Published:Updated:

10/10 பத்துக்குப் பத்து!

10/10 பத்துக்குப் பத்து!
பிரீமியம் ஸ்டோரி
10/10 பத்துக்குப் பத்து!

கலைடாஸ்கோப்ப.தினேஷ்குமார்

10/10 பத்துக்குப் பத்து!

கலைடாஸ்கோப்ப.தினேஷ்குமார்

Published:Updated:
10/10 பத்துக்குப் பத்து!
பிரீமியம் ஸ்டோரி
10/10 பத்துக்குப் பத்து!
10/10 பத்துக்குப் பத்து!

சிருஷ்டி டாங்கே, நடிகை

பிடித்த படம் 

10/10 பத்துக்குப் பத்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பிரேக்ஃபாஸ்ட் அட் டிஃபனி'ஸ் (Breakfast at Tiffany's) என்ற ஹாலிவுட் மூவிதான் என்னுடைய ஆல்டைம் பேவைரைட். ரொம்பவே ரொமான்டிக். ஆட்ரே ஹெப்பர்ன் ஹீரோயின். அவ்வ்... செம பப்ளியா இருப்பாங்க. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தர்ற படம். செமயா டிசைன் பண்ணிருப்பாங்க. நான் லெவன்த் படிக்கும்போதுதான் இந்தப் படத்தை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன். எத்தனை முறை பார்த்திருப்பேன்னு சொல்லவே முடியாது.''

10/10 பத்துக்குப் பத்து!
10/10 பத்துக்குப் பத்து!

ரக் ஷிதா, நடிகை 

10/10 பத்துக்குப் பத்து!தீராத ஆசை

“எ
னக்குச் சின்ன வயசுல இருந்தே ஆடு மாடுகள்னா ரொம்பப் பிடிக்கும். வீட்டு விலங்குகளுக்காக ஒரு பண்ணை அமைக்கணும்னு ஆசை. அந்த விலங்குகளுக்குத் தேவையான உணவுகளையும் எங்க வயலிலேயே சாகுபடி செய்யணும். ஆறாவது படிக்கும்போதே இந்த எண்ணம் எனக்குத் தோணுச்சு. நான் சம்பாதிச்ச காசுலதான் இந்தப் பண்ணையை உருவாக்கணும்னு ஒரு கொள்கையோடு இருக்கேன்.''

10/10 பத்துக்குப் பத்து!

சைந்தவி, பாடகி 

10/10 பத்துக்குப் பத்து!கேட்ட இசை

“ச
மீபத்திலே, `தி தெளசண்ட் இயர்ஸ்' பாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சது. `The Twilight Saga' படத்துல வரும் இந்தப் பாடல். இதைக் கேட்டவுடனேயே ரொம்பப் பிடிச்சுப்போச்சு. நான் எப்பவுமே  ஏதாவது ஒரு பாட்டை முணுமுணுத்துக்கிட்டே இருப்பேன். இப்போ, இந்தப் பாடலை தான் முணுமுணுத்துட்டிருக்கேன். கேட்டுப்பாருங்க... உங்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.''

10/10 பத்துக்குப் பத்து!

மாஷா நசீம், விஞ்ஞானி

கடைப்பிடிக்கும் பழக்கம்

“எ
ன் ஸ்டூடண்ட்ஸ் அவங்களுக்குத் தோணும் ஐடியாஸையும் சந்தேகங்களையும் எனக்கு மெயில் அனுப்புவாங்க. எவ்வளவு வேலைகள் இருந் தாலும் அவங்களுக்குப் பதில் அனுப்பிட்டுதான் மறுவேலை பார்ப்பேன். அப்துல் கலாம் சார் எவ்வளவு வேலையிருந்தாலும் அவருக்கு வரும் மெயிலுக்கு 24 மணி நேரத்துக்குள்ளே பதில் அனுப்பிடுவார். அவரைப் பார்த்து இன்ஸ்பையர் ஆகித்தான் இந்தப் பழக்கத்தை ஃபாலோ பண்றேன்.''  

10/10 பத்துக்குப் பத்து!

விஜி சந்திரசேகர், நடிகை

வாங்கிய பொருள் 

10/10 பத்துக்குப் பத்து!

``அண்மையில ஒரு செஸ்போர்டு வாங்கினேன்.  இந்த செஸ்போர்டு ஒரு டேபிள் போலவே நான்கு கால்களோடு இருக்கும். ஒவ்வொரு காயினும் அரை அடி உயரம் இருக்கும். 

சின்ன வயசுல இருந்தே நான் செஸ் நல்லா விளையாடுவேன். சின்னச் சின்ன செஸ் போர்டுகள் நிறைய வெச்சிருக்கேன். ஆனா, இப்பதான் பெரிய செஸ்போர்டு வாங்கியிருக்கேன். என் கணவரின் பிறந்த நாள் பரிசா இதைக் கொடுக்கலாம்னு இருக்கேன்.''

10/10 பத்துக்குப் பத்து!

விஜயதரணி, அரசியல்வாதி

பிடித்த புத்தகம் 

10/10 பத்துக்குப் பத்து!

“ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பான `Letters from a Father to His Daughter' தொகுப்புதான் எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். அந்தக் கடிதங் களைப் படித்து நான் மிகவும் இம்ப்ரஸ் ஆகியிருக்கேன். 

10/10 பத்துக்குப் பத்து!என் பதினாறு வயதில்தான் இந்தப் புத்தகத்தை முதன் முதலாகப் படித்தேன். வயது ஆக ஆக, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கிறது இந்தப் புத்தகம். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இந்தப் புத்தகம் பயன்படும். படிக்கும் ஒவ்வொருவருக்கும் நம் அப்பாவே நமக்குக் கடிதம் எழுதியது போன்ற உணர்வு எழும்.

இது தவிர, Halsbury's Laws of England, இந்திய அரசிய லமைப்புச் சட்டம் புத்தகங்களும் எனக்கு மிக முக்கியமானவை.''

10/10 பத்துக்குப் பத்து!

ரம்யா, நடிகை

மறக்க முடியாத பரிசு

``சி
ன்ன வயசுல நமக்கெல்லாம் ரொம்ப காஸ்ட்லியான பொருள், ஸ்கெட்ச் பென்சில்தானே? எனக்கு அப்போ ஆறு வயசு இருக்கும். அந்த ஸ்கெட்ச் பென்சிலுக்காக ரொம்ப நாளா ஏங்கினேன். `நம்மகிட்ட ஸ்கெட்ச் பென்சில் இல்லையே'னு ஒரே சோக மயம்.

10/10 பத்துக்குப் பத்து!எதிர்பாராதவிதமா, ஒருநாள் எங்க வீட்டுக்கு வந்த ஃபேமிலி ஃப்ரெண்ட் எனக்கு சர்ப்ரைஸா ஸ்கெட்ச் பென்சில் வாங்கிட்டு வந்திருந்தார். அப்போ, நான் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே கிடையாது. ரொம்ப நாளா ஆசைப்பட்டுக் கிடைச்சதாச்சே?
 
இதுதான் என்னால் என்றும் மறக்க முடியாத பரிசு.''

10/10 பத்துக்குப் பத்து!

அதிதி பாலன், நடிகை

பிடித்த இடம்

10/10 பத்துக்குப் பத்து!``ம
லைவாழ்விடம்னாலே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதிலும் ரொம்ப ரொம்ப பிடிச்ச இடம், இமாசலப்பிரதேசத்துல இருக்கிற கிர் கங்கா (Khir Ganga). காலேஜ் படிக்கும்போது டிரெக்கிங்  போவது வழக்கம்தான்.  ஆனால், ஃப்ரெண்ட்ஸோடு டூர் போகத் திட்டமிட்டப்போதான் கிர் கங்கா பற்றிய அறிமுகம் கிடைச்சது. ஃபர்ஸ்ட் டைம் ஃப்ரெண்ட்ஸோடு போனேன். ஃபேமிலியோடு ஒருதடவை போனேன். அவ்வளவு ரம்மியமான இடம் அது. ஐந்து மணி நேரம் டிரெக்கிங் பண்ணலாம். அருவியில ஆனந்தமா கொண்டாடலாம். இப்படி என்ஜாய் பண்ண கிர் கங்காவுல எவ்வளவோ விஷயம் இருக்கு. வருஷத்துக்கு ஒருதடவை நிச்சயம் அங்கே போயிட்டு வந்துடுவேன். இந்த வருஷம் இன்னும் நேரம் அமையலை. ஆனா, நிச்சயம் போகணும்.''

10/10 பத்துக்குப் பத்து!

சௌமியா அன்புமணி, பசுமைத் தாயகம்

நெகிழ்ந்த நிமிடம்

10/10 பத்துக்குப் பத்து!“ஆ
ப்பிரிக்காவில் நடைபெற்ற உலகச் சுற்றுச்சூழல் நிகழ்வில் பங்கேற்க, எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் அழைப்பு விடுத்திருந்தாங்க. முதல் நாள் கருத்தரங்குல கலந்துக்கிட்டோம். இரண்டாவது நாள், பசுமைத் தாயகம் சார்பாக ஸ்டால் போட்டிருந்தோம். சிறிது நேரத்திலேயே அங்கு ஒரே பரபரப்பாகிடுச்சு. என்னன்னு பார்த்தா, நெல்சன் மண்டேலா வர்றார். அவருக்கு அப்போ கேமரா அலர்ஜி இருந்துச்சு. மேடையில அவர் ஏறினார். எங்களுக்கும் அவருக்கும் நாற்பது அடி தூரம்தான் இருக்கும். அவரைப் பார்த்ததும் அழுதுட்டேன். அதற்கு முன்புதான் அவர் சிறைப்பட்டிருந்த ராபின் ஐலாண்டைச் சுற்றிப் பார்த்திருந்தோம்.

அன்னிக்கு எங்கள் திருமண நாள். நான் என் வீட்டுக்காரர்கிட்ட, `ஏங்க... நமக்கு இது ரொம்பப் பெரிய கிஃப்ட்ங்க. நான் ரொம்ப லக்கிங்க'னு சொன்னேன். அப்புறம் என் முன்னாடி யார் இருக் காங்க, இல்லைன்னுகூட பார்க்கலை. எல்லோரையும் இடிச்சுத் தள்ளிட்டு மேடைக்குப் பக்கத்துல போயிட்டேன். அங்கே நெல்சன் மண்டேலாவைப் பார்த்தது மகாத்மா காந்தியைப் பார்த்த மாதிரியே இருந்தது. என் வாழ்விலேயே அதிகம் நெகிழ்ந்தது அந்தத் தருணத்துலதான்.''

10/10 பத்துக்குப் பத்து!

ஜெனித்தா ஆண்டோ, செஸ் பிளேயர்

10/10 பத்துக்குப் பத்து!மறக்க முடியாத நபர்

``எ
ன்னால் மறக்க முடியாத நபர் விஸ்வநாதன் ஆனந்த் சார்தான். அவரைப் பார்த்துதான் செஸ் ஃபீல்டுக்கே வந்தேன். மூணு முறை வேர்ல்டு சாம்பியன் ஆன பிறகும்கூட சாரைப் பார்க்கிற வாய்ப்பு எனக்குக் கிடைக்கலை. இது ரொம்ப நாள் வருத்தமா இருந்தது. 

விஸ்வநாதன் சாரைப் பார்க்கிற வாய்ப்பு 2016-ம் ஆண்டுலதான் கிடைச்சது. சாரோட மனைவியே, அவங்க வீட்டுக்கு என்னை இன்வைட் பண்ணினாங்க. நான் சாரைப் பார்த்தபோது, `2017 நேஷனல்  ஃபிசிக்கலி டிஸேபிள்டு செஸ் டோர்னமென்ட்டை நீங்கதான் தொடங்கிவைக்கணும். நான் உங்களைப் பார்க்கும்போது எனக்கு ஒரு மோடிவேஷன்னா இருக்கு. இதேமாதிரி டிஸேபிள்டு வீரர்கள் நிறைய பேர் உங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க. வந்தீங்கன்னா, அவங்களுக்கு ஒரு பிளெஸ்ஸிங்கா இருக்கும்'னு கேட்டுக்கிட்டேன். `நான் இங்கே இருக்கும்போது கூப்பிட்டிங்கன்னா நிச்சயம் கலந்துக்கிறேன்'னு அவர் சொன்னார். டோர்னமென்ட்டுக்கு அவர் சொன்ன மாதிரியே வந்தார். அவரும் ரொம்ப ஹேப்பி. இந்த மாதிரி ஒரு மனிதரை எப்படி சார் மறக்க முடியும்?'' 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism