சென்னை துரைப்பாக்கம் 200 அடி சாலையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் பிரியங்கா (வயது 24). ஆந்திராவைச் சேர்ந்த அவர் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆவார். பணியை முடித்துவிட்டு நேற்று மாலை, அந்த நிறுவனத்தின் 9-வது மாடிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து, துரைப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியங்கா தற்கொலை குறித்து உடனே, ஆந்திராவில் உள்ள அவரின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அவருடன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்த சக ஊழியர்களிடமும் போலீஸார் விசாரித்தனர். ஐ.டி பெண் ஊழியரின் தற்கொலை ஐ.டி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரியங்கா மரணத்துக்கு குடும்ப பிரச்னை காரணமா? காதல் பிரச்னையா ? வேலைப்பளு காரணமா? உயர் அதிகாரிகள் டார்ச்சரா? என்று பல கோணங்களில் துரைப்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.