Published:Updated:

புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’

புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’
பிரீமியம் ஸ்டோரி
புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’

புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’

புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’

புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’

Published:Updated:
புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’
பிரீமியம் ஸ்டோரி
புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’

ங்களுக்குத் தெரியுமா... குழந்தை பிறந்த பிறகு, பத்துப் பெண்களில் ஏழு அல்லது எட்டுப் பெண்களுக்கு ‘போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ என்கிற மன அழுத்தம் ஏற்படுகிறது என்பது? இது ‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்’  என்றும் அழைக்கப்படுகிறது. `பாப்பா பிறந்த பிறகு அம்மாக்கள் சந்தோஷமாகத்தானே இருக்க வேண்டும்... ஏன் இந்த மன அழுத்தம் வர வேண்டும்’ என்கிறீர்களா? பிரசவித்த பெண்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுவதற் கான காரணங்களையும் தீர்வுகளையும் சொல்கிறார், மூத்த மகப்பேறு மருத்துவர் கீதா அர்ஜுன்.  

புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’

போஸ்ட்நேட்டல் ப்ளூஸ் ஏன் ஏற்படுகிறது?

குழந்தை பிறந்த முதல் அல்லது இரண்டு வாரங்கள் வரைக்கும் ‘ஃபீலிங் சேட்’ (feeling sad) உணர்வு அம்மாக்களுக்கு வருவது சகஜம்தான். இந்தப் பிரச்னை குழந்தை பிறந்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு மட்டும்தான் இருக்கும் என்பதால் பெரிதாகப் பயப்படத் தேவையில்லை.

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவருடைய உடலில் வெள்ளமெனச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள், குழந்தை பிறந்த பிறகு சடாரென வடிந்துவிடும். இதன் காரணமாகத் தான், குழந்தை பிறந்த பெண்களில் பலருக்கும் லேசான மன அழுத்தம், படபடப்பு, கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஆகியவை ஏற்படும். மாதவிடாய் நேரத்தில் வருகிற படபடப்பு, ஸ்ட்ரெஸ் போலத் தான் இதுவும். மாதவிடாய் நேரத்திலும் பெண்களின் உடலில் ஹார்மோன் அளவு குறைந்துவிடும்.

இந்த ஹார்மோன் குறைவுப் பிரச்னையுடன், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காகத் தூக்கம் குறைந்துபோவது, அதனால் ஏற்படுகிற சோர்வு, குழந்தைக்குத் தேவையான அளவு பால் சுரக்கிறதா என்கிற கவலை, குழந்தையின் பாலினம் குறித்து சுற்றத்தினர் பேசும் வார்த்தைகள் என எல்லாமும் சேர்ந்துகொண்டு அம்மாவை போஸ்ட்நேட்டல் ப்ளூஸ் பிரச்னைக்குள் தள்ளிவிடுகின்றன. கவலை வேண்டாம்... இதைச் சமாளிப்பது சுலபம்தான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’

* குழந்தையைத் தாய் அல்லது தந்தை வழிப் பாட்டி, கணவர் என யாருடைய பொறுப்பி லாவது கொடுத்துவிட்டு, அம்மா சிறிது நேரமாவது நிம்மதியாக உறங்க வேண்டும்.

* அம்மா, தன் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் தனது மனச்சோர்வு பற்றி எடுத்துச்சொல்லி, அதிலிருந்து தான் மீள உதவி செய்யச்சொல்லிக் கேட்கலாம். அதாவது, தனக்குத் தேவையான ஓய்வையும் மகிழ்ச்சியையும் கொடுக்கச் சொல்லி அவர்களைக் கேட்கலாம். இவற்றை அவர் கேட்காமலேயே புரிந்து கொண்டு அவருக்கு வழங்கவேண்டியது அந்தக் குடும்பத்தின் பொறுப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

* பிரசவித்த அம்மா சத்தான உணவை, திருப்தியாகச் சாப்பிட வேண்டும். எனர்ஜி, அவரின் எல்லாப் பிரச்னைகளையும் தள்ளி நிறுத்தும்.

* முடிந்தவர்கள் உடற்பயிற்சி செய்யலாம். இல்லையென்றால் காற்றாட கால் மணி நேரம் வெளியில் நடந்துவிட்டு வரலாம்.

போஸ்ட்நேட்டல் ப்ளூஸை எப்போது சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்?

மேலே சொன்ன லேசான மன அழுத்தம் மற்றும் படபடப்பு ஓர் அம்மாவுக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தாலோ, அந்த அம்மாவின் தினசரி வாழ்க்கையே பாதிக்கப் பட்டாலோ போஸ்ட்நேட்டல் டிப்ரஷனாக மாறிவிடுகிறது. இதைக் குடும்பத்தினர் சற்று சீரியஸான விஷயமாகப் பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சில அம்மாக்கள் காரணமே இல்லாமல் அழுவார்கள். சோர்வாக, எரிச்சலாக நடந்துகொள்வார்கள். குழந்தையைச் சரிவரக் கவனித்துக்கொள்ள மாட்டார்கள். சிலர் குழந்தையிடம் முரட்டுத்தனமாகக்கூட நடந்து கொள்வார்கள். தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வார்கள். உச்சபட்சமாக ஒரு சிலர் தற்கொலைகூட செய்து கொள்வார்கள். இதுபோன்ற அதிக மனஅழுத்த சூழலில், அவர்களை உடனடியாக மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது அவசியம்.

- ஆ.சாந்தி கணேஷ்

புரிந்துகொள்வோமா...‘போஸ்ட்நேட்டல் ப்ளூஸ்?’
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism