Published:Updated:

பரதம் ஆடும் பாலே பெண்கள்!

பரதம் ஆடும் பாலே பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பரதம் ஆடும் பாலே பெண்கள்!

ஆச்சர்யம்கானப்ரியா

பரதம் ஆடும் பாலே பெண்கள்!

ஆச்சர்யம்கானப்ரியா

Published:Updated:
பரதம் ஆடும் பாலே பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பரதம் ஆடும் பாலே பெண்கள்!

`புஷ்பாஞ்சலி'யில் தொடங்கியது அன்றைய மாலைப்பொழுது. தொடர்ந்து பல நாட்டிய உருப்படிகளை நேர்த்தியான முகபாவனைகளுடன் அரங்கேற்றினார்கள் அந்தக் கலைஞர்கள். நளினம் சிறிதளவும் குறையாமல் இவர்கள் ஆடியதைக்கண்ட பார்வையாளர்கள், பலத்த கைத்தட்டல்களைப் பரிசளித்தனர். அது சரி... பெண்கள் பரதம் ஆடுவதில் ஆச்சர்யம் என்ன? இவர்கள் இந்தியப் பெண்கள் அல்லர்... பாலே நடனத்துக்குப் புகழ்பெற்ற ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்பதே இதில் வியக்கத்தக்க விஷயம்!  

பரதம் ஆடும் பாலே பெண்கள்!

சென்னையின் `நாட்டியக்ஷேத்ரா’ மற்றும் ரஷ்யாவின் `இந்தியன் கிளாஸ்’ நடனப் பள்ளிகள் இணைந்து நடத்திய `நடனச் சங்கமம் இது. இதில் தமிழ்நாட்டு நடனக் கலைஞர்களுடன் ரஷ்யக் கலைஞர்கள் எழுவர் இணைந்து பரதநாட்டியம், கதக், நாட்டுப்புற நடனம், பாலிவுட் நடனம் எனப் பல்வேறு நடனங்களை ஆடி அசத்தினர்.

வியப்பின் உச்சிக்கே அழைத்துச்சென்ற ரஷ்ய நடனக் கலைஞர்களான அரினா பெர்மோகோர்ஸ்கயா மற்றும் லியூபோவ் இவான்யூக் இருவரும், இருகரம் கூப்பி வணங்கினர். இவர்களிடம் ``பரதக் கலையின் மீது ஆர்வம் வரக் காரணம் என்ன?’’ என்று கேட்டோம்.

``எங்கம்மாவுக்கு இந்தியக் கலாசாரம்மீது அதிக ஆர்வம் உண்டு. பரதநாட்டியம்மீது தனி ப்ரியம். எங்களை ஒவ்வொரு நாளும் நடன வகுப்புக்கு அனுப்பி ஊக்கப்படுத்துவது அம்மாதான். ரஷ்யாவில் பரதம் கத்துக்கிட்டு இந்தியா வந்து ஆடுறதுல ரொம்ப சந்தோஷம்” என்று கூறும்போதே இவர்களின் முகத்தில் அத்தனை பாவங்கள் பளிச்சிடுகின்றன.

``பரதம் மட்டுமல்ல... கதக், பாங்ரா, ஃபோக், கதகளி போன்ற மற்ற இந்திய நடனங்களும் எங்களுக்குத் தெரியும். இன்னும் நிறையா கத்துக்கணும்னு ஆசை. நிச்சயம் கத்துப்போம்” என்கிறார் சுட்டி நடனக்கலைஞர் டேரியா டோரோபோவா.
இந்த அழகு பெண்களின் நடன ஆசிரிய ரான நட்டாலியா பிரான்ஸுஸோவாவிடம் பேசினோம்.

``நான் 25 ஆண்டுகளா நடனம் சொல்லிக் கொடுத்துட்டிருக்கேன். சின்ன வயசிலிருந்தே எனக்கு இந்திய சினிமாமீது ஆர்வம் அதிகம். இந்தியப் பழக்க வழக்கங்கள், உடைகள் எல்லாம் ரொம்பப் பிடிக்கும். ஒரு சிறிய ஊரில் வளர்ந்தவள் நான். நடனப் பயிற்சிக்குச் செல்லும் அளவுக்கு வசதியில்லை. ஆனாலும், இந்திய நடனத்தின் மீதான ஆர்வத்தால் பெரிய அளவில் முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். 

பாலிவுட் நட்சத்திரங்களின் முகபாவனை, நடன முறைகளை இன்டர்நெட்டில் பார்த்து இம்ப்ரெஸ் ஆகியிருக்கேன். என் ரோல்மாடலும் இவர்களே. சென்னையிலிருக்கும் கலாக்ஷேத்ராவில் பயிற்சி எடுத்துக்கிறதுதான் என் லட்சியம்” எனத் தன் நீண்டநாள் ஆசையை வெளிப்படுத்துகிறார் நட்டாலியா.

இனி பரதநாட்டியம்... `ரஷ்யநாட்டியமும்’  கூட!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!