Published:Updated:

முதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்! - ருக்கையா காத்தூன்

முதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்! - ருக்கையா காத்தூன்
பிரீமியம் ஸ்டோரி
முதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்! - ருக்கையா காத்தூன்

முதல் பெண்கள்நிவேதிதா லூயிஸ் - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

முதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்! - ருக்கையா காத்தூன்

முதல் பெண்கள்நிவேதிதா லூயிஸ் - ஓவியம் : கார்த்திகேயன் மேடி

Published:Updated:
முதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்! - ருக்கையா காத்தூன்
பிரீமியம் ஸ்டோரி
முதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்! - ருக்கையா காத்தூன்

``ஒரு சதுரப் பலகையின் மேல் இரண்டு இருக்கைகளைப் பொருத்தினாள். அதன்கீழ் இரண்டு உருண்டைகளையும் சேர்த்தாள். அவை என்ன என்று கேட்டதற்கு, ஹைட்ரஜன் பந்துகள் எனவும் புவிஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் எழும்பும் ஆற்றலைத் தருவன என்றும் கூறினாள். அந்த வானூர்திக்கு இறகு போன்ற இரு பிளேடுகளைப் பலகையில் பொருத்தினாள். அவை மின்சக்தியால் இயங்குவன என்றும் கூறினாள். நாங்கள் இருவரும் வசதியாக அமர்ந்து கொண்டபின் ஒரு பொத்தானைத் திருகினாள். பிளேடுகள் இரண்டும் வேகமாகச் சுழலத் தொடங்கின. முதலில் ஏழடி உயரத்துக்கு எழும்பிய வானூர்தி, பின் இன்னும் உயரே பறக்கத் தொடங்கியது. அதை நான் பூரணமாக உணரும் முன்னரே அரசியின் தோட்டத்தை அடைந்திருந்தோம்.” - (1905-ம் ஆண்டு அன்றைய மதராஸிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பெண்கள் இதழான `தி இந்தியன் லேடீஸ் மேகஸின்’ வெளியிட்ட ருக்கையா பேகம் எழுதிய குறுநாவலில் இருந்து...) 

முதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்! - ருக்கையா காத்தூன்

1880-ம் ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவின் ரங்கபூர் சிறுகிராமத்தில் (இன்றைய பங்களாதேஷ்) ஜமீன் குடும்பத்தில் பிறந்தார் ருக்கையா காத்தூன். அவரின் தந்தைக்கு நான்கு மனைவியர். தன் வீட்டுப் பெண்களின் கல்வியறிவு அரபு அல்லது பெர்சிய பொழியில் இருக்க வேண்டும் என்று எண்ணிய அவரின் தந்தையிடம் சண்டையிட்டு, தன் தமக்கை கரிமுன்னிசாவுடன் சேர்ந்து வங்காள மொழியில் அடிப்படைக் கல்வி பெற்றார் ருக்கையா.

18 வயதில் சகாவத் ஹுசைன் என்கிற நீதிபதிக்கு இரண்டாவது தாரமாக மணம் முடித்துக்கொடுக்கப்பட்டார் ருக்கையா. பர்தா முறையைக் கடுமையாகச் சிறு வயது முதலே எதிர்த்துவந்த ருக்கையா மேல்படிப்பைத் தொடரவும், ஆங்கிலமும் வங்காள மொழியும் கற்கவும் ஊக்கம் தந்தார், இங்கிலாந்தில் படித்தவரான சகாவத். மனைவியின் எழுத்துத் திறமையை அடையாளம் கண்டுகொண்டு, மக்களின் மொழியான வங்காள மொழியில் எழுதுமாறு பணித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதல் அறிவியல் புனைகதை பெண் எழுத்தாளர்! - ருக்கையா காத்தூன்1902-ம் ஆண்டு `பிபாசா’ என்ற வங்க மொழிச் சிறுகதையில் தொடங்கியது ருக்கையாவின் எழுத்துப் பயணம். அதன்பின் 1903-ம் ஆண்டு முதல் `நபனூர்' எனும் இதழில் எழுதினார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எழுதிக் குவித்த ருக்கையா, ஊருக்குச் சென்ற கணவர் திரும்பி வருகையில் அவருக்குத் தந்த நூதனப் பரிசுதான், `சுல்தானாவின் கனவு’ குறுநாவல். 1905-ம் ஆண்டு ஆங்கிலத்தில் இதை எழுதினார் ருக்கையா. `லேடி லாண்டு’ என்கிற கற்பனையான பெண்ணிய உலகத்தைப் பற்றிய கதையான சுல்தானாவின் கனவுதான் இந்தியாவில் தோன்றிய முதல் பெண்ணிய அறிவியல் புனைகதை படைப்பு.

1903-ம் ஆண்டு விமானத்தைக் கண்டுபிடித்திருந்தனர் ரைட் சகோதரர்கள்.  `சுல்தானாவின் கனவு’ குறுநாவலில் விமானம் ஒன்று ஹைட்ரஜன் வாயு கொண்டு இயங்கும் யுக்தியைக் கற்பனையில் எழுதியிருப்பார் ருக்கையா. இன்றும் `ஸீரோ-எமிஷன்' எரிபொருளாகப் பார்க்கப்படுகிறது ஹைட்ரஜன். மனைவியின் கதையைப் படித்து மனம் மகிழ்ந்தார் சகாவத். இந்தக் கதை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அவருடைய எழுத்துகளில் இருந்த கற்பனை, மெல்லிய நையாண்டி, சூடான பெண்ணிய விவாதங்கள் என எல்லாம் சேர்ந்து அவரைக் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் ஆக்கின.

அதன்பின் `மதிசூர்’, `பத்மராக்’ (இன்னும் ஒரு பெண்ணியக் கற்பனை உலகக் கதை), அபரோத்பாசினி, பொலிகர்த்தோ எனக் கதைகளும் கட்டுரைகளுமாக எழுதிக்குவித்தார்.

சகாவத் - ருக்கையா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன. துக்கத்திலிருந்து மீள்வதற்காக ருக்கையா தன் எழுத்தில் கவனம் செலுத்தினார். துரதிர்ஷ்டவசமாக, 1909-ம் ஆண்டு சகாவத் மரணம் அடைந்தார். அப்போதும் துவண்டுவிடவில்லை ருக்கையா. கணவர் இறந்து ஐந்து மாதங்களில், அதே ஊரில் சகாவத் நினைவு பெண்கள் பள்ளியைத் தொடங்கினார்.

1911-ம் ஆண்டு கொல்கத்தாவுக்கு இடம் மாறியது பள்ளி. பள்ளிக்கு இஸ்லாமிய மாணவிகளை ஈர்க்க புதிய யுக்திகளைக் கையாண்டார் ருக்கையா. பள்ளிக்கு மாணவிகள் வந்து செல்ல குதிரை வண்டிகளை ஏற்பாடு செய்தார். வங்காளம், உருது, பெர்சிய மொழிகள், முதலுதவி, சமையல், செவிலிப் பணி, தையல், உடற்பயிற்சி, இசை என அனைத்தும் அவரது பள்ளியில் கற்றுத்தரப்பட்டன.

1916-ம் ஆண்டு அன்ஜுமன்-இ-கவதீன்-இ-இஸ்லாம் என்ற இஸ்லாமியப் பெண்களுக்கு உதவும் அமைப்பு ஒன்றையும் நிறுவினார். பொருளாதார உதவி, பாதுகாப்பு எனப் பல உதவிகளை ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கினார். குடிசைப் பகுதிகளில் வாழும் பெண்களுக்குக் கல்வியும் குழந்தை வளர்ப்பும் கற்றுத் தந்தார்.

1926-ல் வங்காளப் பெண்கள் கல்வி மாநாட்டுக்குத் தலைமை தாங்க அழைக்கப் பட்டார் ருக்கையா. “இந்த இடத்தில் அமர எனக்குத் தகுதி இல்லை. வாழ்நாள் முழுக்க பர்தாவுக்குப் பின்னால் வாழ்ந்த பெண் நான். தலைமை தாங்குவது என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. சிரிப்பதா, அழுவதா?” என்று மறுத்துவிட்டார் ருக்கையா 1932-ம் ஆண்டு மறைந்த ருக்கையாவின் பேரில் சாதனைப் பெண்களுக்குப் பதக்கம் வழங்கிவரும் பங்களாதேஷ் அரசு, டிசம்பர் ஒன்பதாம் தேதியை ருக்கையா தினமாகக் கொண்டாடுகிறது. ருக்கையாவின் பெயரில் ஒரு பல்கலைக்கழகமும் இயங்கி வருகிறது. 

தன்னம்பிக்கைக் குறைவுக்கு யார் காரணம்?

“ந
ம் போன்ற பெண்களின் தன்னம்பிக்கைக் குறைவுக்கு யார் காரணம்? நமக்குச் சரியான வாய்ப்பு கிடைக்காதது காரணமாக இருக்கலாம். வாய்ப்பு இல்லாததால் சமூகப் பணிகள் அனைத்திலும் நாம் விலகி இருக்கிறோம்.

பணிந்து போக ஆரம்பித்ததால் ஆண்கள் பெண்களை அடக்கி ஆரம்பிக்கத் தொடங்கினர். சோம்பல்கொள்ள ஆரம்பித்தனர் பெண்கள். இந்தச் சோம்பலுக்கு அடிமையும் ஆகினர்; அப்படியே அதற்குக் காரணமான ஆண்களுக்கும்!”
 
- ருக்கையாவின் ஒரு கட்டுரையிலிருந்து. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism