Published:Updated:

நான்காவதும் பெண் குழந்தை என சந்தேகம்! - கருக்கலைப்பு செய்த 7 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

உசிலம்பட்டி அருகே கருக்கலைப்பு செய்ய முயன்றபோது 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த உத்தப்புரத்தைச் சேர்ந்தவர்  ராமர். இவரின் மனைவி ராமுத்தாய். இந்தத் தம்பதிக்கு 3 மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில் ராமுத்தாய் மீண்டும் கர்ப்பமானார். இதனிடையே, நான்காவது குழந்தையும் பெண் குழந்தையாக இருக்குமோ என்று எண்ணி கருக்கலைப்பு செய்ய முற்பட்டதாகத் தெரிகிறது. அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்த ராமுத்தாய், கருவை கலைக்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து தொட்டப்பநாயக்கணூரில் உள்ள செவிலியர் லட்சுமியை நாடிய ராமுத்தாய், கருவை கலைக்கும்படி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ராமுத்தாய் கருவை கலைக்க செவிலியர் லட்சுமி இன்று முயன்றுள்ளார். அப்போது, தவறான சிகிச்சையால் ராமுத்தாய் உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீஸார் செவிலியர் லட்சுமியைக் கைது செய்து விசாரணை செய்து மேற்கொண்டு வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உசிலம்பட்டி பகுதியில் கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுவை கொலை செய்தும் வழக்கம் முற்றிலும் குறைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism