Published:Updated:

#metoo புகார்..! என்ன சொல்கிறார் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
#metoo புகார்..! என்ன சொல்கிறார் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்?
#metoo புகார்..! என்ன சொல்கிறார் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்?

#metoo புகார்..! என்ன சொல்கிறார் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை # metoo என்ற ஹேஷ்டேக்குடன் சமூக வலைதளங்களில், தொடர்ந்து எழுதி வருகின்றனர். இதில், கவிஞர் வைரமுத்து, பாடகர் கார்த்திக், மாண்டலின் ராஜேஷ் உள்ளிட்ட பல பிரபலங்களைக் குறிப்பிட்டு, பெயர் வெளியிட விரும்பாத பெண்கள், தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களைத் தொடர்ந்து கூறிவருகின்றனர். இதற்காகத் தொடர்ந்து தன் ட்விட்டர் பக்கத்தில் குரல் கொடுத்து வருகிறார் பாடகி, சின்மயி. அதில், பிரபல நடன இயக்குநரான கல்யாண் மாஸ்டரை குறிப்பிட்டு, ஒரு ட்விட் செய்திருந்தார் சின்மயி. தனக்கு ட்விட்டரில் வந்த தகவலாக அதைக் குறிப்பிட்டிருந்தார். அந்த ட்விட்...

``நான் இலங்கையில் பட்டிகலோ (Batticaloa) பகுதியில் பிறந்தவள். தற்போது, கொழும்பில் வசிக்கிறேன். என் கணவர் மூலம் நீங்கள் (சின்மயி) என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன். என் சுதந்திரம் பறிபோய்விடும் என்ற காரணத்தால், இதைப் பற்றி வாய் திறக்காமல் இருந்தேன். தயவுசெய்து என் பெயரை வெளியிட வேண்டாம். 2010-ம் ஆண்டு, தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். எனக்கு சல்சா நடனம் கற்றுக்கொடுத்தவர், கல்யாண்  மாஸ்டரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். தன்னுடன் சல்சா ஆடும்படி கல்யாண் மாஸ்டர் கூறினார். நான் மிகவும் உற்சாகமாக ஆடத் தொடங்கினேன். ஆனால், சில நிமிடங்களிலேயே அவர் என்னைத் தகாத முறையில் தொடுவதை உணர்ந்தேன். எனக்குத் தலைவலி என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அவர் என் அலைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டார். அந்த இரவே, எனக்கு போன் செய்து, தன்னுடன் ஓர் இரவு இருந்தால் உதவி நடன இயக்குநராக சேர்த்துக்கொள்வேன் என்றார். நான் அந்த அழைப்பைத் துண்டித்தேன். என் நடனக் கனவை மூட்டைக்கட்டிவிட்டு இலங்கைக்கே வந்துவிட்டேன். இவ்வளவு காலம் என் மனத்திலிருந்த வலியை இப்போதுதான் கூறமுடிந்தது. இப்போது நான் ஒரு குடும்பத் தலைவி. பாலியல் தொல்லையால் என் கனவை இழந்தவள். இனி அந்தத் துறைக்கு வரும் பெண்களுக்காகவது நல்ல எதிர்காலம் இருக்கட்டும். நன்றி' என்று எழுதப்பட்டிருந்தது.

இதுகுறித்து நடன இயக்குநர் கல்யாண் என்ன சொல்கிறார். அவரிடம் பேசினேன். ``இப்படி ஒரு செய்தியே நீங்கள் சொல்லித்தான் தெரியுது. ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. எனக்குத் தெரிஞ்சு அப்படி ஒரு விஷயம் நடக்கலை. நான் டான்ஸ் கிளாஸ் எல்லாம் நடத்தியதில்லை. ஷூட்டிங்கில் மட்டும்தான் வேலை பார்த்திருக்கேன். எங்க யூனியனில் இருக்கும் டான்ஸர்ஸோடு மட்டுமே வேலை செய்திருக்கேன். நான் அப்படிப்பட்டவனும் இல்லை. பெண்களிடம் மதிப்பும் மரியாதையும் வெச்சிருக்கேன். அப்படி ஒருத்தரை நான் சந்திச்ச ஞாபகமே இல்லை. யாருன்னே தெரியாத ஒருத்தர் இப்படி ஒரு புகார் சொல்றதும், அதைச் செய்தியாக்குவதும் எந்த வகையில நியாயம். என்னைத்தான் அவங்க குறிப்பிட்டாங்களா, இல்லே தெலுங்கு சினிமாவில் இருக்கும் கல்யாண் என்ற நடன இயக்குநரையா என்றே தெரியலை. அதை நீங்கள் செக் பண்ணுங்க. எனக்கும் இந்தச் செய்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார் கல்யாண்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு