Published:Updated:

காலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து!

காலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து!
பிரீமியம் ஸ்டோரி
காலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து!

நீங்களும் செய்யலாம்சாஹா - படங்கள் : ப.சரவணகுமார்

காலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து!

நீங்களும் செய்யலாம்சாஹா - படங்கள் : ப.சரவணகுமார்

Published:Updated:
காலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து!
பிரீமியம் ஸ்டோரி
காலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து!

கையெழுத்து என்பது தலையெழுத்தைத் தீர்மானிக்குமா? தெரியவில்லை. ஆனால், அழகாக எழுதத் தெரிந்தவர்களுக்குத் தலையெழுத்து மாறலாம். அதைச் செய்யக்கூடிய ஒன்றுதான் காலிகிராஃபி எனப்படுகிற அலங்கார எழுத்துப் பாணி. மிகப்பழைமையான இந்தக் கலை பல நவீன வடிவங்கள் எடுத்து, காலத்துக்கேற்ப மாறி, இன்றும் அழியாமல் இருக்கிறது.  

காலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து!

பார்ப்பதற்கு அழகு என்பது மட்டுமல்ல... இது குழந்தைகளின் நினைவாற்றலையும் பொறுமையையும் கற்பனைத் திறனையும் வளர்க்கக்கூடியது. வளர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான பிசினஸாக வழிகாட்டக்கூடியது. பொழுதுபோக்காகவும் பிசினஸாகவும் எடுத்துக்கொள்ள விரும்புவோருக்கு காலிகிராஃபி கலையைக் கற்றுத்தருவதோடு, பணம் ஈட்டும் வழிகளையும் காட்டுகிறார் சென்னை, சின்மயா நகரைச் சேர்ந்த ராஜலட்சுமி.

‘`எம்.பில் படிச்சிருக்கேன். படிப்பை முடிச்சதும் கல்யாணமாயிருச்சு. உடனே குழந்தை, குடும்பப் பொறுப்புகள்னு ஆகிட்டதால வேலைக்குப் போக முடியலை. காலேஜ் படிக்கும்போதே காலிகிராஃபி கத்துக்கிட்டேன். காலிகிராஃபிங்கிறது ஒருவகையான எழுத்துமுறை. பிரத்யேக பேனா வெச்சு எழுதறது. அதுக்குனு தனி ஃபான்ட்ஸ் இருக்கும். அதுலயே மெலிதானது, திக்கானதுனு ரெண்டு இருக்கு.

காலிகிராஃபியில எழுதறபோது அந்த ஸ்டைல் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். ஸ்கூல், காலேஜ் பிள்ளைகளின் புராஜெக்ட் வொர்க், ரெக்கார்டு வொர்க்ல எல்லாம் காலிகிராஃபி ஸ்டைல்ல எழுதினா ரொம்ப அழகா இருக்கும். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து!

நான் காலிகிராஃபி பண்ணுவேன்னு தெரிஞ்சதும் என் காலேஜ்ல சர்ட்டிஃபிகேட் எழுதறதுக்கு என்னைத்தான் கூப்பிட்டாங்க. காலேஜ் இன்விடேஷன்ஸ்ல எழுதறது, பேனர் எழுதறதுனு எல்லாத்துக்கும் நான்தான் காலிகிராஃபியில எழுதிக் கொடுத்திருக்கேன். அந்த ஆர்வம்தான் இப்ப எனக்குத் தொழிலா மாறியிருக்கு...’’ - கையெழுத்தால் அழகான வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிற ராஜலட்சுமி மற்றவர்களுக்கும் வழிகாட்டுகிறார்.

என்னென்ன தேவை... எவ்வளவு முதலீடு?

கறுப்பு மற்றும் நீல நிற காலிகிராஃபி பேனாக்கள் அவசியம். வேறு விருப்பமான நிறங்களிலும் வாங்கிக்கொள்ளலாம். காலிகிராஃபி இங்க் தேவை. காலிகிராஃபி ஸ்கெட்ச் பேனாக்கள் தேவை. அவற்றை வைத்து சார்ட் பேப்பர்களில் எழுதலாம். பேனாக்களுக்கு 500 ரூபாய் முதலீடு போதும். ஹேண்ட்மேட் பேப்பர் மற்றும் அட்டைகளில் எழுதி, கிரீட்டிங் கார்டு செய்யலாம். மொத்த முதலீடு 750 ரூபாய் போதுமானது.

எதற்கெல்லாம் பயன்படும்?

வாழ்த்து அட்டைகளில் எழுதி விற்கலாம். புராஜெக்ட் வேலைகளுக்குப் பிரதானமாகப் பயன்படும். கம்பெனிகளுக்கு ஹோர்டிங்ஸ், பேனர் எழுதிக்கொடுக்கலாம்.

பிசினஸாக எப்படி மாற்றுவது?

10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு காலிகிராஃபி பயிற்சி அளிப்பதன் மூலம் ஒரு தொகையைச் சம்பாதிக்கலாம். எல்லாக் குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடங்களில் புராஜெக்ட் மற்றும் ரெக்கார்டு வேலைகள் இருக்கும். பெற்றோர் உதவியின்றி, பிள்ளைகள்தான் செய்ய வேண்டும் என்பதே சரி. காலிகிராஃபி கற்றுக்கொள்கிற குழந்தைகளுக்கு புராஜெக்ட் வொர்க் செய்வதில் பிரச்னைகள் இருக்காது.

இதைக் கற்றுக்கொண்டால் நிறுவனங் களுக்கு டாக்குமென்ட், புராஜெக்ட் வொர்க் எழுதிக்கொடுக்க ஆர்டர் பிடிக்கலாம். கிரீட்டிங் கார்டு செய்யலாம்.

பயிற்சி?

ஒருநாள் பயிற்சி போதுமானது. பிறகு தொடர்ந்து எழுதிப் பழகினால் நிபுணத்துவம் பெறலாம். காலிகிராஃபி பேனா மற்றும் ஃபான்ட்டுகளுடன் சேர்த்துப் பயிற்சிக் கட்டணம் 750 ரூபாய்.