Published:Updated:

`குட் மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்..!’-  விமானம் ஓட்டிய துபாய் இளவரசிக்கு லைக்ஸ் மழை

`குட் மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்..!’-  விமானம் ஓட்டிய துபாய் இளவரசிக்கு லைக்ஸ் மழை
`குட் மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்..!’-  விமானம் ஓட்டிய துபாய் இளவரசிக்கு லைக்ஸ் மழை

அரபு நாடுகளில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலை மாறி, பெண்கள் மேம்பாட்டில் அதீத கவனம் செலுத்தி வரும் சூழல் உருவாகி வருகிறது. சமீபத்தில், சவுதியில் பெண்கள் கார், விமானம் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது.


 

கடந்த 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) முதல் பெண் விமானியான மரியம் அல் மன்சோவ்ரி எப்.16 போர் விமானத்தை இயக்கி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரபு மண்ணில் நிகழ்ந்த பெரும் புரட்சியாகப் பார்க்கப்பட்டது. மேலும்,  மரியம் 2007-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் படையில் இணைந்து தற்போது விமானப்படை கமாண்டராக உள்ளார். மேஜர் மரியம் என்று அவரை அனைவரும் அழைக்கின்றனர். 


மேஜர் மரியம்..

பெண்கள் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களையும் பல்வேறு துறைகளில் சாதிக்க ஊக்கப்படுத்தி வருகிறது. பொதுவாக அரசக் குடும்பத்துப் பெண்கள் படித்திருந்தாலும் வேலைக்குச் செல்லமாட்டார்கள். இந்த நிலை இப்போது தலைகீழாகிவிட்டது. துபாய் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ஷைக்கா மொசாஹ் அல் மக்மூம்  (Shaikha Mozah Al Maktoum) என்னும் பெண், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் பெண்  கமர்ஷியல் பைலட் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். ஷைக்கா குடும்பத்தினர் இதை விழாவாகக் கொண்டாடினர். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாவில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்தன. அவர் தன் படிப்பை முடித்து பணியில் சேர்ந்தது 2017-ல் என்றாலும் அவர் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டது இந்த ஆண்டுதான். 


 

நேற்று மாலை ஷைக்கா துபாயில் இருந்து இத்தாலி சென்ற விமானத்தை இயக்கினார். அப்போது அவர் விமானிகளிடம் மைக் மூலம் உரையாடுவதை அவரின் சக ஊழியர் வீடியோ எடுத்தார். அதை ஷைக்கா இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். இன்ஸ்டாவில் பகிர்ந்து சில நிமிடங்களில் லைக்ஸ் கொட்டியது. வைரல் ஆனது. அந்த வீடியோவில் ஷைக்கா..  `குட் மார்னிங் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்.. நாம் இப்போது 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்.இன்னும் சிறிது நேரத்தில் மிலன் விமான நிலையம் சென்றடைவோம்’ என்கிறார்.


 

இந்த வீடியோவுக்கு அவ்வளவு பாசிடிவ் கமெண்ட்ஸ். ‘ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஆளும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த ஷைக்கா அரபு நாடுகளில் உள்ள  அனைத்துப் பெண்களுக்கும் முன் உதாரணம்’, `இளவரசி வானத்தில் பறக்கிறாள்’ இவ்வாறு துபாய் மக்கள் வர்ணித்துத் தள்ளினர். அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு..