Published:Updated:

`மருந்து ஆலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்’ - கண் இமைக்கும் நேரத்தில் 3 பேர் சுட்டுக்கொலை

`மருந்து ஆலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்’ - கண் இமைக்கும் நேரத்தில் 3 பேர் சுட்டுக்கொலை
`மருந்து ஆலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்’ - கண் இமைக்கும் நேரத்தில் 3 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் மருந்து ஆலையில் பெண் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் ஹார்போர் கவுண்டி நகரில் ரைட் ஏய்ட் (Rite Aid) என்ற மருந்து ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1,000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆலைக்குள் நுழைந்த பெண் ஒருவர் தான் கொண்டு வந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். இந்தத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தத் தாக்குதல் நடத்திய பெண் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்தப்பெண் குறித்து முழுமையான தகவல்கள் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தாக்குதல் நடத்திய பெண் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறாரா அல்லது அப்பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்தாரா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அந்தப்பெண் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியைக் கொண்டு துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.