Published:Updated:

``முப்போகம் விளையும் பூமி, இன்று வெடித்துக்கிடக்கிறதே” காவிரிக்குள் இறங்கிப் போராடிய பெண்கள்

``முப்போகம் விளையும் பூமி, இன்று வெடித்துக்கிடக்கிறதே” காவிரிக்குள் இறங்கிப் போராடிய பெண்கள்
``முப்போகம் விளையும் பூமி, இன்று வெடித்துக்கிடக்கிறதே” காவிரிக்குள் இறங்கிப் போராடிய பெண்கள்

``முப்போகம் விளையும் பூமி, இன்று வெடித்துக்கிடக்கிறதே” காவிரிக்குள் இறங்கிப் போராடிய பெண்கள்

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி திருச்சியில் போராட்டங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. விவசாயிகள் முக்கம்பு, கல்லணை ஆகிய காவிரிப் பகுதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். மேலும், சிலதினங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், காவிரி வழக்கை அரசமைப்பு சட்ட ஆயத்துக்கு மாற்றக் கோரியும் திருச்சி அருகே உள்ள கல்லணையில் காவிரி உரிமை மீட்பு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடக்கும் என அறிவித்துள்ளார் பெ.மணியரசன்.

இந்நிலையில், திருச்சியில் காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி, சக்தி மகளிர் இயக்கம் சார்பில், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை காவிரி ஆற்றுப் பாலம் கல்லணை பிரிவு சாலை அருகில் உள்ள காவிரி ஆற்றுப் பாலத்தின் அடியில் அமர்ந்து, பெண்கள் குழந்தைகள், சமூக ஆர்வலர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். சக்தி மகளிர் இயக்கத் தலைவி லில்லியன் மேரி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், காவிரிக்காகக் கதறியபடியும், உருக்கமாக வேண்டியும் பாடல்கள் பாடினர். முப்போகம் விளையும் டெல்டா பகுதியை வறண்ட பூமியாக்கிய மத்திய அரசையும் மாநில அரசையும் கண்டித்து காவிரியைப் பெற்றுத்தராத அரசுகள், மணல் குவாரிகளை நடத்திக் கொள்ளையடிக்கலாமா எனக் கேள்வி எழுப்பினர்.

நம்மிடம் சக்தி மகளிர் இயக்கத் தலைவி லில்லியன் மேரி, என்னுடைய வயதுக்குக் காவிரியை இப்படி ஒரு மோசமான நிலையில் பார்த்ததில்லை. முப்போகம் விளையும் பூமி, இன்று வெடித்துக்கிடக்கிறது. அதை நினைத்தாலே கண்ணீரை அடக்க முடியவில்லை. விவசாயத்தைக் காப்பாற்ற காவிரி தமிழகம் வரணும், அதற்குக் காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டும்.அதேபோல் நிலத்தடி நீரை அழிக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் நடவடிக்கைகளை அரசுகள் எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டங்களை தடுக்க முடியாது. எங்கள் உயிரைக் கொடுத்தேனும் காவிரியைக் காப்போம்” என்றார் ஆவேசமாக.

அடுத்த கட்டுரைக்கு