம் நாட்டின் பெண்கள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விஷயங்களை அறிந்துவைத்திருக்கிறார்கள். அவர்களது உரிமையைத் தெரிந்துவைத்திருக்கிறார்கள். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் கனெக்ட் ஆகியிருக்கிறோம். ஹார்வி வெய்ன்ஸ்டீன் பிரச்னைக்குப் பிறகு #MeToo மற்றும் #TimesUp இயக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அது எதிரொலித்தது. சமூக வலைதளங்கள், நம்மை நிறையத் திடப்படுத்துகின்றன. 

பாலியல் வன்முறை, சினிமா இண்டஸ்ட்ரியில் மட்டுமின்றி, பயணம், அலுவலகம் என எல்லா இடங்களிலும் ஒவ்வொரு நாளும் கடந்துவரும் நிகழ்வு. நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, பள்ளிக்கு நடந்துசென்றபோதெல்லாம் கண்காணிக்கப்பட்டுள்ளேன், பின்தொடரப்பட்டுள்ளேன். ஆண்களும் பல நேரங்களில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தொடர்ச்சியான பாலியல் வன்முறைக்கு ஆளாவதில்லை. பெண்கள், அவர்களுடைய வாழ்க்கை முழுவதும், ஏதோ ஒரு வன்முறையைச் சந்திக்கிறார்கள்” என்று பேசியிருக்கும் தியா, சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட. ஐ.நாவிற்கான இந்தியாவின் நல்லெண்ணத்தூதுவராகவும் இருந்துவருகிறார்.

மேலும், “ஒவ்வொரு தனி மனிதரும் எப்படி மாற்றத்தை உருவாக்குபவராக இருக்க முடியும் என்பதை நான் அறிந்து வைத்திருக்கிறேன். நம் ஒவ்வொருவருடைய செயலும் அடுத்தவருடன் எவ்வளவு பிணைந்திருக்கிறது; சுற்றுச்சூழலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நான் அறிந்தே வைத்திருக்கிறேன். மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் பலரை இன்ஸ்பையர் செய்யும் அளவிற்கான வாய்ப்பு கிடைத்தும், நான் அதைச் செய்யாமல் போனால், நான் பயனற்றவளாக உணர்வேன்” என்றும் சுற்றுச்சூழல் குறித்த தன் அக்கறையை வெளிப்படுத்தியிருக்கிறார் தியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு