Published:Updated:

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

அவள் ஸ்பெஷல் ஸ்டோரி நன்றி: அரவிந்த் ஃபவுண்டேஷன் மாணவர்கள் கு.ஆனந்தராஜ் - படங்கள் : செ.விவேகானந்தன்

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

அவள் ஸ்பெஷல் ஸ்டோரி நன்றி: அரவிந்த் ஃபவுண்டேஷன் மாணவர்கள் கு.ஆனந்தராஜ் - படங்கள் : செ.விவேகானந்தன்

Published:Updated:
அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

ட்டிஸக் குறைபாடு பற்றிய முழுமையான மருத்துவ விளக்கத்தைச் சென்ற இதழ் ‘ஆட்டிஸம் கவலை வேண்டாம்... முழுமையாகக் குணப்படுத் தலாம்’ கட்டுரையில் பார்த் தோம். “பெற்றோரின் அக்கறையும் தொடர்ச்சியான பயிற்சியு டன் கூடிய வளர்ப்பும் இருந்தால்,  ஆட்டிஸக் குறைபாடுடைய குழந்தைகளைச் சாதனையாளர் களாக வார்த்தெடுக்கலாம்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த நரம்பு மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் பி.எஸ்.விருதகிரிநாதன், அதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார். 

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

எளிய பயிற்சி மற்றும் சிகிச்சை முறைகள்!

``முழுமையான ஆட்டிஸக் குறைபாடு என்பது இப்போது குறைவுதான். ஏஎஸ்டி 30 - 50% மற்றும் ஏடிஹெச்டி 50 - 70% அல்லது ஏஎஸ்டி 50 - 70% மற்றும் ஏடிஹெச்டி 30 - 50% அல்லது சில ஆட்டிஸ தன்மையுடன் கூடிய ஏடிஹெச்டி என இருக்கும். ஆட்டிஸக் குறைபாட்டை முழுமையாகக் குணப்படுத்துவதற்கு சிகிச்சை முறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதேநேரம், குழந்தைக்கு இருக்கும் ஆட்டிஸக் குறைபாட்டுத் தன்மைக்கு ஏற்ப மற்றும் அத்தன்மையைக் குறைப்பதற்கு சிகிச்சை மற்றும் பயிற்சிகளைக் கொடுக்கலாம். சோஷியல் பிஹேவியர், கம்யூனிகேஷன் டிசார்டர், எமோஷனல் விஷயங்களை வெளிப்படுத்துவதில் சுணக்கம் என இம்மூன்று விஷயங்கள்தாம் ஆட்டிஸக் குழந்தைகளை நம்மிடம் இருந்து வித்தியாசப்படுத்துகின்றன.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

*முதலில், இக்குழந்தைகளைத் தனிமைப்படுத்தக் கூடாது. இக்குழந்தைகளுடன் தொடர்ந்து உரையாட வேண்டும்.

*தடையின்றிப் பேச, எழுத, பிறரிடம் தன் கருத்துகளைச் சிரமமின்றி வெளிப்படுத்த, சாப்பிட, தன் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள, ஊஞ்சல் விளையாட, நடக்க, மாடிப்படி ஏற என அவசியமான பயிற்சிகளை அளிக்க வேண்டும். இப்பயிற்சிகளை குழந்தையின் 8 - 10 வயதுக்குள் கொடுத்து முன்னேற்றத்தை கண்டுவிட வேண்டும்.

*உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். கடல், ஆற்று மணல், கூழாங்கல் மற்றும் இயற்கை விவசாய நிலத்தில் ஆட்டிஸக் குழந்தைகளை நடக்கவிடும் பயிற்சிகள் பல இடங்களில் கொடுக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆற்றல் (Sensory issue skill) கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.  

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

*ஏஎஸ்டி அளவு அதிகமாக இருக்கும் போது, பயிற்சி முறைகளுக்குக் குழந்தையால் சரியான ஒத்துழைப்பு கொடுக்கமுடியாத பட்சத்தில் (Neurochemical imbalance) மட்டும், சில மருத்துவ சிகிச்சைகளைக் கொடுக்கலாம். அவற்றை சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை தொடர்ச்சியாகக் கொடுக்க வேண்டியிருக்கும். அதீத துறுதுறுப்பு, உறக்கமின்மை, கவனச்சிதறலைக் குறைக்க எனக் குழந்தைகளுக்கு ஏற்படும் சில இணைப்புப் பிரச்னைகளைச் சரிசெய்ய மட்டுமே அச்சிகிச்சைகள் வழங்கப்படும். இணைப்புப் பிரச்னையின் தன்மை குறைந்ததும் படிப்படியாக மருந்து மாத்திரைகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளலாம்.

பெற்றோரின் அரவணைப்பு

முறையான பயிற்சி மற்றும் அக்கறையான வளர்ப்பினால் குழந்தையின் பத்து வயதுக்குள் 70 - 80% வரை குறைபாட்டைக் குணப்படுத்த முடியும். பெற்றோர் இருவரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் விழிப்பு உணர்வும் மட்டுமே இக்குறைபாட்டை எதிர்கொண்டு மீள்வதற்கு ஒரே வழி. ஆட்டிஸக் குழந்தைகளின் அப்பாக்கள் பெரும்பாலும் குழந்தை வளர்ப்பிலும் கவனிப்பிலும் போதிய அக்கறை காட்டமாட்டார்கள். நேரமின்மை, வேலைப்பளு என அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ‘நம் குழந்தைக்கு ஆட்டிஸச் சிக்கல் இருக்கிறது. அதை முடிந்தளவுக்குப் பொறுமையுடன் சரிசெய்ய வேண்டியது நம் பொறுப்பு’ என உணர்ந்துகொள்ள வேண்டும். குழந்தையுடன் அதிக நேரம் செலவிட்டு, இயல்பான செயல்பாடுகளைச் செய்யவைக்க வேண்டும். இப்படி, தம்பதி ஒரே அலைவரிசை நோக்கம், கருத்து ஒற்றுமை மற்றும் ஈடுபாட்டுடன் குழந்தைக்குப் பயிற்சி மற்றும் ஊக்கம் கொடுக்கும்பட்சத்தில் மற்ற குழந்தைகளைப்போல திறமையானவர் களாக்க முடியும்

பல துறைகளில் அசத்தலாம் !

ஆட்டிஸக் குறைபாடுடைய குழந்தை களுக்கு கண்பார்த்து செய்யக்கூடிய வேலை கள் சார்ந்த (Nonverbal skills) திறமைகள் சிறப்பாக இருக்கும். 3 - 7 வயதுக்குள் அவற்றைக் கண்டறிந்து பயிற்சிகளைக் கொடுக்கத் தொடங்கிய பிறகு, ஒவ்வொரு குழந்தைக்கும் உண்டான தனித்திறமைகளைக் கண்டறிய வேண்டும். அப்படி ஓவியம், விளையாட்டு, இசைத்துறை என எந்தத் துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ அதில் குழந்தையைச் சாதனையாளராக்க பயிற்சி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால், குழந்தைகளை வெற்றியாளர்களாக்க முடியும். அதற்கு வாழும்  உதாரணம், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்கேல் ஃபெல்ப்ஸ். ஒலிம்பிக் போட்டியில் 28 தங்கப் பதக்கங்களை வென்றவர். தன் இளம் வயதில் ஆட்டிஸக் குறைபாட்டுத்தன்மையுடன் கூடிய ஏடிஹெச்டி-யால் பாதிக்கப்பட்டிருந்தார். பள்ளிப்படிப்பைகூடச் சரியாக முடிக்க வில்லை. ஆனால், உலகமே வியந்த நீச்சல் வீரராகச் சாதனை படைத்தார். உலகின் பெரிய
பணக்காரரான பில்கேட்ஸும் இளம் வயதில் ஏடிஹெச்டி குறைபாடு கொண்டிருந்தவர் தான். ஆட்டிஸப் பிரச்னையை உரிய நேரத்தில் கண்டறிந்து சாதாரணப் பள்ளியில் படித்து முன்னேறிய தமிழர்களும் பலர் உண்டு. ஆட்டிஸ சாதனையாளர்களை உருவாக்கவிருக்கும் பெற்றோர்களுக்கு வாழ்த்துகள்” - நிரம்ப நம்பிக்கை கொடுத்து முடித்தார் டாக்டர் விருதகிரிநாதன்.

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

இலவசப் பயிற்சி!

செ
ன்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைகளில் ஆட்டிஸக் குழந்தைகளுக்கு இலவசப் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பெற்றோருக்கும் சொல்லித்தரப்படுகிறது. அதுபோலவே சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள ‘நிப்மெட் (NIEPMD - National Institute for Empowerment of Persons with Multiple Disabilities)’ மையத்திலும் ஆட்டிஸத்தின் எல்லா வகையான குறைபாடுகளுக்கான பயிற்சிகளும் இலவசமாகக் கிடைக்கின்றன. அரசுப் பள்ளிகளில் எஸ்.எஸ்.ஏ (சர்வ சிக்‌ஷா அபியான்) திட்டத்தின் மூலம் இலவச சிறப்புக் கற்பித்தல் பயிற்சி மற்றும் இதர பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

உணவு முறைகள்!

யல்பான குழந்தைகளுக்கு அவரவர் வயதுக்கு ஏற்ப கொடுக்கப்படும் உணவுகளையே ஆட்டிஸக் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். பெற்றோர் சிலர் வெறும் திரவ உணவுகளை மட்டும் கொடுப்பார்கள். அது தவறு. சில குழந்தைகளுக்கு மட்டும் சில வகை உணவுகள் ஒப்புக்கொள்ளாது (Food allergy). மருத்துவர்களின் ஆலோசனையுடன் அத்தகைய உணவுகளை மட்டும் தவிர்க்கலாம்.

சில ஆட்டிஸக் குழந்தைகளுக்கு அடிக்கடி உமிழ்நீர் வாயிலிருந்து ஒழுகும். இவர்களுக்குத் திரவ வகை உணவுகளை நன்றாக உறிஞ்சிக் குடிப்பதில் சிரமம் இருக்கலாம். அதுவே திட உணவுகளை நன்றாக மென்று விழுங்கும்போது, சுரக்கும் உமிழ்நீரையும் விழுங்கிவிடுவார்கள். இப்படி நார்மல் உணவுகளைக் கொடுப்பதால், நிச்சயம் குழந்தைகளுக்கு இயல்பான பேச்சுத்திறமை மேம்படும்.

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

வணிகக்கொள்ளை கும்பல்... கவனம்!

“1960-க
ளில் இருந்து ஆட்டிஸக் குழந்தைகளைப் பற்றி பரவலாக அறிய முடிந்தது. ஆனாலும், இந்தியாவைப் பொறுத்த அளவில் 1990-க்கு முன்புவரை, ஆட்டிஸம் மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாடுடைய குழந்தைகளை ஒரே வகையீட்டில் பார்க்கும் மனநிலை இருந்தது. அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடு என்றாலும், இதுவேறு வகை என்ற விழிப்பு உணர்வு 2000-ம் ஆண்டுக்குப் பிறகு ஏற்படத் தொடங்கியது. 

பொதுவாக ஆட்டிஸ நிலைக் குழந்தைகள் பெரும்பாலானவர்களுக்குச் செரிமானம், உறக்கப் பிரச்னை, ஹைப்பர் ஆக்டிவிவிட்டி போன்ற சிக்கல்கள் இருக்கும். சிலருக்கு வலிப்பு நோயும் இருக்கும். இப்பிரச்னைகளின் தீவிரத்தைக் குறைப்பதற்கு மட்டுமே மருந்து மாத்திரைகளைக் கொடுப்பார்கள். இக்குழந்தைகளுக்கு ஆக்குபேஷனல் தெரபி, சிறப்பு கற்பித்தல் முறை, பேச்சுப் பயிற்சி போன்றவை அவசியம். அவற்றை வழங்கும் மையங்கள், ஒரு சிட்டிங்குக்கு உண்டான தொகையை ஒரு மாதத்துக்கு முன்பே பல ஆயிரங்களில் வசூலித்துவிடுகின்றனர். இந்தச் செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்குப் பொருளாதார ரீதியாக பலம் பெற்றவர்களுக்குப் பிரச்னை இல்லை. இயலாதவர்கள் திணறாமல், ஒவ்வொரு மாவட்டத் தலைமை மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்படும் இப்பயிற்சிகளைப் பெறலாம்.

ஆட்டிஸத்தைச் சில நாள்களில்/மாதங்களில் குணப்படுத்திவிட முடியாது. இந்த விழிப்பு உணர்வு இல்லாத பெற்றோர்களே, போலி மருத்துவர்களின் டார்கெட். ‘எளிதாகவும் விரைவாகவும் குணப்படுத்தலாம்; மாற்று மருத்துவத்தால் முடியும்; மருத்து மாத்திரைகளைத் தருகிறோம்’ எனக் கவர்ச்சி விளம்பரம் மற்றும் வார்த்தைகளைக் கூறும் போலி மருத்துவர்களுக்குப் பணம் பறிப்பதே நோக்கம். ஆட்டிஸத்தை முழுமையாகக் குணப்படுத்த இன்றுவரை உலகில் எங்கும் மருந்து, மாத்திரைகள் கண்டறியப்படவில்லை. மீறி, ‘மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்’ எனச் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் போலியானவர்களே” என்கிறார், பத்திரிகையாளரும், ‘ஆட்டிஸம் சில புரிதல்கள்’ நூலின் ஆசிரியருமான யெஸ்.பாலபாரதி.

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

தொழிற்பயிற்சி!

