Published:Updated:

நமக்குள்ளே!

நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

நமக்குள்ளே!

Published:Updated:
நமக்குள்ளே!
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே!

டந்த சில தினங்களாக இந்தியாவை உலுக்கிக்கொண்டிருக்கும் இரு சம்பவங்கள்... ‘எதிர்காலத்தில் பெண்களின் பாதுகாப்பு இன்னும் மோசமாகிவிடுமோ?’ என்கிற அச்சத்தை அனைவர் மனதிலும் விதைத்திருக்கிறது.

நமக்குள்ளே!உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் பதினேழு வயது இளம்பெண், வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். ஆனால், எட்டு மாதங்களுக்கும் மேலாக அந்தப் பெண் போராடியும் வழக்கு பதிய மறுத்துவிட்டது காவல் துறை. அதன்பின் நடந்தது அநியாயத்தின் உச்சம். விசாரணை என்கிற பெயரில் அவரின் தந்தை அடித்தே கொல்லப்பட்டதுதான். எல்லாவற்றுக்கும் காரணம், வன்புணர்வுக் குற்றச்சாட்டில் சிக்கியவர், அந்த மாநிலத்தை ஆளும் பிஜேபி-யின் சட்டமன்ற உறுப்பினர். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வீட்டின்முன் குடும்பத்தினருடன் அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்றபோதும், அதிகார வர்க்கம் அசையவே இல்லை. ஊடக வெளிச்சத்துக்குப் பிறகே, வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் எட்டு வயதுச் சிறுமி, கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருப்பது பேரதிர்ச்சி. ‘இப்படியொரு கொடூரத்தைச் செய்தால், அந்தச் சிறுமி சார்ந்த நாடோடி இனத்தினர் ஊரைவிட்டே ஓடிவிடுவார்கள் என்கிற காரணத்துக்காக இதைச் செய்துள்ளார்கள்’ என்று கூறப்படுகிறது. உயர்சாதி இந்துக்கள் எனச் சொல்லிக்கொள்ளும் எட்டுப் பேர், காட்டில் குதிரை மேய்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமியைக் கடத்திச் சென்று மயக்கநிலையில் வைத்து, தொடர்ந்து வன்புணர்வு செய்து வந்துள்ளனர். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்... அந்த ஊரின் தேவி கோயில். முக்கியக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருப்பவர் கோயில் குருவான
60 வயது சஞ்சி ராம். குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களில் இருவர் சிறப்பு போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள். கடைசியில் சிறுமியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொலை செய்தவர்கள், பிறப்புறுப்பைச் சிதைத்துச் சடலத்தைக் காட்டில் வீசியுள்ளனர். நான்கு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கத்துவா போலீஸார், தடயங்களை அழித்துள்ளனர்.

உலகையே உலுக்கிய நிர்பயா வன்புணர்வு மற்றும் கொலைச் சம்பவம் நடந்து ஆறாண்டுகள் கடந்த பின்னும், ஆட்சிதான் மாறியிருக்கிறதே ஒழிய... பெண்களின் பாதுகாப்புக்கு இதுவரை எந்த உத்தரவாதமும் இல்லை என்பதுதான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சட்டம், காவல், அரசியல், மதம், சாதி என அனைத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்குத் துணைபோய்க்கொண்டிருக்கும் கொடுமைக்கு என்றுதான் முற்றுப்புள்ளியோ?

உரிமையுடன்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நமக்குள்ளே! 

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism