Published:Updated:

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா
பிரீமியம் ஸ்டோரி
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா

மூன்றெழுத்து அற்புதம்ஆர்.வைதேகி - படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா

மூன்றெழுத்து அற்புதம்ஆர்.வைதேகி - படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா
பிரீமியம் ஸ்டோரி
எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா

‘`எனக்கு அப்போ பத்து வயசிருக்கும்... என்னோட முடி ரொம்ப நீளம்; ரொம்ப அழகு. ஒருமுறை `கோ கார்ட்டிங்' பண்ணிட்டிருந்த போது என் முடி இன்ஜின்ல சிக்கி, சின்னா பின்னமாயிடுச்சு. என் லைஃப்ல முதல் ஆக்ஸிடென்ட் அது. எங்கம்மாவும் அங்கதான் இருந்தாங்க. ஈவென்ட்டுலேருந்து என்னை வெளியில அனுப்பிட்டாங்க. ஒருபக்கம் வெளியில அனுப்பிட்டாங்களேங்கிற வருத்தம்... இன்னொருபக்கம் வலி, என்னுடைய நீளமான முடி போயிடுச்சேங்கிற கவலை... கதறிக்கதறி அழுதுகிட்டே வெளியில வந்தேன். 

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா

‘எதுக்கு அழறே...  நீ ரேஸரோட பொண்ணுங் கிறதை மறந்துடாதே... வாழ்க்கையில விழறது சகஜம். அதுலேருந்து எழுந்திருக்கவும் முன்னை விட அதிக முயற்சியோடு ஜெயிக்கிறதும்தான் முக்கியம். முடி போனா வளர்ந்துடப் போகுது. அழுகையை நிறுத்திட்டு ஆகவேண்டியதைப் பாரு...’னு அட்வைஸ் பண்ணினாங்க அம்மா.

சுத்தி இருந்த பலருக்கும் ஷாக்... ‘பொண்ணுக்கு அடிபட்டிருக்கு. ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போகாம, அட்வைஸ் பண்ணித் திரும்பவும் கோ கார்ட்டிங் பண்ண அனுப்பறீங்களே...’னு கேட்ட யாரையும் அம்மா கண்டுக்கவே இல்லை. ‘உன்னால முடியும்... போ’னு என்னை அனுப்பி வெச்சாங்க.

அந்த இடத்துல வேற ஒருத்தர் இருந்திருந்தா, என் ஸ்போர்ட்ஸ் கரியருக்கு அந்த நிமிஷத்தோடு முற்றுப்புள்ளி வெச்சுட்டு, ‘பொம்பிளைப் புள்ளைக்கு இதெல்லாம் தேவையா?’னு வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருப்பாங்க. ஆனா, எங்கம்மா கொடுத்த ஊக்கம் ரொம்பப் பெரிசு. `நான் எதுக்கு அழணும்?'னு அப்பதான் எனக்குத் தோணிச்சு. அழுகையை நிறுத்திட்டு, திரும்ப பிராக்டீஸுக்குப் போய் முடிச்சுட்டு வெளியில வந்தேன்.

‘இப்போ எப்படி ஃபீல் பண்றே? இதுதான் நிஜமான சந்தோஷம். நீ அழுதுட்டு வீட்டுக்கு வந்திருந்தா, இந்த வெற்றியை உன்னால ருசிச்சிருக்க முடியாது. போராடறதுதான் வாழ்க்கை’னு பத்து வயசுலயே எனக்குக் கத்துக் கொடுத்தாங்க அம்மா. அவங்க சொல்லித் தந்த அந்த பாலபாடம்தான் இன்னிக்கும் எனக்கு வழிகாட்டுது....’’ - அம்மா வெண்டி அப்துல்லாவைப் பற்றிப் பேசப் பேச பைக் ரேஸர் அலிஷா அப்துல்லாவின் முகத்தில் பெருமிதப் பூரிப்பு. அம்மாவைப் பற்றிய நெகிழ்ச்சிப் பதிவில் அலிஷாவின் இதயம் உருகுகிறது.

‘`எட்டு வயசுல தொடங்கி, இதோ இப்போ வரைக்கும்கூட நான் ஏளனங்களையும் அவமானங்களையும் சந்திச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். ‘பொண்ணுங்களுக்கு ரேஸிங் தேவையா? கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகிறதை விட்டுட்டு, எதுக்கு ரிஸ்க்?’னு கேட்டிருக்காங்க. ‘எவ்ளோ நாளைக்கு பண்ணுவே பார்ப்போம்’னு சவால்விட்டவங்களையும் பார்த்திருக்கேன். ஒவ்வொருமுறை அப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்கறபோதும் பொண் ணுங்கன்னா ஏன் இதையெல்லாம் பண்ணக் கூடாதுனு எனக்குள்ளே வெறி அதிகமாகுது.  ஒவ்வொருத்தருக்கும் பதிலடி கொடுக்கறேன். வார்த்தைகளால் அல்ல... என் வெற்றிகளால். அதுக்குக் காரணம் அம்மா.

இப்போ நான் நிறைய டீன்ஏஜ் பெண் களுக்குப் பயிற்சி கொடுக்கறேன். அவங்களோட அம்மாக்களின் மனநிலையைப் பார்க்கறேன். ‘என் பொண்ணுக்குப் படிப்புதான் முக்கியம். அப்புறம்தான் மத்ததெல்லாம். படிப்பு கெட்டுடக் கூடாது’னு சொல்றாங்க. ஆனா, எங்கம்மா அப்படி நினைச்சதில்லை. படிப்பு, ரேஸ்னு ரெண்டுலயும் நான் சாதிக்க அம்மா ஊக்கம் கொடுத்தாங்க. காலையில படிப்பு, சாயந்திரம் ரேஸ்னு டைம்டேபிள் போட்டு ஹார்டு வொர்க் பண்ணியிருக்கேன். டீன் ஏஜ்தான் லைஃப்ல ரொம்ப முக்கியமான பருவம். அதுல கொஞ்சம் இடறினாலும் லட்சியங்களைத் தொலைச்சுடுவோம். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் டிஸ்கோ, பார்ட்டினு டீன் ஏஜ் லைஃபை என்ஜாய் பண்ணிட்டிருந்தபோது, நான் மட்டும் படிப்பும் ரேஸுமா பிஸியா இருந்திருக்கேன். ‘ச்சே... இதென்ன எனக்கு மட்டும் இப்படி சுவாரஸ்யமே இல்லாத வாழ்க்கை’னு நினைச்சிருக்கேன். அம்மா மேல கோபப்பட்டிருக்கேன்; சண்டை போட்டிருக்கேன். ஆனா, இன்னிக்கு என் லைஃபை திரும்பிப் பார்க்கிறபோது நான் இருக்கிற இடமும் உயரமும் வேற லெவல்னு புரியுது. அதுக்குக் காரணம் அம்மாவின் கண்டிப்பான வளர்ப்புன்னும் புரியுது...’’ - அம்மாவின் கண்டிப்பினால் அழகான வாழ்க்கைக்கு வார்த்தைக்கு வார்த்தை நன்றி சொல்கிறார் மகள்.

‘`2012-ல ஒருமுறை ஸ்ரீபெரும்புதூர்ல சூப்பர் பைக் ஓட்டினபோது கீழே விழுந்துட்டேன். ‘அலிஷா கதை முடிஞ்சது. அவ்வளவுதான்’னு எல்லாரும் நினைக்கிற அளவுக்கு மிகப்பெரிய விபத்து அது. ‘பொண்ணை வளர்க்கத் தெரியலை... அப்பவே சொன்னோம், கேட்டியா’னு அம்மாவையும் பலபேர் திட்டினாங்க. ஆனா, வழக்கம்போல அம்மா அதுக் கெல்லாம் காது கொடுக்கலை. குழந்தையைத் தாங்கற மாதிரி என்னைக் கவனிச்சுக்கிட்டாங்க. அம்மா பிசினஸ் உமன். எனக்குச் சரியாகிற வரைக்கும் தன் வேலைகள் எல்லாத்தையும்  நிறுத்திட்டு 24 மணி நேரமும் என்கூடவே இருந்தாங்க.  வாழ்வா, சாவாங்கிற நிலைமையில இருந்த என்கிட்ட அப்போதும் அம்மா பரிதாபமா பேசலை. ‘இதெல்லாம் வேணாம், விட்டுடு’னு சொல்லலை. ‘எதுக்காகவும் எப்போதும் உன் லட்சியத்தை விட்டுடாதே... நீ கல்பனா சாவ்லா மாதிரி சாதிக்கப் பிறந்தவள். அலிஷான்னா ஆளப்பிறந்தவள்’னு சொல்லி என்னை மீட்டெடுத்தாங்க.

பேய் மழை பெய்யறபோதும், ‘நீ பிராக்டீஸுக்குப் போகாதே’னு அம்மா சொன்னதே இல்லை. ‘பார்த்து ஓட்டும்மா.... பத்திரமா போயிட்டு வா’னு சொல்லிட்டு, எனக்காக பிரேயர் பண்ணுவாங்க. அம்மாவோட  அந்த பிரேயரும் ஆசீர்வாதமும்தான் என்னை இத்தனை நாளும் காப்பாத்திட்டிருக்கிறதா நான் நம்பறேன்.

அம்மா இல்லாம நான் எந்த ஈவென்ட்டுக்கும் போனதில்லை. ரெண்டு மணிநேர நிகழ்ச்சியா இருந்தாலும் அம்மா என்கூட இருப்பாங்க. இப்போ சமீபத்துல மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம், நூறு துறைகளில் சாதனை படைச்ச முதல் பெண்களுக்கு விருதுகள் கொடுத்தாங்க. அவர்கள்ல நானும் ஒருத்தி. ஐஸ்வர்யா ராய், மேரி காம் மாதிரியான ஆளுமைகளுடன் நானும் விருது வாங்கினேன். அப்போ அம்மா, ‘உன்னால இதைவிட அதிகமா சாதிக்க முடியும். ஆனா, அதுக்கு நிறைய உழைக்கணும்’னு சொன்னாங்க. அதுமட்டுமல்ல, ‘இந்த விருதுகள் உனக்குக் கர்வத்தையோ, நிறைய சாதிச்சுட்ட திமிரையோ கொடுத்துடக் கூடாது. இன்னும் உழைக்கிறதுக்கான உத்வேகத்தைக் கொடுக்கணும். உனக்கு ரெண்டு கை, ரெண்டு கால், மூளை இருக்கு. உழைக்கவும் உதவவும்தான் இந்த வாழ்க்கை...’னு சொன்னாங்க. அதுதான் அம்மா...’’ - அகமகிழ்கிற அலிஷாவுக்கு விசித்திரமான ஓர் ஆசை இருக்கிறது.

‘`சொன்னா பலரும் சிரிப்பாங்க. ஆனா, அதுதான் உண்மை. எங்கம்மாவுக்குக் கோயில் கட்டணும்.  கையில பத்து ரூபா இருந்தா, `உனக்குச் சேர்த்து வெச்சுக்கோ’னு சொல்லாம, `அதை அடுத்தவங்களுக்குக் கொடுத்துடு. உனக்குக் கடவுள் தருவார்’னு சொல்லிக் கொடுத்தாங்க. ‘உனக்கு மிஞ்சிதான் தானம்’னு சொல்லி வளர்க்கிற அம்மாக்களுக்கு மத்தியில கையில இருக்கிறதை அடுத்தவங்களுக்குக் கொடுக்கச் சொல்லிப் பழக்கின என் அம்மாவுக்குக் கோயில் கட்டறதைவிடவும் சிறந்த செயல் இருக்குமானு தெரியலை. எனக்குக் கண்ணுக்குத் தெரிஞ்ச தெய்வம் எங்கம்மாதான்...’’ - வேகக் காதலியின் வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் நிறைந்திருக்கிறார் அம்மா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா

``அலிஷா ஓர் அதிசயப் பிறவி!’’

- வெண்டி அப்துல்லா


‘`தை
ரியம்... தன்னம்பிக்கை... அசாத்திய துணிச்சல்... இப்படி எல்லா வார்த்தைகளுக்கும் என் அகராதியில அலிஷானுதான் அர்த்தம்.

அவளுக்கு ஒவ்வொரு முறை அடிபடும்போதும், ஆக்ஸிடென்ட் ஆகும்போதும் ஒரு தாயா எனக்கு மனசு பதறும். ஆனாலும், ஒருநாளும் நான் அதை வெளியில காட்டினதில்லை. நான் உடைஞ்சுபோனது தெரிஞ்சா, அவளும் அப்செட் ஆயிடுவாளோனு என் கவலையை மறைச்சு அவளை மோட்டிவேட் பண்ணியிருக்கேன். அந்த அணுகுமுறைதான் இன்னிக்கு அவளை பாசிட்டிவான மனுஷியா மாத்தியிருக்கு. அவளுடைய பிறப்புக்கு ஓர் அர்த்தம் இருக்கிறதா நான் நம்பறேன். அது அவளுடைய தனிப்பட்ட வெற்றி மட்டுமே சம்பந்தப்பட்டதில்லை. பல பெண்களுடைய வாழ்க்கையில மாற்றங்களை ஏற்படுத்தப் பிறந்திருக் கிற அதிசயப் பிறவி அவள்.’’

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா

வழித்துணை... வாழ்க்கையின் பொக்கிஷம்!

ந்தப் போட்டியின் அறிவிப்பைப் பார்த்த உடனேயே மனதில் தோன்றிய முதல் ரியாக்‌ஷன் `வாவ்’ என்பதுதான். அம்மாவைப் பற்றிய எண்ணங்கள் எப்போதும் மனதை நிறைத்துக்கொண்டே இருந்தாலும் அவற்றை வெளிப்படுத்த வாய்ப்பு எதுவும் அமையவில்லை. எல்லோருக்கும் அவரவர் அம்மாதான் ரொம்ப ஸ்பெஷல். எனக்கு என் அம்மா ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். அதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முதல் காரணம், எனக்காகத் தன் கம்ஃபர்ட் ஜோனை (comfort zone) விட்டுவரத் தயங்கவே மாட்டார்.  

எங்க அம்மாதான் பெஸ்ட்! ஏன் தெரியுமா? - அலிஷா அப்துல்லா

பிறந்தது முதல் மதுரையைவிட்டு எங்கேயுமே போகாதவர், எனக்குத் துணையாக பெங்களூரு வர வேண்டிய சூழல். வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல்  எனக்காக உடனே வந்தார். நானும் என் அம்மாவும் மட்டுமே தனியாகக் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் பெங்களூரில் இருந்தோம். `புது இடம், வேறு மொழி’ என்று எதுவுமே புலம்பமாட்டார். நான் காலையில் ஆபீஸ் போனால் திரும்ப சில நேரம் இரவுகூட ஆகிவிடும். நாங்கள் இருந்த இடத்தில் தமிழ் இதழ்களும் கிடைக்காது. மதுரையில் இருந்த வரை ஒன்றுவிடாமல் எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளையும் படித்து, கடிதம் எழுதியும் போடுவார். பெங்களூரில் போஸ்ட் பாக்ஸும் அருகில் இல்லை. அதுவரை என் அம்மாவுக்குக் கணினி பயன்படுத்தத் தெரியாது. அங்கு வந்து இ-மெயில் அனுப்புவது, பிரவுஸ் செய்வது, சோஷியல் நெட்வொர்கிங் எல்லாமே பழகிக்கொண்டார். ஆக்டிவாக எல்லாப் பத்திரிகைகளுக்கும் இ-மெயில் அனுப்புவார். ஃபேஸ்புக், ட்விட்டர் எனக் கலக்க ஆரம்பித்தார். கல்யாணத்துக்கு முன் பி.எஸ்ஸி முடித்தித்திருந்தவர் 40 வயதுக்கு மேல் எம்.ஏ, எம்.பில் முடித்தார். நான் பத்தாவது தேர்வுக்குப் படிப்பேன். அவர் எம்.ஏ தேர்வுக்குப் படிப்பார். என் சூழ்நிலைகள் என்னைச் சோர்வடைய செய்யும்போது என் அம்மாவே என் இன்ஸ்பிரேஷன்.

என் முயற்சிகள் அனைத்துக்கும் பக்கபலமாக இருப்பார். நான் கல்லூரி படிக்கும் காலத்தில் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் சேர விரும்பினேன். `பொட்ட புள்ளைக்கு இதெல்லாம் எதுக்கு?’ என்ற பேச்சுகளுக்கு நடுவே என்னை ஊக்கப்படுத்தினார். மாணவப் பத்திரிகையாளராகி என் படைப்பு அவள் விகடனில் கவர் ஸ்டோரியாக வந்தபோது என்னைவிட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தவர் என் அம்மா.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் என் அம்மாவுக்கே மீண்டும் மகளாகப் பிறக்கப் விரும்புகிறேன். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் - `பிருந்தாவுக்கு மகளாகப் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும்!’

- இர.அம்பிகா, சென்னை - 4