Published:Updated:

உணவையும் உடலையும் நேசியுங்கள்!

உணவையும் உடலையும் நேசியுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உணவையும் உடலையும் நேசியுங்கள்!

தியா சேத்திநேற்று இல்லாத மாற்றம்ஆர்.வைதேகி

உணவையும் உடலையும் நேசியுங்கள்!

தியா சேத்திநேற்று இல்லாத மாற்றம்ஆர்.வைதேகி

Published:Updated:
உணவையும் உடலையும் நேசியுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உணவையும் உடலையும் நேசியுங்கள்!

‘`மனசு எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் சரி... கோபமா இருந்தாலும் சரி... அதையெல்லாம் சாப்பாட்டுல காட்ட மாட்டேன். சாப்பிடாம பட்டினி கிடக்கிறதால கஷ்டமோ, கோபமோ தீர்ந்துடப் போறதில்லையே. சாப்பிட்டுட்டுக் கவலைப்படுவோம்.... சண்டை போடுவோம்...’’  

உணவையும் உடலையும் நேசியுங்கள்!

- நடிகை லட்சுமி ஒருமுறை பேட்டியின்போது பகிர்ந்துகொண்ட தகவல் இது.

ஆனால், நம்மில் பலரும் வெறுப்பையும் கோபத்தையும் ஆற்றாமையையும் சாப்பாட்டின்மீதே காட்டுகிறோம். நம்மை நாமே வருத்திக்கொள்வதில் சுகம் காண்கிறோம். கொஞ்சம் எல்லை மீறினாலும் அந்தப் பழக்கம் மனநலப் பிரச்னையாக மாறலாம் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?

டெல்லியைச் சேர்ந்த தியா சேத்தியின் அனுபவம் உணவையும் உணர்வுகளையும் குழப்பிக்கொள்கிறவர்களுக்குப் பாடம்.

‘அனோரெக்சியா நெர்வோசா’, ‘புலிமியா’ ஆகிய இரண்டும் உணவு சீர்குலைவுக் கோளாறுகள்.

உணவைத் தவிர்ப்பது, மிகக்குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்வது, கொஞ்சம் சாப்பிட்டாலும் எடை அதிகரிக்குமோ என்கிற பயம், தோற்றத்தைப் பற்றிய கவலை போன்றவை அனோரெக்சியாவின் அறிகுறிகள்.

சாப்பிடுவது, சிலநேரங்களில் அளவுக்கு அதிகமாகவே சாப்பிடுவது, சாப்பிட்ட உணவு உடலில் தங்கிவிடாதபடி வலிந்து வாந்தியெடுப்பது அல்லது பேதியை வரவழைத்துக்கொள்வது போன்றவை எல்லாம் இரண்டாம் வகையின் அறிகுறிகள். இந்த இரண்டு பிரச்னைகளாலும் பாதிக்கப்பட்டு மீண்டவர் தியா. ஒரு காலத்தில் அவரது வெறுப்புக்குக் காரணமான உணவுதான், இன்று அவருக்கு உயிர்ப்பான விஷயமாகவும் மாறியிருப்பது குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய செய்தி.

