Published:Updated:

''எனக்கு கல்யாணமாகிடுச்சு! '' - ஐ.டி லாவண்யா இப்ப திருமதி லாவண்யா

''எனக்கு கல்யாணமாகிடுச்சு! '' - ஐ.டி லாவண்யா இப்ப திருமதி லாவண்யா

மயக்கம் தெளிந்து கண் விழித்தவரை நேரில் சென்று சந்தித்தபோது, 'நான் இதிலிருந்து மீண்டு வருவேன். கல்யாணமும் பண்ணிப்பேன்' என்று கம்பீரமாகச் சொன்னார்.

''எனக்கு கல்யாணமாகிடுச்சு! '' - ஐ.டி லாவண்யா இப்ப திருமதி லாவண்யா

மயக்கம் தெளிந்து கண் விழித்தவரை நேரில் சென்று சந்தித்தபோது, 'நான் இதிலிருந்து மீண்டு வருவேன். கல்யாணமும் பண்ணிப்பேன்' என்று கம்பீரமாகச் சொன்னார்.

Published:Updated:
''எனக்கு கல்யாணமாகிடுச்சு! '' - ஐ.டி லாவண்யா இப்ப திருமதி லாவண்யா

ஐ.டி. ஊழியர் லாவண்யாவை நினைவிருக்கிறதா? சென்னை பெரும்பாகத்தில் பணி முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பியபோது, கொள்ளையர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டவர். வலது கையில் வெட்டு, தலையில் இரும்புக் கம்பியால் ரத்தம் சொட்ட சொட்ட தாக்கப்பட்டு, சாலை ஓரத்தில் மயங்கிக் கிடந்தார். இரவு ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர்  மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பிழைப்பது கடினம் என டாக்டர்கள் சொன்னார்கள். 'உயிர் பிழைத்தே ஆக வேண்டும்' என்கிற லாவண்யாவின் ஆழ்மன எழுச்சியே அவரை மீண்டெழச் செய்தது. மயக்கம் தெளிந்து கண் விழித்தவரை நேரில் சென்று சந்தித்தபோது, 'நான் இதிலிருந்து மீண்டு வருவேன். கல்யாணமும் பண்ணிப்பேன்' என்று கம்பீரமாகச் சொன்னார்.

மேலே சொன்ன சம்பவங்கள் எல்லாம் பிப்ரவரியில் நடந்தவை. சரியாக இரண்டரை மாதங்கள் கழித்து, லாவண்யாவிடமிருந்து 'ஹாய், எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு. விகடன் ஆஃபீஸ்ல எல்லோருக்கும் சொல்லிடுங்க' என்கிற மெசேஜ், வெட்க ஸ்மைலியுடன் வந்தது. போன் செய்தபோது, ''யெஸ் சாந்தி, எனக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சுடுச்சு. ஜூன் 27 மேரேஜ். அவர் பேரு ரவிச்சந்திரன். த்ரீ ஸ்டார் ஹோட்டலில் மேனேஜராக இருக்கார். நான் டிஸ்சார்ஜ் ஆகும்போது, 'அந்தக் கொள்ளையர்கள் என்னை செக்ஸூவல் அப்யூஸ் பண்ணலை. அப்படிச் செய்திருந்தாலும் அவங்க செய்த தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்க மாட்டேன். நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன்' என்று பிரஸ் மீட்டில் சொல்லியிருந்தேன். அதைக் கேட்டு இம்ப்ரஸ் ஆகி, அவரே மேரேஜ் புரப்போஸ் செய்தார்'' எனக் குரலில் வெட்கம் வழிய சொல்லியிருந்தார் லாவண்யா.

ரவிச்சந்திரன், ''எனக்கு லாவண்யாவின் தைரியம் பிடிச்சிருந்தது. அன்னிக்கு இரவு என்ன நடந்திருந்தாலும், அதைப் பற்றி கவலையில்லை. லாவண்யாவுக்கு வாழ்நாள் முழுக்க நான் துணையா இருக்கணும்னு நினைச்சுதான் மேரேஜ் பண்ணிக்க கேட்டேன்'' என்றார் பக்கா ஜென்டில்மேனாக.

நல்ல விஷயங்கள் எல்லாம் வேகமாகத்தானே நடக்கும். இதோ லாவண்யாவுக்கும் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் நடந்துவிட்டது. புதுமணத் தம்பதிகள் எப்படி இருக்கிறார்கள்? லாவண்யாவுக்கு போன் போட்டேன். 

''ஹேய்...'' என்று உற்சாகமாக நலம் விசாரித்துவிட்டுப் பேச ஆரம்பித்தார். ''மேரேஜ் முடிஞ்சு ஒரு வாரம் ஆயிடுச்சு. ரிலேட்டிவ்ஸ் வீடு, ஃப்ரெண்ட்ஸ் வீடுன்னு வரிசையா விருந்துக்கு போய்ட்டிருக்கோம். லைஃப் செம டேஸ்ட்டியா போய்ட்டிருக்கு'' என்று சிரித்தார். 

லாவண்யா அப்பாவுக்கு உடல்நலம் சற்று சரியில்லாததால், இன்னும் ஒரு வாரம் கழித்துதான் கேரளாவுக்கு ஹனிமூன் செல்ல திட்டமிட்டிருக்கிறார்களாம் புதுமணத் தம்பதியினர்.

அம்மா வீடு, மாமியார் வீடு, கணவர், வேலை நிமித்தமாகத் தனிக்குடித்தனம், அந்த நள்ளிரவு சம்பவத்தின் மிச்சமாக வலது கண்ணருகே இன்னும் மறையாத வடு, கொள்ளையர்கள் உடைத்த வலது கையின் வலி எனப்  பல விஷயங்களையும் ரிலாக்ஸாக பகிர்ந்துகொண்டார். ''நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அது எனக்குக் கல்யாணம் நடந்ததினால் மட்டுமில்லே. இன்னொரு விஷயமும் இருக்கு'' என்று சஸ்பென்ஸுடன் இடைவெளி விட்டு சொன்னார். 

''என்னை அந்தக் கொள்ளைக்காரங்க அடிச்சதினால் வயித்துல அடிப்பட்டிருக்குமோ, என் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருக்குமோ என மனசுக்குள்ளே ஒரு பயம் இருந்துச்சு. டாக்டர்கிட்ட செக்கப் பண்ணினேன். யூட்ரஸ்ல எந்த அடியும் படலைன்னு சொல்லிட்டாங்க. நான் அம்மாவானாலும் அதைத் தாங்கும் ஆரோக்கியத்தில் இருக்கேன்னு சொன்னாங்க. இதுபோதும் எனக்கு'' என்றார் உற்சாகத்துடன்.

விரைவில் அம்மாவாக வாழ்த்துகள் லாவண்யா!