Published:Updated:

“சலுகை வேண்டாம்... மரியாதை வேண்டும்!” - உடன்பிறப்புகளின் சாதனைப் பயணம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“சலுகை வேண்டாம்... மரியாதை வேண்டும்!” - உடன்பிறப்புகளின் சாதனைப் பயணம்
“சலுகை வேண்டாம்... மரியாதை வேண்டும்!” - உடன்பிறப்புகளின் சாதனைப் பயணம்

கரை சேர்த்த கல்விகு.ஆனந்தராஜ் - படங்கள் : எம்.உசேன்

பிரீமியம் ஸ்டோரி

“நாங்க மூணு பேரும் பிறக்கும்போதே பார்வைத்திறனை இழந்தவங்க. சின்ன வயசுல அதைப்பற்றி எங்களுக்கிருந்த கொஞ்சம் வருத்தமும்கூட இப்போ இல்லை. அதுக்கு ரெண்டு காரணங்கள் இருக்கு. எங்களைவிட பெரிய பாதிப்புகளுடன் அசாத்திய சாதனை செய்ற வங்களை எங்களுக்கு முன்னுதாரணமா எடுத்துக்கிறோம். எங்களோட முன்னேற் றம் சக மாற்றுத்திறனாளி களுக்கும் உத்வேகம் கொடுக் கிற மாதிரி வாழணும்னு நினைக்கிறோம்’’ - 200% பாசிட்டிவிட்டியுடன் பேசுகிறார்கள் வெங்க டேஸ்வரி, முத்துச்செல்வி மற்றும் மணி. மூவரும் சகோதர சகோதரிகள். பார்வைத்திறனை இழந்த இவர்கள் மூவருமே இன்று வங்கிப் பணியிலிருக்கிறார்கள். சென்னை அம்பத்தூரி லுள்ள முத்துச்செல்வியின் இல்லத்தில் உடன்பிறப்பு களைச் சந்தித்துப் பேசிய உற்சாகத் தருணத் திலிருந்து... 

“சலுகை வேண்டாம்... மரியாதை வேண்டும்!” - உடன்பிறப்புகளின் சாதனைப் பயணம்

“நாங்க பிறந்து வளர்ந்த தெல்லாம் சென்னை. அப்பா, அம்மாவுக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை. ஆனா, நாங்க மூணு பேரும் அம்மாவின் கருவில் வளரும்போதே ‘ரெட்டினைட்டிஸ் பிக்மென்டோசா’ (Retinitis Pigmentosa) என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டதால, பிறக்கும்போதே பார்வைத்திறனின்றித்தான் பிறந்தோம். எங்களோட சிகிச்சைக்காக அப்பாவும் அம்மாவும் பட்ட கஷ்டங்கள் நிறைய. ஒருகட்டத்தில், `எந்தச் சிகிச்சையும் பயன்தராது’னு அவங்க புரிஞ்சுக்கிட்ட நொடியில், எங்க குறைபாட்டை வெல்லும் வகையில் இந்த வாழ்க்கையை வாழ எங்களுக்குக் கத்துக்கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க’’ என்கிறார் வெங்கடேஸ்வரி.

மூவரும் சென்னை, தேனாம் பேட்டையிலுள்ள திருமலர் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் படித்திருக்கிறார்கள். ‘`படிப்புதான் எங்களைக் கரைசேர்க்கும்னு அதில் முழு உழைப்பைக் கொடுத்தோம்’’ என்ற வெங்கடேஸ்வரி, ‘`நான் ப்ளஸ் டூ முடிச்சுட்டு குஜராத்துல ‘டிப்ளோமா இன் பிசியோதெரபி’ கோர்ஸ் படிச்சுட்டு அதே ஃபீல்டுல அங்கேயே கொஞ்ச காலம் வேலைபார்த்தேன். அப்புறம் சென்னைக்கு வந்து கரஸ்ல பி.ஏ படிச்சுட்டிருந்த நேரம், பேங்க் எக்ஸாம் எழுதினேன். 2009-ல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியாவுல கிளெரிக்கல் வேலை கிடைச்சது. அந்த வேலையைப் பார்த்துட்டே புரொமோஷனுக்காக டிபார்ட்மென்ட் எக்ஸாம் எழுதி,  அசிஸ்டென்ட் மேஜனருக்கான பரீட்சையில் தேர்வானேன். கடந்த ஒரு வருஷமா தாம்பரம் ரீஜினல் ஆபீஸ்ல வேலைபார்த்துட்டிருக்கேன்’’ என்பவருக்கு 2011-ல் திருமணம் முடிந்திருக்கிறது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார் அவர் கணவர். ‘`என் வீட்டுக்காரர் நார்மலானவர் தான். யு.கே.ஜி படிக்கிற என் பையன் சாய் நிஷாந்த்தைப்போல என்னையும் ஒரு குழந்தையா பார்த்துக்கிறார்’’ எனும்போது வெட்கம்பூக்கிறது வெங்கடேஸ்வரிக்கு. “ஹலோ... ஜூனியர்ஸும் கொஞ்சம் பேசிக்கிறோம் சிஸ்டர்’’ என அக்காவைக் கலாய்த்தபடியே ஆரம்பிக்கிறார் முத்துச் செல்வி.

“சின்ன வயசுல எல்லோரையும்போல எங்களால வெளியே ஓடியாடி விளையாட முடியாதுன்னாலும், வீட்டுக்குள்ளேயே நிறைய விளையாட்டுகள், பகிர்தல்கள், சிரிப்புக் கச்சேரிகள்னு எங்களுக்கு மகிழ்ச்சித் தருணங்களுக்குக் குறைவில்லை. ப்ளஸ் டூ முடிச்சுட்டு நான் அஞ்சு வருஷ பி.ஏ.பி.எல் கோர்ஸ்ல சேர்ந்தேன். இன்று பார்வையில்லாதவர்களின் படிப்புக்குக் கைகொடுக்க நிறைய தொழில்நுட்பங்கள் வளர்ந்துடுச்சு. ஆனா, அப்போ எங்களுக்குப் படிக்கிறது ரொம்பச் சவாலான விஷயமா இருந்துச்சு. படிப்பை முடிச்சதும் ஒரு வருஷம் கார்ப்பரேட் கம்பெனியில வேலைபார்த்தேன். பிறகு ரிசைன் பண்ணிட்டு, நானும் பேங்க் எக்ஸாமுக்குப் படிக்க ஆரம்பிச்சேன்.  

“சலுகை வேண்டாம்... மரியாதை வேண்டும்!” - உடன்பிறப்புகளின் சாதனைப் பயணம்

2010-ம் வருஷம் அலகாபாத் பேங்க்ல புரொபேஷனரி ஆபீஸரா வேலையில் சேர்ந்து, தொடர்ந்து டிபார்ட்மென்ட் எக்ஸாம் எழுதி, போன வருஷம் மேனேஜர் போஸ்ட்டிங் எக்ஸாம்ல தேர்வானேன். இப்போ அலகாபாத் பேங்க், அயனாவரம் பிராஞ்ச் மேனேஜரா வேலைபார்க்கிறேன். கரஸ்ல எம்.எல் படிச்சுட்டிருக்கேன். போன வருஷம்தான் எனக்குக் கல்யாணமாச்சு. கணவர் பாண்டியராஜ்... இண்டியன் பேங்க், அம்பத்தூர் பிராஞ்சுல கிளெரிக்கல் அசிஸ்டென்ட்டா வேலைபார்க்கிறார். அவருக்கும் பார்வைத்திறனில்லை. சக மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமா, வழிகாட்டியா இருக்கணும் என்ற எண்ணத்தில் கரம்பிடித்த நாங்க, அதை நோக்கிப் பயணிச்சுட்டிருக்கோம்” என்ற முத்துச்செல்வி, “அடுத்து அமைதிக்குப் பெயர்பெற்ற எங்க அன்புத் தம்பி மணி பேசப் போறார்” எனச் சொல்ல, சிரித்தவாறே தொடர்கிறார் மணி.

“அக்கா ரெண்டு பேரும் இந்தப் பிரச்னையால்பட்ட கஷ்டங்களைக்கூட நான் படாத அளவுக்கு அவங்க எனக்கு  நிறைய தற்சார்பு வாழ்க்கைப் பாடங்களும் நம்பிக்கையும் உத்வேக மும் கொடுத்தாங்க. நான் பி.ஏ சோஷியாலஜி முடிச்சுட்டு, அக்காக்களைப்போல பேங்க் எக்ஸாம் எழுதி கிளெரிக்கல் அசிஸ்டென்ட்டா ஸ்பென்ஸர் டவர் கனரா பேங்க்ல வேலையில் சேர்ந்தேன். என் மனைவி இசக்கியம்மாள் நார்மலானவங்கதான். என்னோட முழு பலமா இருக்காங்க. சென்னை பொத்தேரியில அக்கா வெங்கடேஸ்வரி, பெற்றோர்னு எல்லோரும் கூட்டுக்குடும்பமா வசிக்கிறோம். அக்காக்களோட சேர்ந்து உட்கார்ந்து பேசும்போதெல்லாம், நாங்க கடந்துவந்த பாதைகளிலிருந்த சவால்களை வென்றதைப் பெருமை யோட நினைவுகூர்வோம். அதை விட முக்கியமா, அடுத்தகட்ட முன்னேற்றத்துக்கு என்னவெல்லாம் செய்யணும்னு ஒருத்தருக்கு ஒருத்தர் ஆலோசனைகள் சொல்லிக்குவோம்’’ என மணி சொல்ல, இருள் கிழித்துச் சிறகடித்துக்கொண்டிருக்கும் அந்தப் பறவைகளின் உத்வேகமும் உரமும் நம்மை ஆச்சர்யப்படுத்தின.

“போலீஸ் டிபார்ட்மென்ட்ல கான்ஸ்டபிளா தன் பணியைத் தொடங்கின எங்கப்பா, ஆறு வருஷங்களுக்கு முன்னாடி சப்-இன்ஸ்பெக்டரா பணி ஓய்வு பெற்றார். ஆரம்பகாலத்துல எங்க கண் சிகிச்சைகளுக்காக நிறைய செலவு செய்தார். ஆனா, அதைப்பற்றி எங்ககிட்டயோ, மத்தவங்ககிட்டயோ ஒரு நாளும் பட்டியலிட்டதில்லை; புலம்பினதில்லை. ‘வறுமையிலயும், பார்வையில்லாத நிலையிலும் மூணு பிள்ளைகளையும் படிக்கவெச்சு, நல்லபடியா கல்யாணம் செய்து வெச்சுட்டீங்க’னு பலரும் எங்க பெற்றோரைப் பாராட்டுவாங்க. ‘அவங்களோட சுயமுயற்சிகளுக்கு முன்னால, நாங்க அவங்களுக்காகச் செஞ்சதெல்லாம் சின்ன விஷயங்கள்தான்’னு எல்லா புகழையும் எங்களுக்கே கொடுக்க நினைப்பாங்க. ஆனா, வெளிக்காட்டலைன்னாலும் கால் நூற்றாண்டுக்கும் மேலா அவங்க படுற கஷ்டங்களை நாங்க அறிவோம். இன்னிக்கு எங்களோட வெற்றி அவங்களோட மனசுக்கு மருந்தா, மகிழ்ச்சியாயிருக்கும்ல..?!’’ என்று முத்துச்செல்வி நெகிழ, மூவருக்குமே கண்கள் பனிக்கின்றன.

“நான் ஒரு விஷயம் சொல்லியாகணும்” என்று தொடர்கிறார் வெங்கடேஸ்வரி. “எங்க குறைபாட்டை நாங்க சாபமாவோ, அவமானமாவோ நினைக்கல. சின்ன வயசுலேருந்து இப்போவரை ஸ்டிக் பயன்படுத்தி தனியாவே வெளியே போயிட்டு வர்றோம். JAWS (Screen Reader) சாஃப்ட்வேர் மூலமா எங்க அலுவலகப் பணிகளைச் சுயமா செய்றோம். ஆனா, இந்தச் சமுதாயம்தான் எங்களோட இயலாமையை அப்பப்போ நினைவுபடுத்தி காயப்படுத்திட்டேயிருக்கு. மாற்றுத்திறனாளிகள்னு எங்களைப் புறக்கணிக்காதீங்க, பரிதாபப்பட்டுச் சலுகைகளும் வழங்காதீங்க. சக மனுஷங்களுக்கான மரியாதையை எங்களுக்கும் கொடுங்க. இதுதான் நாங்க உங்ககிட்ட வேண்டிக்கிறது’’ என வெங்கடேஸ்வரி சொல்ல, ஆமோதித்து தலையசைக்கிறார்கள் முத்துச்செல்வியும் மணியும்.

முத்துச்செல்வியின் 24 மணி நேரம்...  பார்க்க பக்கம் 98-ல்

சேவையும் செய்கிறார் முத்துச்செல்வி!

கட
ந்த ஏழு வருடங்களாக ‘அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பி’ன் தென்னிந்தியச் செயலாளராக இருக்கிறார் முத்துச்செல்வி. ‘`எங்க அமைப்பின் மூலமா பிரெய்லி புத்தகங்கள் தயாரிப்புப் பணியில் கவனம் செலுத்துறதோடு, பார்வையற்ற பெண்களுக்கான தன்னம்பிக்கை வகுப்புகள், சுயமுன்னேற்றப் பயிற்சி உள்ளிட்ட இதர சேவைகளையும் வழங்கிட்டிருக்கேன்” என்கிறார் கம்பீரமாக.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு