Published:Updated:

11 வயதில் பாலியல் வன்கொடுமை... இப்போது மிஸ். வேர்ல்டு டைவர்சிட்டி! திருநங்கை நாஸ் ஜோஷி

11 வயதில் பாலியல் வன்கொடுமை... இப்போது மிஸ். வேர்ல்டு டைவர்சிட்டி! திருநங்கை நாஸ் ஜோஷி

``என் கற்பனைகளில் எப்போதும் நான் தலையில் ஒரு கிரீடத்துடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்துவருவேன். அது இவ்வளவு சீக்கிரம் நினைவாகும் என்று நினைத்துப் பார்க்கவில்லை''

11 வயதில் பாலியல் வன்கொடுமை... இப்போது மிஸ். வேர்ல்டு டைவர்சிட்டி! திருநங்கை நாஸ் ஜோஷி

``என் கற்பனைகளில் எப்போதும் நான் தலையில் ஒரு கிரீடத்துடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்துவருவேன். அது இவ்வளவு சீக்கிரம் நினைவாகும் என்று நினைத்துப் பார்க்கவில்லை''

Published:Updated:
11 வயதில் பாலியல் வன்கொடுமை... இப்போது மிஸ். வேர்ல்டு டைவர்சிட்டி! திருநங்கை நாஸ் ஜோஷி

டந்த சில வருடங்களாகவே திருநங்கைகள், தங்கள் திறமையால் பல்வேறு துறைகளிலும் வெற்றித் தடத்தை அழுத்தமாகப் பதித்துவருகிறார்கள். அதில், தானும் இணைந்திருக்கிறார், நாஸ் ஜோஷி. இவர், 2018-ம் வருடத்துக்கான `மிஸ்.வேர்ல்டு டைவர்சிட்டி' அழகிப் போட்டியின் டைட்டில் வின்னர். 

திருமணமாகாத இளம்பெண்கள், திருமதிகள், சிறுமிகள், திருநங்கைகள் என அனைவரும் கலந்துகொள்ளும் இந்த அழகிப் போட்டி, வருடந்தோறும் ஜூலை மாதம் துபாயில் நடைபெறும். கலாசார ஒருங்கிணைப்பை வளர்ப்பதற்காக நடக்கும் இந்தப் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு திருநங்கை வென்றிருப்பது இதுவே முதல் முறை. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த அழகிப் போட்டியில், 22 பெண்களைக் கடந்து வென்றிருக்கிறார் நாஸ் ஜோஷி. வெற்றிக் களிப்பில் மலர்ந்த ரோஜாவாக வலம்வந்துகொண்டிருக்கும் நாஸ், இந்தச் சாதனைக்குக் கடந்துவந்த பாதையில் சந்தித்த முட்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் நாஸ் எதிர்கொண்ட விதம், அனைவருக்குமான தன்னம்பிக்கைப் பாடங்கள்.

பிறப்பில் ஆணான நாஸிடம், 7 வயதிலேயே பெண் தன்மை தெரிய ஆரம்பித்துள்ளது. இதை மிகப்பெரிய அவமானமாகக் கருதிய அவருடைய பெற்றோர், மும்பையில் இருக்கும் சொந்தக்காரர் வீட்டுக்கு நாஸை அனுப்பி (ஒளித்து) வைத்தார்கள். அங்கும் மனிதர்கள்தானே இருக்கிறார்கள். கேலி, அவமானங்கள் விரட்ட, அதன் உச்சகட்டமாக 11-வது வயதில் சொந்தக்காரர்களாலேயே பாலியல் வன்கொடுமையும் செய்யப்படுகிறார் நாஸ். அந்த நொடியில்தான், தான் ஒரு பெண், தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்கிற உணர்வு நாஸுக்கு வருகிறது. அந்தப் பாதுகாப்பு தன் சொந்தக்காரர் வீட்டில் கிடைக்காது என்பதும் புரிகிறது. வீட்டைவிட்டு வெளியேறுகிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படிப்புக்கும் சாப்பாட்டுக்கும் சம்பாதிக்க வேண்டுமே. பார்களில் நடனம் ஆடுகிறார், பியூட்டி பார்லர்களில் வேலை பார்க்கிறார். தன் கல்லூரிப் படிப்பை முடிப்பதற்குள், கல்லூரி மற்றும் வெளியிடங்களில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடிப் போராடியே களைத்துப் போகிறார் நாஸ். 

ஒரு வழியாகப் படிப்பு முடிந்ததும், இந்தியாவில் டாப் ஃபேஷன் டிசைனர்களிடம் வேலை பார்க்கிறார். அங்கும் சில ஆண்களால் பாலியல் தொல்லை. அங்கிருந்தும் வெளியேறுகிறார். இந்த நேரத்தில்தான், மூன்றாம் பாலினத்தவர்களை அங்கீகாரம் செய்து, தீர்ப்பு வழங்குகிறது, உச்ச நீதிமன்றம். நாஸின் சிறகுகளுக்குப் புது வலிமை கிடைக்கிறது. பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார். `ஆஸியா ஜோஷி' என்று பெயரையும் மாற்றிக்கொள்கிறார். தன் சிறு வயது கனவான மாடலிங் துறையில், அடியெடுத்து வைக்கிறார். அவருடைய அழகும் அதற்குக் கைகொடுக்கிறது. 

``என் கற்பனைகளில் எப்போதும் நான் தலையில் ஒரு கிரீடத்துடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்துவருவேன். அது இவ்வளவு சீக்கிரம் நினைவாகும் என்று நினைத்துப் பார்க்கவில்லை'' - `மிஸ்.வேர்ல்டு டைவர்சிட்டி' பட்டம் வென்றதும், புன்னகையுடன் நாஸ் உதிர்த்த முதல் வார்த்தை இது.

`` `மிஸ்.வேர்ல்டு டைவர்சிட்டி' அழகிப் போட்டியில் கலந்துகொள்வதற்கான அப்ளிகேஷனை நான் சப்மிட் செய்த நொடியிலிருந்தே, எனக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஆதரவுக்  குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. நடுவர்கள் மட்டுமன்றி, என்னுடன் போட்டியில் பங்கேற்ற சக அழகிகளும் என்னை உற்சாகப்படுத்தியதை நான் மறக்கவே மாட்டேன்'' என நெகிழும் ஆஸியா (நாஸ்) ஜோஷி, ``என் பெற்றோர் இப்போதுதான் என்னைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். என்னுடைய இந்த வெற்றியை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். இதைவிட ஒரு மகளாக வேறென்ன வேண்டும்'' என்கிறார், கண்களில் வழியும் ஆனந்தக் கண்ணீரைத் துடைத்தபடி...

படங்கள்: https://www.facebook.com/naazjoshee

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism