Published:Updated:

உங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா? - தேவிகா ராமரத்னம்

உங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா? - தேவிகா ராமரத்னம்
பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா? - தேவிகா ராமரத்னம்

வெற்றி ரகசியம்ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

உங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா? - தேவிகா ராமரத்னம்

வெற்றி ரகசியம்ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

Published:Updated:
உங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா? - தேவிகா ராமரத்னம்
பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா? - தேவிகா ராமரத்னம்

``புடவையை நேசிக்கும் ஒரு பெண்ணுக்கு, அதுவே பிசினஸாக மாறினால்..? எனக்கு நடந்தது அதுதான். அதில் வரும் லாபத்தை நெசவாளர்களின் குழந்தைகளுக்குச் செலவழித்தால்..? அதைத்தான் நான் செய்கிறேன்’’ என்று மகிழ்ந்து புன்னகைக்கிறார், பெங்களூரில் வசிக்கும் தமிழ்ப்பெண் தேவிகா ராமரத்னம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை தயாராகும் கைத்தறிப் புடவைகளைத் தனது  www.ithyadee.com இணையதளத்தின் மூலம் விற்பனை செய்கிறார். இவர் அறிமுகம் செய்த காக்டெயில் டிசைன் புடவைகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததுதான் ஹைலைட். புடவைகளைப் பற்றிய பல சுவாரஸ்யமான விவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கும் தேவிகா, கல்லூரிப் பெண்ணின் உற்சாகத்துடன் பேசுகிறார். 

உங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா? - தேவிகா ராமரத்னம்

‘`இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ முடித்துவிட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தபோது, விலை உயர்ந்த மாடர்ன் உடைகளை வாங்க பொருளாதார நிலை இடம்கொடுக்கவில்லை. பாட்டி மற்றும் அம்மாவின் புடவைகளை உடுத்திக்கொண்டு அலுவலகம் செல்ல ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாக, கைத்தறிப் புடவைகள் என்னை வசீகரித்தன. அவற்றை நெசவாளர்களிடமிருந்து நேரடியாக, சுலபத் தவணை முறையில் வாங்க முடிந்தது. செட்டிநாடு காட்டன் புடவைகளை அலுவலகத்துக்கு அணிந்துசெல்வது சுலபமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. கையால் எம்ப்ராய்டரி செய்ததைப்போலவே இழைகளை நெய்து தயாரிக்கும் பேகம்பூர் (கொல்கத்தா) புடவைகளைத் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு உடுத்தினேன். ‘எனக்குப் புடவை கட்டத் தெரியாது’ என்று சொல்வது ஃபேஷனாகி வந்த காலத்தில்தான், நான் உடுத்தும் புடவைகளே எனக்கான அடையாளமாக மாறின. பல நாட்டினர் கலந்துகொண்ட கருத்தரங்கங்கள் மற்றும் என் வெளிநாட்டுப் பயணங்களின்போதும் கைத்தறிப் புடவைகளையே அணிந்தேன்’’ என்கிறவர், இந்த ஆர்வம் தொழிலாக உருப்பெற்றதையும் பகிர்கிறார்.

‘`அலுவலகப் பணியாளர்கள், உறவினர்கள், தோழிகள் எனப் பலரும் நான் உடுத்தும் புடவைகள் குறித்த விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டினர். அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வதற்காக நெய்யும் முறை, பிரின்ட், எம்ப்ராய்டரி, துணிகளின் தரம் மற்றும் கிடைக்குமிடம் பற்றிய மேலதிக விவரங்களை நானும் விரும்பி சேகரிக்கத் தொடங்கினேன். இதற்கென நான் அணுகிய பலரும் தங்களுக்குத் தெரிந்த அரிய தகவல் களையும் அனுபவங்களையும் என்னிடம் பகிர்ந்துகொண்டனர். இதனால் புடவைகளைப் பற்றிய தகவல் களஞ்சியமாகவே மாறிப் போனேன். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்குப் புடவை கட்டத் தெரியாதா? - தேவிகா ராமரத்னம்

அடுத்த கட்டமாக, இந்தியா முழுவதும் உள்ள மகளிர் நெசவாளர் கூட்டமைப்புகளைத் தொடர்புகொண்டேன். ஆரணி ருத்ராட்சம் பார்டர் கொண்ட சில்க் காட்டன், காஞ்சிபுரம் பட்டு, மகேஸ்வரி பட்டு, இகாட், ரூபிரெட், ரயான் சில்க், கார்நெட் ரெட் புடவை என இவற்றைத் தயாரிக்கும் நெசவாளர்களிடமெல்லாம் வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டேன். நம் பாரம்பர்யம் வழக்கொழிந்து போகாமல் காக்கும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களிடமிருந்து நேரடியாகப் புடவைகளை வாங்கி விற்பனை செய்வதற்கென  என் இணையதளத்தை 2015-ல் தொடங்கினேன்’’ என்கிறவருக்கு, அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

‘`இப்போது இந்தியா மட்டுமன்றி வெளிநாடு களுக்கும் புடவைகளை விற்பனை செய்கிறேன். வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தை நெசவாளர் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்குச் செலவிடுகிறேன். இளம் தலைமுறைப் பெண்களைப் புடவை அணிவதில் ஆர்வம்கொள்ளச்செய்வதே என் நோக்கம். ஒவ்வொரு புடவையையும், எனக்கு வாங்குவதைப் போன்ற தனிப்பட்ட ஆர்வம் மற்றும் பரிசீலனைகளுடன் வாங்கி வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்ப்பதே என் வெற்றியின் ரகசியம்’’
- தேவிகா ராமரத்னத்தின் வார்த்தைகளில் அக்கறை யும் தன்னம்பிக்கையும் பளிச்சிடுகின்றன.   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism