Published:Updated:

ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?

ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?
பிரீமியம் ஸ்டோரி
ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?

அவள் விருதுகள்நித்திஷ், படங்கள்: விகடன் டீம்

ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?

அவள் விருதுகள்நித்திஷ், படங்கள்: விகடன் டீம்

Published:Updated:
ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?
பிரீமியம் ஸ்டோரி
ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?
ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?

திறமைக்கு மரியாதை செலுத்தும் விகடனின் மற்றுமொரு பெருமைக்குரிய முன்னெடுப்பு ‘அவள் விருதுகள்!’  இலக்கியம், மருத்துவம், சமூகம், கலை, அரசியல் எனப் பல துறைகளிலும் முத்திரை படைத்த மனிதிகளின் சங்கமத்தால் நிரம்பியது, நிறைந்தது ‘சென்னை வர்த்தக மையம்’ வளாகம். அர்த்தபூர்வமான கணங்களின் சில துளிகள்...

* விழாவைத் தொகுத்து வழங்கியது  ராஜவேலுவும் தொகுப்பாளினி நட்சத்திராவும்.

ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?

பின்னணிப் பாடகி, பிரமாதமான நடிகை, இசையமைப்பாளர் என எக்கச்சக்க அவதாரங்கள் எடுத்த ஆண்ட்ரியா, விழாவில் எடுத்தது ஆளை அசத்தும் மோகினி அவதாரம். பட்டுச் சரிகையில் மின்னிய அவரை கேமரா ஃபோகஸ் செய்யும் போதெல்லாம் விதவிதமான ஸ்மைலிகளை முகத்தில் தவழவிட்டார். ‘திரைத் திறமையாளர்’ விருது பெற மேடையேறியவரை ராஜவேல் ஏடாகூடக் கேள்விகளால் வம்பிழுக்க, ‘பேசாம நான் பாட்டுப் பாடிட்டே போயிடுறேங்க’ என வெள்ளைக்கொடி காட்டினார். ‘இதுவரை இல்லாத உறவிது...’ என அவர் தொடங்கியவுடன் அரங்கில் இருந்த எனர்ஜி மேலும் எகிறியது.

ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?
ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?

‘டார்லிங் ஆஃப் தமிழ்நாடு’ விருது பெற தன் டிரேடுமார்க் சிரிப்புடன் மேடையேறினார் ஓவியா.  பின்னணியில்  ‘ஓவியா தேசிய கீத’மான ‘கொக்குநெட்ட கொக்கு’ ஒலிக்க மேடையேறியவரை இழுத்து அணைத்துக் கொண்டார் ஸ்ரீப்ரியா. ‘இந்த டார்லிங்கிற்கு அவார்டு கொடுக்க விடியவிடிய வெயிட் பண்ணக்கூட ரெடி’ எனப் பாசம் கொட்டியவர், தொகுப்பாளர்களுக்கு வேலையே வைக்காமல் ஓவியாவோடு கேள்வி பதில் விளையாட்டில் இறங்கிவிட்டார். ‘சினிமாவைவிட டிவியில வந்தப்போதான் உங்களை நிறைய பேருக்குப் பிடிச்சது. எதனால அப்படி?’ என ஸ்ரீப்ரியா கேட்க, ‘சினிமாவுல நடிச்சேன், ஷோவுல நடிக்கலை’ என ஓவியா கொடுத்த பன்ச்சுக்குக் கைத்தட்டல்கள் அள்ளின.   

சிரிப்பும் கேலியும் நிறைந்திருந்த அரங்கு மொத்தமும் மெய்சிலிர்த்த தருணம் ஒன்றுண்டு. அது... 60 ஆண்டுகளுக்கும் மேலாகத்   தமிழர்களைக் கட்டிப்போட்டிருக்கும் மந்திரக்குரலுக்கு மரியாதை செலுத்திய தருணம். ‘வாழும் சரித்திரம் இவர்! இவ்வளவு தெளிவான குரலும் உச்சரிப்பும் தமிழ்த் திரையுலகில் வேறு யாருக்குமே கிடையாது! இவர் போல இனி வேறொருவரில்லை!’ எனத் தழுதழுக்கும் குரலில் நடிகர் சிவகுமார் வரவேற்க, கம்பீரமாக மேடையேறினார் பி.சுசீலா. நடிகைகள் லதாவும் சச்சுவும் அமுதக்குரலாளுக்கு மாலை போட்டு மகுடம் சூட்ட, அதை ஆமோதிக்கும்வகையில் மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது. கைதட்டியவர்களுக்குப் பரிசாக சுசீலாம்மா தன் குரலில் ஒருசில பாடல்வரிகளைப் பரிசாகக் கொடுத்தார்.

ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?
ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?

தொகுப்பாளர் கோபிநாத் மைக் பிடிக்க, ‘நம்பிக்கை நாயகி’ விருதைத் தாங்கியபடி உணர்ச்சி மேலிடப் பேசினார் ப்ரீத்தி ஸ்ரீனிவாசன். ‘பொது இடங்கள்ல எங்களுக்கு ‘ரேம்ப்’ வசதி இல்ல. தியேட்டருக்கு என்னைத் தூக்கிட்டுப் போகணும். படம் பார்க்கப் போற இடத்துல நானே சினிமாவாயிடுறேன். நூலகங்கள்லகூட எங்களுக்கான வசதியில்லை.மாற்றுத்திறனாளிகள் படிக்கக்கூடாதுனு முடிவே பண்ணீட்டீங்களா?’ என வலி பொதித்து அவர் உதிர்த்த வார்த்தைகள் அரங்கத்தை மெளனத்தில் ஆழ்த்தின.

சோஷியல் மீடியாவில் பவுன்சராக எகிறிவந்த விமர்சனங்களையெல்லாம் சிக்ஸராக்கிப் பறக்கவிட்ட லக்ஷ்மி ப்ரியாவிற்கு ‘இணைய நட்சத்திரம்’ விருது வழங்கப்பட்டது. கலா மாஸ்டர், நிரோஷா கரங்களிலிருந்து விருது வாங்கியவருக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க் - ‘மொழி’ ஜோதிகா, ராஜமாதா சிவகாமி தேவி கேரக்டர்களை இமிடேட் செய்ய வேண்டுமென்பது.  ஃபினிஷிங் டச்சாக கலா மாஸ்டர் ஆசியோடு ‘கிழி கிழி கிழி’ டயலாக் சொல்லவும் தவறவில்லை அவர்.

ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?

திரையிசை ஒலித்த அரங்கில் பறையிசை அதிரடிக்க மேடையேறினார் சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்ற மகாலட்சுமி. விருது வழங்கிய உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்ஸிடம் அவர் மாணவர்கள் சார்பாகக் கோரிக்கை வைக்க, பறையிசையால் அதை ஆமோதித்தார்கள் அவரின் மாணவர்கள். இன்னொரு பக்கம், ‘நான் தவறவிட்ட ஒரு பதக்கத்தை என் மாணவர்கள் வழியே நூறு பதக்கமாகத் திருப்பித் தருவேன்’ என ‘ஃபீனிக்ஸ் பறவை’ விருது பெற்ற தடகள நாயகி சாந்தி சூளுரைக்க, அவரின் மாணவர்கள் கண்களில் ஒலிம்பிக் சுடரொளி மின்னியது.

ஓவியாவை ஏன் எல்லோருக்கும் பிடிக்குது?

வழக்கறிஞர் அருள்மொழி, சுஜாதா ரங்கராஜன், சீமான், அமைச்சர் சரோஜா, உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், கவிஞர் சல்மா, நடிகைகள் லதா, சச்சு, அபிநயா, நீலிமா, இசையமைப்பாளர் ரெஹானா, மருத்துவர் கமலா செல்வராஜ் என வெவ்வேறு துறை சார்ந்த விதவிதமான ஆளுமைகள் விருது பெற்ற பெண்களைச் சிறப்பித்தனர்.

ஒவ்வொருவர் மேடையேறும்போதும் கீழே அமர்ந்தபடி டிடி கொடுத்த ரியாக்‌ஷன்களை வைத்து ஆயிரம் பூமராங்குகள் கொண்ட தொகுப்பே போடலாம். ‘சிறந்த சின்னத்திரை நட்சத்திரம்’ விருதை வாணி போஜனுக்கு வழங்க மேடையேறியவரின் வாயைப் பிடுங்கிப் புதுக்கட்சியே தொடங்கவைத்துவிட்டார்கள் ராஜவேலுவும் நட்சத்திராவும். சிறந்த இசைக்கலைஞருக்கான விருதை வென்ற மனோன்மணி நிகழ்வின் இறுதியில் தன் சாரங்கியால் அரங்கை இசையில் மூழ்கடிக்க... லைட்ஸ் ஆஃப்!