Published:Updated:

“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது!” - கெளதமி

“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது!” - கெளதமி
பிரீமியம் ஸ்டோரி
“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது!” - கெளதமி

நாளை என்பது நம்பிக்கைத.கதிரவன் - படங்கள் : தி.குமரகுருபரன்

“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது!” - கெளதமி

நாளை என்பது நம்பிக்கைத.கதிரவன் - படங்கள் : தி.குமரகுருபரன்

Published:Updated:
“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது!” - கெளதமி
பிரீமியம் ஸ்டோரி
“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது!” - கெளதமி

‘`மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை... ‘இது வேண்டாம்; இது வேண்டும்’ என்று நாமே சுயமாக முடிவு எடுக்கக்கூடியதற்கான வாய்ப்பு எப்போதும் நம்முன் காத்திருக்கவே செய்கிறது. ஆகவே, திருப்தியாக வாழ்வதென்பது அவரவர் கைகளில்தான் இருக்கிறது!’’ - வாழ்வின் அனுபவப் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசும் நடிகை கெளதமியின் வார்த்தைகளில் ஆழ்ந்த ஞானமும் தெளிவும் நிரம்பி நிற்கிறது. 

“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது!” - கெளதமி

நடிகர் கமல்ஹாசனு டனான 13 ஆண்டுக் கால உறவைவிட்டுப் பரஸ்பரப் புரிதலுடன் விலகிவந்தவர், அதன்பிறகு ‘லைஃப் அகெய்ன்’ தொண்டு நிறுவனப் பணிகளில் தன்னை முழுமையாக நிலைநிறுத்திக்கொண் டார். ஆனால், சமீபத்தில், ‘கமல்ஹாசனுடன் தனிப்பட்ட முறையிலோ, தொழில்ரீதியாகவோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை’ என ட்விட்டரில் அவர் பதிவிட்டிருந்தது மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

இதுகுறித்துப் பேசுபவர், ‘`கமல்ஹாசனோடு இப்போதும் நான் இணைந்து செயல்படுவதாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அப்படி எந்தத் தொடர்பும் எங்கள் இருவருக்கிடையே இல்லை. இதைத் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் நான் தெளிவுபடுத்திக் கொண்டிருக்க முடியாது. அதனால்தான் சமூக வலைதளம் வழியாகத் தெரிவித்தேன்’’ என்று சுருங்கக் கூறியவரிடம் அடுத்தடுத்த கேள்விகளை முன்வைத்தோம்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த கடினமான முடிவு என்று எதைச் சொல்வீர்கள்?


அதுபோன்ற நிறைய தருணங்களைக் கடந்துதான் இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். 48 வயதில், ‘என் வாழ்க்கை இனி தனிப்பாதையில்தான் பயணிக்க வேண்டும்’ என்கிற முடிவைக்கூட நானாகத்தானே எடுத்திருக்கிறேன்?

தனித்து வாழ எடுத்த இந்த முடிவு, எத்தகைய வலியை ஏற்படுத்தியது?

இந்தக் கேள்விக்கான பதிலாக நான் எதைச் சொன்னாலும் அது, முடிந்துபோன பழைய கதைக்கே திரும்பத் திரும்பக் கொண்டுபோகும். நான் எடுத்த இந்த முடிவு எந்த மாதிரியான பாதிப்பை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், ‘இந்த முடிவுக்கு என்ன காரணம்? அந்த நேரத்தில் எப்படி உணர்ந்தீர்கள்? எவ்வளவு அழுதீர்கள்?’ போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வருத்தம் இருக்கிறது... ஆனாலும், சந்தோஷம் வரவேற்கிறது!” - கெளதமி

பிரிவுத் துயரிலிருந்து எப்படி மீண்டு வருகிறீர்கள்?

வாழ்க்கையில் எல்லோருக்குமே தனித் தனிக் கடமைகள் உள்ளன.  அந்தவகையில், என் வாழ்க்கைக் கடமைகளை தெளிவுற உணர்ந்து நான் மனப்பூர்வமாக எடுத்துக்கொண்ட முடிவுதானே இது?  ‘அதையெல்லாம் மறந்துவிட வேண்டும்; கடந்துபோக வேண்டும்’ என்றெல்லாம் நாம் என்னதான் முயன்றாலும், சில வருத்தங்கள் கண்டிப்பாக நமக்குள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த வருத்தங்களைவிடவும் வாழ்க்கையில் இன்னும் அழகான விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. நான் சந்தோஷப்படுவதற்கான விஷயங்கள் என் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன.

இழப்பையும் தோல்விகளையும் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

என் வாழ்க்கையில், நான் இதுவரை கடந்துவந்துள்ள தொலைவில் எல்லாமே மகிழ்ச்சிகரமானதாகவும் நல்லவையாகவும் மட்டுமே இருந்ததில்லை. எல்லோரையும் போல நானும் நல்லது கெட்டது அனைத்தையும் கடந்தே வந்திருக்கிறேன். ஆனால், எல்லா அனுபவங்களிலிருந்தும் நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற தெளிவை ஏற்படுத்திக்கொண்டேன். அதனால், என் எதிர்காலத்தை நோக்கி நான் நம்பிக்கையோடு நடைபோடுவதற்கான காரணங்கள் என் முன்னே இறைந்து கிடக்கின்றன.

உங்கள் அனுபவத்திலிருந்து பிறருக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

நமக்கு விருப்பப்பட்ட தொழிலாக ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறோம். அப்போது அதே துறையில் நம்மோடு பயணிப்பவர்களோடு உறவு இருக்கும். அவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலும் இருக்கும். இம்மாதிரியான நேரங்களில், அவரவர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தோல்வி, ஏமாற்றம் என எதிர்பாராத நிகழ்வுகளும் அரங்கேற வாய்ப்பு உண்டு. மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற சூழல்களில், ‘இந்த நாளை நான் எப்படியாவது கடந்துவந்துவிட வேண்டும்; நாளை எனக்கான புதுநாளாகக் காத்துக் கொண்டிருக்கிறது’ என்கிற நம்பிக்கையை மனதுக்குள் திடமாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல... நாளைய அந்த நம்பிக்கையை வென்றெடுக்க இன்றைய தோல்விகளையும் ஏமாற்றங்களையும் ‘கெட்ட கனவாக’ மறந்துவிடாமல், அவற்றிலிருந்தே பாடங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இக்கட் டான அந்தத் தருணத்தில், ‘நான் என்ன பேசினேன்; எப்படி முடிவெடுத்தேன்’ என்பதுபோன்ற நம்முடைய ரியாக்‌ஷன் களையே மறுபரிசீலனை செய்து தெளிவு பெற வேண்டும்.

காதல் விவகாரங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் சமீப காலங்களில் அதிகரித்துவருகின்றனவே..?

ஆண் பெண் என்று பிரித்துப் பேசவேண்டிய விஷயமில்லை இது. ஆண் பெண் உறவில், ஒருவருக் கொருவர் அக்கறை கொண்டிருக்க வேண்டுமே யொழிய, ‘எனக்கு நீ அடிமையாக வேண்டும்’ என்று யார் நினைத்தாலும் அது தவறுதானே? அதனால், இளைய தலைமுறையினர் அனைவருமே கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயமாகவே இதை நான் கருதுகிறேன்.

குழந்தை வளர்ப்பில், பெற்றோரின் பங்கு அல்லது கடமை என்னவென்று கருதுகிறீர்கள்?


பள்ளி போகிற குழந்தையில் ஆரம்பித்துப் பெரியவர்கள் வரை அனை வருக்குமே இன்றைய வாழ்க்கைச் சூழல் நிறைய டென்ஷன்களை ஏற்படுத்திவிடுகிறது.

ஒரு பெற்றோராக ‘நமது குழந்தை நன்றாக இருக்க வேண்டும்’ என நினைப்பதில் தவறில்லை. அதற்காக நமது எண்ணங்களையும் விருப்பங்களையும் குழந்தைகளின் மேல் திணிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

குழந்தைகளின் சந்தோஷத்தைவிடவும் அவர்களது பாதுகாப்பைத்தான் பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதற்காக ‘நான் சொல்கிற கோர்ஸை எடுத்து நீ படிக்காவிட்டால், என்னை உயிரோடு பார்க்க முடியாது’ என்றெல்லாம் மிரட்டுவது கூடாது. அதேநேரம், குழந்தைகளும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை குறித்து பெற்றவர்களுக்கு விளக்கிக்கூற வேண்டும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தன்மை இருக்கிறது. பக்கத்து வீட்டுக்குழந்தை அதிக மதிப்பெண் வாங்கியிருக்கிறதே என்றால், அது அந்தக் குழந்தையின் தனித்தன்மை. அதேபோல, நமது குழந்தையும் அதிக மதிப்பெண் பெற்றே ஆக வேண்டும் என்று எண்ணுவதைவிடவும், நம் குழந்தையின் தனித்தன்மை என்னவென்பதைக் கண்டு பிடித்துக் கொண்டாடுவதுதான் சரியான நடைமுறை.

வாழ்க்கையின் பொன்னான நேரம் பதின்பருவம்தான். அந்தக் காலகட்டத்தில், அவர்களது வாழ்க்கையை அவர்களே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரத்தை பெற்றவர்கள் வழங்க வேண்டியது அவசியம். ஒரு வழிகாட்டியாக ஆலோசனை வழங்கி அவர்களது முயற்சிகளுக்குத் துணை நிற்கலாம். அதுதான் நமது எல்லை.

பொருளாதார ரீதியாக கெளதமி தன்னிறை வான இடத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா?


தேவைகள் எப்போதுமே மாறிக்கொண்டிருப்பவை. என்னைப் பொறுத்தவரை நான் எப்போதுமே கடின உழைப்பாளி. அந்தவகையில், என்னை நம்பியுள்ளவர் களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அளவு சம்பாதித்துக்கொள்கிற தன்னம் பிக்கை எனக்கு எப்போதுமே இருக்கிறது!

- நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளோடு விடைகொடுக்கிறார் கெளதமி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism