Published:Updated:

மண் சரிந்து நான்கு பெண்கள் பலி: அ.தி.மு.க. ஊராட்சிமன்ற தலைவர் தலைமறைவு!

மண் சரிந்து நான்கு பெண்கள் பலி: அ.தி.மு.க. ஊராட்சிமன்ற தலைவர் தலைமறைவு!
மண் சரிந்து நான்கு பெண்கள் பலி: அ.தி.மு.க. ஊராட்சிமன்ற தலைவர் தலைமறைவு!

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது பட்டனம் கிராமம் இங்கே வேலைக்கு உணவு திட்டத்தில் பணிக்குச் சென்ற 4 பெண்கள் மண் சரிந்து பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது,

மண் சரிந்து நான்கு பெண்கள் பலி: அ.தி.மு.க. ஊராட்சிமன்ற தலைவர் தலைமறைவு!

பட்டனம் கிராமத்தைச் சேர்ந்த‌ 120 பேர் தினமும்  வேலைக்கு உணவு திட்டத்தில் பணிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேலானவர்களை அந்தக் கிராமத்தின் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தனது சொந்த வேலைகளை கவனிக்க பயன்படுத்தி வந்திருக்கிறார்.

பூமிக்கு அடியில் சுரங்கம் போல் அமைத்து, அதற்குள் இருக்கும் மண்ணை அள்ளுவதற்கு வேலைக்கு உணவு திட்டத்திற்கு வந்த பெண்களை பயன்படுத்தி இருக்கிறார் முருகேசன்.

மண் சரிந்து நான்கு பெண்கள் பலி: அ.தி.மு.க. ஊராட்சிமன்ற தலைவர் தலைமறைவு!

தினமும் 20 பேர் என கடந்த மூன்று  மாதங்களாக 15 அடி ஆழத்திற்கு மண்ணை அள்ளி இருக்கிறார்கள்.  இன்று காலையும்  பெண்கள் அந்த சுரங்கத்திற்கு சென்று மண் அள்ளிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாரம் தாங்காமல் மேலே இருந்த மண் அவர்கள் மீது சரிந்துள்ளது.

##~~##
இதில் 7 க்கும் மேற்பட்டோர் சரிந்த மண்ணுக்குள் புதையுண்டனர். இவர்களில்  நான்கு பேர் அந்த இடத்திலேயே பலியாகிப் போனார்கள். மற்ற மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். 
பெண்கள் பலியானதற்கு காரணம் ஊராட்சி மன்ற தலைவர்தான் என ஊர்மக்கள் பிரச்னையை கிளப்பியதை அடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமறைவு ஆகி இருக்கிறார். நான்கு பெண்களை பலிகொண்ட துயரம் பட்டனம் கிராமத்தை பதறவைத்திருக்கிறது.

-  செய்தி & படம்:
நந்தக்குமார்