‘`அப்பா இந்தியன் அம்பாசடர். அவருடைய வேலை காரணமா சீனா, மலேசியா, பிரான்ஸ்னு நிறைய நாடுகளில் வளர்ந்திருக்கேன். மூணு வருஷங்களுக்கு ஒருமுறை, வேற வேற நாடுகளுக்கு மாற்றலானதால என் குழந்தைப் பருவம் பெரிய குதூகலத்துடன் இருந்ததா எனக்கு நினைவில்லை. எந்த ஊரையும் நாட்டையும் மனசுக்கு நெருக்கமா நினைக்க முடியாத நிலை. பள்ளிக்கூடங்களில் யாருடனும் நட்பு பாராட்ட முடியாத, கிடைச்ச நட்பைத் தொடர முடியாத தர்மசங்கடம் அது. தனிமை நிறைந்த நாள்கள். சக மாணவர்களால நிராகரிக்கப்பட்டிருக்கேன். வித்தியாசமா பார்க்கப்பட்டிருக்கேன். உச்சகட்டமா தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, இனப்பாகுபாடுகளால பெரியளவுல பாதிக்கப்பட்டிருக்கேன். ஒரு பார்ட்டிக்குப் போயிருந்தபோது மாநிறமான என்னைச் சிலர் மிக மோசமான வார்த்தைகளால கிண்டல் பண்ணினாங்க.  என்னைப் பார்த்துச் சிரிச்சாங்க. அவமானத்துடன் வீட்டுக்கு வந்த நான், அன்னிக்கு முழுக்க பட்டினி கிடந்து என்னை வருத்திக்கிட்டேன். அதுமூலமா எதையோ சாதிச்சிட்ட மாதிரி உணர்ந்தேன்.  உணவைத் தவிர்க்கிற ஒவ்வொரு முறையும் மனசளவுல லேசா உணர்ந்தேன். அதைத் திரும்பத் திரும்பச் செய்யணும்னு நினைக்க வெச்சது. தொடர்ந்தது...’’ - நிராகரிப்பின் வலிக்கு வடிகாலாகத் தனக்குத்தானே இன்னொரு வலியைத் தேடிக்கொண்டதைச் சொல்கிறார் தியா.

‘`ஒவ்வொரு வேளையும் சாப்பாட்டைத் தவிர்த்தேன். வீட்டுல கேட்கும்போது சர்வ சாதாரணமா பொய் சொல்லப் பழகினேன். ‘ஏற்கெனவே ஸ்கூல்ல சாப்பிட்டுட்டேன்’, ‘நேத்து நைட் சாப்பிட்டதே இன்னும் அப்படியே இருக்கு’னு ஏதேதோ சொல்லிச் சமாளிக்கக் கத்துக்கிட்டேன். ஆனாலும், அம்மாவுக்கு என்மேல் சந்தேகம். அதனால அவங்க முன்னாடி கொஞ்சமா சாப்பிடுவேன். அவங்க அந்தப் பக்கம் நகர்ந்ததும் உடனே பாத்ரூமுக்கு ஓடி, சாப்பிட்ட கொஞ்ச சாப்பாட்டையும் வலுக்கட்டாயமா வாந்தி எடுப்பேன். என் குடல் காலியான ஃபீலிங் வரும்வரைக்கும் வாந்தி எடுப்பேன். ‘அனோரெக்சியா’வா இருந்த இந்தப் பிரச்னை மெள்ள மெள்ள ‘புலிமியா’வா தீவிரமாச்சு.

கடுமையா பட்டினி கிடக்கிறதுலேருந்து, சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடுக்கிறது வரைக்கும் என்னைப் பல வழிகளிலும் துன்புறுத்திக்கிட்டேன். 30 கிராம் அளவே உள்ள காய்கறிகளைச் சாப் பிடறதும், சிலவேளை சிப்ஸ், சாக்லேட்ஸ், ஃப்ரிட்ஜ்ல உள்ள மிச்சமீதினு இனிமே வயிற்றில் இடமில்லைங்கிற அளவுக்குக் கண்டதையும் சாப் பிடறதும் அப்புறம் பாத்ரூம்ல வாந்தியெடுக்கிறதுமா என்னு டைய பிரச்னை தாறுமாறா இருந்திருக்கு.      

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உணவையும் உடலையும் நேசியுங்கள்!

ஒருகட்டத்துல அம்மாகிட்ட எனக்குப் பிரச்னை இருக்கி றதைச் சொன்னேன். அடுத்த சில வருஷங்களுக்கு மனநல மருத்துவர்கள்லேருந்து தெரபிஸ்ட் வரைக்கும் பலரிடமும் பலவிதமான சிகிச்சைகளை எடுத்துக்கிட்டேன். கடைசியா இங்கிலாந்துல என் பிரச்னைக்கு ஒரு சிகிச்சை கொடுத்தாங்க. பலவிதமான அடிமைத்தனங்களால பாதிக்கப்பட்டவங்க அங்கே சிகிச்சை எடுத்துக்கிட்டிருந்தாங்க.  அதையும் நிராகரிச்சேன். அப்புறம் இந்தியா வந்தோம். அங்கே வந்ததும் என் பிரச்னையின் தீவிரம் உச்சத்துக்குப் போனது. இனியும் தாமதிக்கிறது சரியில்லைனு தோணுச்சு. டெல்லியில ஓர் ஆயுர்வேத டாக்டரை சந்திச்சேன். அவர்தான் என் பிரச்னையைக் கண்டுபிடிச்சு... எப்போ, எப்படி, என்ன சாப்பிடணும்னு சொல்லிக்கொடுத்தார். சிறுமியா இருந்தபோதிலிருந்து நான் சந்திச்ச அவமானங்கள், புறக்கணிப்புகள், வலிகள்னு எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டு சிகிச்சைகள் கொடுத்தார். கூடவே யோகாவும் செய்யப் பழகினேன். மெள்ள மெள்ள எனக்குள்ள மாற்றங்களை உணர்ந்தேன். நான் வாழறதுக்கு ஓர் அர்த்தம் இருக்கிறது புரிஞ்சது. என் உடலைப் புரிஞ்சுக்கவும், சிகிச்சைகளுக்கு ஒத்துழைச்சு, என் பிரச்னைகள்லேருந்து வெளியில வரவும் எனக்கு 10 வருஷங்கள் ஆனது...’’ - மீள்கதை சொல்பவர், லண்டனின் மிகப் பிரபலமான `லீ கார்டன் ப்ளூ'வில் பயிற்சி பெற்ற செஃப் ஆக உயர்ந்தவர்.

தன் போராட்ட வாழ்க்கையை ‘தி அடிக்ட் - எ லைஃப் ரெகவர்டு’ என்கிற பெயரில் புத்தகமாக எழுதியிருக்கிறார்.

‘`என் அனுபவங்களை அடுத்தவங்களுக்குச் சொல்றது மூலமா என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்களை மீட்க முடியும்னு தோணுச்சு. அதுக்கான முதல் முயற்சியாத்தான் இந்தப் புத்தகத்தை எழுதினேன். இன்னிக்கு என்னால என் பசியைச் சரியா ஃபீல் பண்ண முடியுது. என்ன வேணுமோ அதைச் சாப்பிட முடியுது. எவ்வளவு வேணுமோ அவ்வளவு சாப்பிடறேன். அதை ஈடுகட்ட எக்சர்சைஸ் பண்ணி உடம்பை ஃபிட்டா வெச்சுக்கவும் கத்துக்கிட்டேன்.

புத்தகம் எழுத நான்கு வருஷங்களாச்சு. ஆனா, அதை எழுதும்போது நான் என் 26 வருஷ கடந்த காலத்தை மறுபடி வாழ்ந்தது போலவே இருந்தது. அதைக் கடக்கறதுதான் பெரிய சவாலா இருந்தது.  இந்தப் புத்தகம் பலரின் கண்களைத் திறக்கும்னு நம்பறேன்.

பிரச்னைகள்லேருந்து மீண்டதும் எனக்கு உணவின் மீது புதிய தேடலும் விருப்பமும் உருவானது. லீ கார்டன் ப்ளூவில் எனக்குக் கிடைச்ச அனுபவம் என் சுவை, வாசனை, ஒலி மற்றும் ஒளி உணர்வுகளைத் தூண்டினது. இப்போ நான் டெல்லியில உள்ள சில ரெஸ்டாரன்ட்டுகளில் ஃபுட் கன்சல்ட்டன்ட்டா இருக்கேன்.

உணவுதான் என் அடிமைத்தனத்துக்கான அடிப்படைக் காரணமா இருந்தது. அதே உணவுதான் இப்போ என்னை மீட்டெடுத்து என் வாழ்க்கையை நேசிக்கவும் வெச்சிருக்கு. எனக்கு நானே விசுவாசமா இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கேன்.’’

உணவையும் உடலையும் நேசிக்க வைக்கிறது தியாவின் கதை.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism