Published:Updated:

ஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்!

ஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்!

திருமுருகன் காந்திஅவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி

ஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்!

திருமுருகன் காந்திஅவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி

Published:Updated:
ஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்!
பிரீமியம் ஸ்டோரி
ஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்!

லங்கை முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக் காகக் குரல்கொடுத்து, ‘மே 17 இயக்க’த்தின் மூலம் உலகின் பார்வையைத் தன் பக்கம் திருப்பிய போராளி திருமுருகன் காந்தி. தமிழகத்தை மிரட்டும் பிரச்னைகள் போராட்டங்களாக வெடிக்கிற ஒவ்வொரு முறையும் ஒலிக்கிற முதல் குரல்களில் இவர் குரல் உரக்கவே கேட்கும். குண்டர் சட்டம் பாய்ந்து, சிறைவாசம் சென்று திரும்பியவரின் போராட்டச் சிந்தனையிலும் சமூக அக்கறையிலும் நீக்கமற நிறைந்திருப் பவர்கள் பெண்கள்தாம் என்கிறார்.

ஆண்களின் பெயர் சொல்வதை மரியாதைக்குறைவாக நினைக்கிற பெண்களைப் பார்த்திருப்போம். அம்மாவின் பெயர் சொல்வதை அப்படித்தான் பார்க்கிறார் திருமுருகன் காந்தி. அம்மாவின் மீதான அந்த அன்பும் மரியாதையும் அவர் வாழும் சமூகத்துப் பெண்கள் அத்தனை பேரிடமும் இருப்பதைப் பிரதிபலிக்கிறது அவரது பேச்சு. இனி திருமுருகன் காந்தியின் ‘அவர்களும் நானும்’

ஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்!

‘`வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் பெண் என் அம்மா. நான் குழந்தையாக இருந்தபோது குட்டிமணி, ஜெகன் பற்றி, ஈழத்துப் போராட்டம் பற்றிச் சொல்லி போராட்டக் குணத்துக்கான முதல் விதையை எனக்குள் விதைத்தவர்.

அம்மா அதிகம் படிக்காதவர். ஆனாலும், அவருக்குத் தொடர்ச்சியான வாசிப்புப் பழக்கம் இருந்தது. அப்பா நாத்திகர். அம்மா தீவிரமான கடவுள் பக்தி கொண்டவர். அதைத் தாண்டி அப்பாவின் நாத்திகத்தையும் ஏற்றுக்கொண்டே வாழ்ந்தார்.

யார் கஷ்டப்பட்டாலும் அம்மாவுக்குப் பொறுக்காது. சம்பந்தமே இல்லாதவராக இருந்தாலும் அவருக்கு உதவுவது அம்மாவின் வழக்கம். அம்மா உடல்நலமின்றி திடீரென இறந்துபோனார்.

அவர் இறந்த விஷயம் பலருக்கும் தெரியாது. அம்மா இருந்தபோது நிறைய பேர் வீட்டுக்கு வருவார்கள்.  அவர்களில் ஒரு போஸ்ட்மேன் அம்மாவைப் பற்றிய நினைவுகளை நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டது மறக்க முடியாதது. போஸ்ட்மேன்தானே எனப் பார்க்காமல், வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர் என்பதால் அவர் வரும் நேரத்தில் தாகம் தணிக்கும் உணவுகளைத் தயாராக வைத்திருப்பாராம் அம்மா. கண் எதிரில் கர்ப்பிணி யாரையாவது பார்த்தால் வீட்டுக்கு அழைத்து வந்து தன் கையால் சமைத்துச் சாப்பிட வைத்து அழகு பார்ப்பார். வீட்டுக்குப் பக்கத்தில் கட்டட வேலையில் இருந்தது ஒரு குடும்பம். கட்டடம் முடிந்ததும் அவர்களுக்கு வேலையில்லை. அவர்களது கஷ்டம் பொறுக்காமல் எங்கள் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கவைத்துப் பார்த்துக்கொண்டார்.

எலுமிச்சைப்பழங்களும் நெல்லிக்காய் களும் விற்கும் மொத்த வியாபாரி ஒருவர் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வருவார். அவருக்கும் அம்மா இறந்தது தெரியாது. ஒருநாள் எதேச்சையாக வந்தவரிடம் ‘இனி எலுமிச்சைப்பழங்கள் வேண்டாம்’ என்றேன். அவர் அம்மாவைக் கேட்டார். அம்மா இறந்த தகவல் கேட்டு அதிர்ந்துபோனார். ‘நான் மூணு மாசத்துக்கொரு முறைதான் வருவேன். முதல் வேலையா என்னைச் சாப்பிடச் சொல்வாங்க. ஊர்லேருந்து சீக்கிரமே கிளம்பி வியாபாரத்துக்கு வந்துடுவேன். சாப்பிடாம வந்திருப்பேன்னு அவங்களுக்குத் தெரியும்’ என்று வருத்தப்பட்டார்.

முற்போக்கு என நாம் பேசுகிற பல விஷயங்களை அம்மா வெகு இயல்பாகச் செய்திருக்கிறார்.  என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு பெண், தன் பேராசிரியர் அவமானப்படுத்தியதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்தார். அவரை யாரும் சந்திக்கக் கூடாது என்று கல்லூரி நிர்வாகம் தடுத்தது; பேராசிரியருக்கு ஆதரவாக நின்றது. அதை மீறி நான் அந்தப் பெண்ணைப் பார்க்கப் போனேன். வேறு சில நண்பர்கள் என் அம்மாவிடம் அதைச் சொல்லி, நாளைக்குப் படிப்பைத் தொடர்வதில் சிக்கல் வரலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். ‘இதனால அவன் படிப்பு போனால் பரவாயில்லை. இந்த நேரத்துல அங்கே போகலைன்னா அவன் தப்பான ஆளு. போறதுதான் சரி’ என்றார் அம்மா. படிப்பறிவே இல்லாத ஒருவர்... ஆனாலும், உலகத்தில் எதை நேசிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர் அம்மா. அந்தப் பண்பை நான் அம்மாவிடமிருந்துதான் எடுத்துக்கொண்டேன்.

போராட்டக்களத்துக்கு வந்த பிறகு என்னை ஈர்த்த இன்னொரு தாய் அற்புதம்மாள். அவரது உறுதி என்னைக் கவர்ந்த விஷயம். எந்த நேரத்திலும் அவரிடம் நான் கவலையைப் பார்த்ததில்லை. மகனுக்குத் தூக்கு என அறிவிப்பு வந்தபோது, அதை ரத்து செய்ய முடியாது என்கிற மனநிலையில் எல்லோரும் இருந்தார்கள். அப்போதுகூட அவர் அழுது நான் பார்க்கவில்லை. அவ்வளவு நம்பிக்கை அவரிடம். அவரை எப்படிச் சமாதானப்படுத்துவது என எல்லோரும் யோசித்துக்கொண்டிருந்தபோது, இதை எப்படியும் நிறுத்திவிட முடியும் என நம்பியவர் அவர். உணர்வுரீதியாக பலமிழக்காதவர்.

 இடிந்தகரை போராட்டத்தின் முக்கியமான நபரான சுந்தரியம்மாவும் அப்படியோர் ஆளுமைதான். எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல், அணுஉலைப் போராட்டக் களத்தில் நின்று, காவல் துறையின் ஒடுக்கு முறையை எதிர்த்துக் குரல் கொடுத்தவர். சிறை வாழ்க்கையைப் பற்றிப் புத்தகமும் எழுதியிருக்கும் அவரும் என் வாழ்வின் மறக்க முடியாத பெண்ணாக இருக்கிறார்.

சாதாரணமாகச் சாலை விபத்தில் யாராவது இறப்பதைப் பார்த்தாலே நமக் கெல்லாம் பதற்றம் இருக்கும். மனதுக்கு நெருக்கமான ஒருவர் கண் எதிரில் கொல்லப்படுகிற அதிர்ச்சியிலிருந்து விடுபடுவது என்பது எளிமையான விஷயமே
இல்லை. அதிலிருந்து வெளியில் வந்து நொறுங்கிப் போகாமல், காரண காரியங்களை ஆராய்ந்து, படித்து, எதிர்த்து நிற்பதென முடிவெடுத்தவர் கெளசல்யா. அதைச் சுயநலமாகப் பார்க்காமல் பொதுநல அரசியலாகப் பார்த்தவர். ஆழ்ந்த வாசிப்பை வளர்த்துக்கொண்டவர். பொதுமேடையில் ஏறி நிற்க அசாத்திய துணிச்சல் வேண்டும். இருமுறை சந்தித்திருக்கிறேன். அவரது அந்தத் துணிச்சல் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

நான் சிறையில் இருந்தபோது கணவனையோ, மகனையோ சந்திக்க வரும் பெண்களைப் பார்த்திருக்கிறேன். தன் வீட்டு ஆண் நிரபராதியோ, குற்றவாளியோ எப்படி இருந்தாலும் விட்டுத்தராத அந்தப் பெண்களால்தான் அந்த ஆண்கள் மீண்டும் வெளியில்போய் ஓரளவு யோக்கியமாக வாழ்கிறார்கள். அந்தப் பெண்களின் துன்ப மும் அலைச்சலும் பார்க்கச் சகிக்காதவை.

டாஸ்மாக்கில் குடித்துவிட்டு வருபவர் களைத் தம் வீட்டு ஆண்களாக வைத்திருக்கிற பெண்களின் அசாத்திய மனநிலைதான் இன்று தமிழ்நாட்டைத் தாங்கிப்பிடிக்கிறது. குடிகார ஆணை இன்னோர் ஆணாலேயே சகித்துக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட ஒருவன் தன் வீட்டில் வலிமையையும் திமிரையும் காட்டுவதையும் சகித்துக்கொண்டு குடும்பத்தைத் தாங்கும் பெண்களின் மனஉறுதி அசாதாரணமானது. உழைக்கும் சமூகத்துப் பெண்களில் யார் முகத்திலும் உண்மையான சந்தோஷத்தைப் பார்க்க முடிவதில்லை. காரணம், ஆண்களின் மோசமான நடத்தைதான். ஆண்கள் செய்கிற அத்தனை சமூக அட்டூழியங்களையும் அக்கிரமங்களையும் சகித்துக்கொண்டு வாழ்கிற பெண் களால்தான் தமிழ்நாடு நிற்கிறது. பெண் இன்றி  ஆணின் வாழ்க்கை அர்த்தப்படுவதில்லை... முழுமையடைவதில்லை.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்!

நானும் அவளும்

சுதந்திரமான பெண்களுக்கான அடையாளம்!

‘`நு
கர்வோர் சந்தையில் எதையும் தீர்மானிக்கிறவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்கள். பெரும்பாலான ஊடகங்கள் ஆண்களுக்கானவை யாகவே இருக்கின்றன. அவர்களுக்கான செய்திகள், தகவல்களுடன்தான் வருகின்றன. அந்தச் சூழலில் பெண்களுக்கான விவாதங்களுக்குப் பெரிதாக இடமில்லை.

பெண்களுக்கானவை என்கிற விளம்பரத்துடன் வரும் பலவும் தமிழ்நாட்டில் வெற்றிபெற்றதில்லை. அப்படி வரும் எதிலும் பெண்கள்தான் முதன்மை நுகர்வோராக இருக்க வேண்டும். அதற்கான பொருளாதார வலிமை அவர்களுக்கு இருக்க வேண்டும். ஆண்களுக்கான பிராண்டட் தயாரிப்புகள் வெற்றிபெறுவதைப் போல பெண்களுக்கான தயாரிப்புகள் வெற்றி பெறுவதில்லை. உலகளவில் இதுதான் நிலை.

`ஃபெமினா', `உமன்'ஸ் எரா' போன்ற சில பத்திரிகைகளுக்கு இடையில் தமிழ்நாட்டுப் பெண்களுக்குப் பயன்படுகிற பத்திரிகையாக நின்றது ‘அவள் விகடன்’. பிரத்யேக அம்சங்களுடன் கூடிய இதழாக ‘அவள் விகடன்’ நிற்பதை, தனித்துச் சிந்திக்கக்கூடிய, சுதந்திரமான பெண்களுக்கான அடையாளமாகத்தான் நான் பார்க்கிறேன். அவள் விகடனின் வெற்றியும் அதுவே.’’