ட்டிஸக் குழந்தைகளின் வளர்ச்சிக்குப் பயன்தரும் தொழிற்பயிற்சிகள் குறித்துச் சொல்கிறார் சென்னையிலுள்ள ‘அரவிந்த் ஃபவுண்டேஷன்’ நிறுவனர் சுதா ஆத்மராஜ். “எங்க இன்ஸ்டிட்யூட்டில், ஆட்டிஸம் உள்பட ஏராளமான கற்றல் குறைபாடுடைய மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்களுக்குக் கணினிப் பயிற்சி, கணிதப் பயிற்சி, குக்கரி பயிற்சி, ஆபீஸ் அசிஸ்டென்ட் பயிற்சி, கார்டனிங் பயிற்சி, கிராஃப்ட் பயிற்சி உள்ளிட்ட ஏராளமான தொழிற்பயிற்சிகளைக் கொடுக்கிறோம். அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், முக்கிய மக்கள் பயன்பாட்டு இடங்களுக்கு அழைத்துச்சென்று செய்முறை பயிற்சிகளைக் கொடுக்கிறோம். இவை, ஆட்டிஸக் குழந்தைகள் சுயசார்புடன் வாழ்வதற்கும், பிறரிடம் இயல்பாகப் பழகுவதற்கும் உதவுகின்றன. தொழிற்பயிற்சி கொடுக்கத் தொடங்கும் நேரத்தில் குழந்தைகள் அதைக் கற்றுக்கொள்வதில் சிரமப்படுவார்கள். ஆனால், போகப்போக பயிற்சிக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதன்மூலம் குழந்தைகளுக்கு ஆர்வமுள்ள துறையை எளிதில் அடையாளம் காண முடியும். வீட்டில் இருந்தபடியேயும் இப்பயிற்சிகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஒருநாள், ஒரு வாரம், ஒரு மாதம் என்றில்லாமல் தொடர்ந்து தினந்தோறும் பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும்” என்கிறார்.

அறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்!

பாலியல் தொல்லை... பெற்றோர் உஷார்!

நி
னைக்கவே உடல் கூசுகிறது. ஆனால், உண்மைதான். வக்கிரபுத்திகொண்ட சிலர், ஆட்டிஸக் குறைபாடுடைய பெண் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் சாக்கில் பாலியல் தொந்தரவுகளைக் கொடுக்கிறார்கள். இதுகுறித்து எச்சரிக்கை செய்கிறார் அமெரிக்காவில் வசிக்கும் மீனா. இவர், மூளை முடக்குவாத பிரச்னையுடைய குழந்தையின் தாய். ஆட்டிஸம் உள்ளிட்ட கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதுடன், குறைப்பாட்டைச் சரிசெய்துகொள்ள பயிற்சியும் அளிக்கிறார்.

“இந்தியாவிலுள்ள கற்றல் குறைபாடுடைய ஏராளமான குழந்தைகளின் அம்மாக்களுடன் நட்பில் இருக்கிறேன். அவர்களின் மூலம்தான் குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் கொடுப்பவர்களைப் பற்றி அறிந்தேன். வீட்டில் சிகிச்சை கொடுக்க வரும் சிலர், தனியறையில் பெண் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதாகச் சொல்லி, குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச் சீண்டியிருக்கிறார்கள். குழந்தையால் தன் உடலில் நிகழும் மாற்றங்களை முழுமையாக வெளியே சொல்ல முடியாது என்பது அவர்களுக்குச் சாதகமாகிவிடுகிறது. ஒருகட்டத்தில் குழந்தையின் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சிகிச்சை அளிப்பவரின் நடவடிக்கைகளைக் கண்டறிந்து சில தோழிகள் காவல்துறையில் புகார் செய்தனர். குழந்தைக்கு முத்தம் கொடுப்பதை ஒரு தெரபி என்று சொல்லி ஏமாற்றிவந்தவர்களும் உண்டு. இதையெல்லாம் அனுமதிக்கக் கூடாது.

ஒரு வயதுக் குழந்தையானாலும் சரி, 15 வயதுச் சிறுமியாக இருந்தாலும் சரி... அவர்களுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சையில் கவனம் வேண்டும். மருத்துவமனையோ, வீடோ... சிகிச்சை அளிப்பவரும் குழந்தையும் மட்டுமே தனி அறையில் இருக்கும் விதத்தில் சிகிச்சை கொடுப்பதை ஏற்காதீர்கள். ‘எவ்வளவு நேர சிகிச்சையாக இருந்தாலும் சரி. என் குழந்தைக்கு கொடுக்கும் சிகிச்சை முறையை நான் பார்ப்பேன். எனக்கும் சொல்லிக்கொடுங்கள்’ எனக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு, பெற்றோரே வீட்டில் இருந்தபடி குழந்தைக்கு சிகிச்சை கொடுக்கலாம். நல்ல முன்னேற்றம் கிடைக்கும்” என்கிறார்.