Published:Updated:

இசையே எனக்கு போதும்! - எழுத்தாளர் தமயந்தி

இசையே எனக்கு போதும்! - எழுத்தாளர் தமயந்தி
பிரீமியம் ஸ்டோரி
இசையே எனக்கு போதும்! - எழுத்தாளர் தமயந்தி

எனக்குள் நான்ஆர்.வைதேகி - படங்கள் : கே.ராஜசேகரன்

இசையே எனக்கு போதும்! - எழுத்தாளர் தமயந்தி

எனக்குள் நான்ஆர்.வைதேகி - படங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
இசையே எனக்கு போதும்! - எழுத்தாளர் தமயந்தி
பிரீமியம் ஸ்டோரி
இசையே எனக்கு போதும்! - எழுத்தாளர் தமயந்தி

ழுத்தில் தொடங்கி, பாடலில் தொடர்ந்து, இப்போது இயக்கத்தில் ஈடுபட்டுள்ள தமயந்தி, தான் எழுத்தாளராக நிலைநிறுத்திக்கொள்ள மேற்கொண்ட போராட்டம் பற்றியும் சினிமா கனவுகள் பற்றியும் சென்ற இதழில் பகிர்ந்துகொண்டார். வசீகரமான சினிமா உலகம் முதல் அதிர்ச்சி அளிக்கும் மன உலகம் வரை இந்த இதழில் தொடர்கிறார். 

இசையே எனக்கு போதும்! - எழுத்தாளர் தமயந்தி

நம்பிக்கை இருக்கிறது!

தமிழ் வாழ்க்கையை, தமிழ் ரசனையை, தமிழர்களின் சிந்தனையைச் சொல்ல கோடிகள் தேவையில்லை என்பதை நான் இயக்கும் படம் எனக்குப் புரியவைத்தது. மக்களுக்கான சினிமாவாக மாறும்போது குறைந்த பட்ஜெட்டில் செய்ய முடியும்.

ஆனால், முதல் பட வாய்ப்பைப் பெறுவது என்பது மிகப்பெரிய அக்னிப்பரீட்சை. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். அப்படியே அந்த அக்னிப்பரீட்சையைத் தாண்டி முதல் வாய்ப்பைப் பெற்று, அந்தப் படத்தை ஹிட்டாக்கிக் காட்டினாலுமே அடுத்த வாய்ப்பைப் பெறுவதும் போராட்டம்தான். ஓர் ஆண்மீது பெரும் பணத்தை முதலீடு செய்வதில் யாருக்கும் தயக்கம் இருப்பதில்லை; பெண்மீது முதலீடு செய்யத் தயாராகவும் இருப்பதில்லை.

பாலியல் தாக்குதல்கள், கேரக்டர் அசாசினேஷனெல்லாம் இங்கே சகஜமாக நடக்கும். அதற்குச் சுருங்கி உள்ளேபோனால் முடியாது. நானோ, குட்டிரேவதியோ வந்தால் எங்களுக்குப் பின்னால் இன்னும் சிலர் வருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பெண்களை சினிமாத் துறைக்கு அனுப்புவதில் குடும்பத்தாருக்கே தயக்கம் இருக்கிறது. `எப்படித் திருமணமாகும்?' எனக் கேள்வி எழுப்பி, அச்சத்தை உண்டுபண்ணுகிறது. இதை எதிர்கொண்டு, துணிந்துவரும் பெண்களால் தான் இங்கு தாக்குப்பிடிக்க முடியும்.

புதிய புன்னகை

எழுத்து, சினிமா தவிர, பென்சில் ஓவி யங்கள் வரைவேன். நீண்ட நாள்களுக்குப் பிறகு இப்போது மறுபடியும் அதில் அதிக ஆர்வமாகியுள்ளேன்.

பயணங்கள் ரொம்பப் பிடிக்கும். இவைதாம் மூன்றுமுறை தற்கொலை முயற்சிகளிலிருந்து என்னை மீட்டன. புதிய மனிதர்களின் அறிமுகமும் அவர்களது புன்னகையும் என் வாழ்வின் மிகப்பெரிய விஷயங்கள்.

நல்ல சாப்பாடு, நல்ல சூழலில் வாழ்க்கை, இசை. இவை மட்டுமே எனக்குப் போதுமானவை. சொத்து சேர்ப்பதற்காக உழைப்பதில் நம்பிக்கையில்லை. அந்தத் தேடலில், `வாழ மறந்துவிடுகிறோமோ' எனத் தோன்றுகிறது.

நாமே நம் துயரமும் நம் சந்தோஷமும்

ஒருகட்டத்தில் திருமண பந்தத்திலிருந்து வெளியே வந்தேன். அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல் என்னை நரம்புத்தளர்ச்சியில் தள்ளியது. `சத்தம் போடாதே' படத்தில் வருவதுபோல கைகள் நடுங்கின. வலது கை செயல்படாமல், வேலையிடத்தில் நிறைய தவறுகள் செய்தேன். விவாகரத்தானவள் என்ற காரணத்தால் இந்தச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டேன். பலவீனமான மனதுடன், துவண்ட தருணங்களில் `இந்த உலகத்தில் எனக்கு என யாருமில்லை!' என நினைத்திருக்கிறேன். மரணத்தைப் பற்றி நான் அதிகம் யோசித்திருக்கிறேன். வாழ்தல் கொடிது என்கிறபோது, மரணம் இனிதாக இருக்கும் என முன்பு நினைத்திருக்கிறேன். `மரணம் என்பது, பிரிவு அல்ல; ஓய்வுபெற்ற இயந்திரமான உடலிலிருந்து உயிர் கழன்றுக் கொள்கிறது' என இன்று புரிகிறது.  `கோழைகள்தாம் தற்கொலை செய்வார்கள்' என்பதை நான் ஏற்க மாட்டேன். தற்கொலை செய்துகொள்ள மிகப்பெரிய தைரியம் வேண்டும். தற்கொலை உந்துதல் வரும்போது, தமிழக அரசின் `104 சேவை' மூலமாகப் பலமுறை பேசியிருக்கிறேன். அவர்கள்  24 மணி நேரம் தொடர்ந்து நம்மைக் கண்காணிப்பார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இசையே எனக்கு போதும்! - எழுத்தாளர் தமயந்தி

இந்த உலகத்தில் எல்லோருக்கும் ஒரு துணை தேவை. துணை என்றதும் திருமணம் என அர்த்தமில்லை. தனிமைப்பட்டுத் தற்கொலை முயற்சிகள் செய்தபோது, என் தோழி `நீ ஒழுங்கா தற்கொலை செய்யப் பழகு. ஒவ்வொரு முறையும் உன்னைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போக முடியலை' என்றாள். முதன்முறை முப்பது மாத்திரைகளைக் குளிர்பானத்தில் கரைத்துக் குடித்தேன். ஸ்டமக் வாஷ் கொடுத்துக் காப்பாற்றினார்கள். அதன் பிறகான ஆறு மாதங்கள் சரியாகச் சாப்பிட முடியாமல் பட்ட அவஸ்தை கொடுமையிலும் கொடுமை.

மனோதத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டு, அந்த எண்ணத்திலிருந்து மீண்டேன். நாம்தாம் நம் துயரமும் மீட்பும் சந்தோஷமும் என்பது இன்று புரிகிறது. 

சில்வியா பிளாத் கவிதைகளை மொழிபெயர்த்தபோது, பலரும் என்னைத் தடுத்தார்கள். சில்வியா, மைக்ரோவேவ் அவனில் தலையை வைத்து இறந்துபோனவர். என்னைப்போல ஒருத்தி என்பதற்காகவே நான் அவர் கவிதைகளை மொழிபெயர்த்தேன். தற்கொலை என்பது, பலரும் நினைக்கிற மாதிரி சாதாரணமானதல்ல. நாம் போய்விடுவோம். அதன்பிறகு போஸ்ட்மார்ட்டம், வழக்கு போன்றவற்றை எதிர்கொள்ளப்போகிறவரின் துயரை யார் யோசிக்கிறார்கள்?

என்னுடைய `தடயம்' படமே ஒரு தற் கொலையில்தான் ஆரம்பிக்கும்.  நாம் நிறைய விஷயங்களைப் பேசாமல் தவிர்ப்பதால்தான், அவை நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

மீ டூ?

ஏழாம் வகுப்பில் நீச்சல் பழகியபோது முதல் அனுபவம். உறவினரின் நண்பர்தான் சொல்லிக்கொடுத்தார். கற்றுக்கொடுக்கும் சாக்கில் என் உடலில் தொடக்கூடாத இடங்களைத் தொட்டு நீந்திக்கொண்டிருந்தார். அந்த வயதில் அது புரியாவிட்டாலும் ஏதோ தவறு எனத் தோன்றி வெளியே வந்துவிட்டேன். நீச்சல் தெரிந்தாலும் இன்று வரை நான் நீந்த மாட்டேன். காரணம், அந்தத் தாக்கமாகக்கூட இருக்கலாம். திருமண உறவில் இதுபோன்ற வன்முறையை அதிகளவில் சந்தித்திருக்கிறேன்.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குப் பேருந்துப் பயணம். களைப்பில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த என்மீது ஓர் உருவம் கவிழ்ந்ததை உணர்ந்தேன். சாராய நெடி தாங்காமல் திடுக்கிட்டு அலறி எழுந்தேன். நான் தள்ளியதில் அந்த ஆண், பின்னால் போய் விழுந்தான். சக பயணிகள் அனைவரும் கண்களைத் திறந்துப் பார்த்துவிட்டு மீண்டும் தூக்கத்தைத் தொடர்ந்தார்கள். டிரைவர் உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஊரில் போய் இறங்கியதும் அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய் காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்கு பதியச் சொன்னேன்.  மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்தான். அடுத்த நாளே எனக்கு `டிஜிபி பேசறேன்... நீ பஸ்ல பிராஸ்டிட்யூஷன் பண்ணியிருக்கே...' என்று அநாமத்து அழைப்பு. மீண்டும் காவல் துறையிடம் புகார் செய்து, அவனைக் கண்டுபிடித்துக் கூப்பிட்டு விசாரித்தபோது `சிஸ்டர்' என அழைத்து அவன் என் கால்களில் விழுந்தான். அவனுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் இருந்தனர். அடுத்த வாரம் அமெரிக்கா போக வேண்டியவன். மனைவிக்கு, கணவன்மீது அசாத்திய நம்பிக்கை. `என் புருஷன் ஒண்ணும் செய்யலை. அவங்கதான் கூப்பிட்டிருப்பாங்க' என்றார். வழக்கு தொடர்ந்தேன். பிறகு, அந்த வழக்கு ஒன்றுமில்லாமல்போனது வேறு கதை.

 `ஐ வான்ட் டு ஸ்லீப் வித் யூ' என்று கேட்கிற ஆண்களை, எல்லாத் தளங்களிலும் பார்க்கிறேன். கேட்பது அவன் உரிமை என்பதைப்போல மறுப்பதை என் உரிமையாக நினைக்கிறேன். இந்தச் சமூகமே மிகப்பெரிய பாலியல் வறட்சியில் இருக்கிறது. இந்த விஷயத்தில் ஆண் பிள்ளைகளும் வன் முறைக்குள்ளாக்கப்படுகிறார்கள். சரா சரி வயதுள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் எந்த மாதிரியான பாலியல் தேவைகள் இருக்கின்றன என, சமூகம் ஆராய வேண்டும். ஆனால், அவற்றைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறோம். அதனால்தான் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. ஆறு வயதுப் பெண் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்ய எந்த ஆணுக்காவது தோன்றுமா? ஏன் தோன்றுகிறது என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

சிறுவயதிலிருந்தே பெற்றோர், பிள்ளைகளிடம் செக்ஸைப் பற்றி என்ன பேசுகிறோம், எப்படிப்பட்டப் புரிந்துணர்வை உருவாக்குகிறோம் என்பது முக்கியம். நாமெல்லாம் கற்பு, கலாசாரக் காவலர்கள் எனப் பேசிக்கொண்டிருக்கிறோம்.

சினிமாவில் தனிப்பட்ட முறையில் எனக்கு அத்தகைய அனுபவங்கள் இல்லை. ஆனால், நிறைய பேர் நிறைய சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேடைகளில் பெரிய புரட்சியும் பெண் விடுதலையும் பேசும் இயக்குநர்கள்கூட இரவில் நடிகைகளுக்கு போன் செய்து முத்தம் கொடுப்பதும், தன்னுடன் இருக்கச் சொல்லிக் கேட்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அடுத்து?

`தடயம்' ரிலீஸுக்காகக் காத்திருக் கிறேன். குட்டிரேவதியுடன் இணைந்து இன்னொரு படம் பண்ணப் போகி றேன். அதைத் தாண்டி மற்றொரு கதையும் மனதில் இருக்கிறது. எம்.ஜி.ஆர் இறந்தது முதல் ஜெயலலிதா இறப்பு வரை திராவிட அரசியல் பற்றி `வதை' என்றொரு நாவல் எழுதியிருக்கிறேன். சினிமா வேலைகளை முடித்த பிறகு, இந்த வருடத்துக்குள் அதை வெளியிடத் திட்டம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism