சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையான வன்முறைகள், தீங்கான போக்கு குறித்த ‘நமக்குள்ளே’ சிந்திக்க வைத்தது.
- கவிதா சரவணன், திருச்சி-6

கணவன் மனைவி உறவுகளில் ஏன் மனம்விட்டுப் பேசக்கூட முடியாத நிலை... காரணங்கள், தீர்வுகள் சொல்லி அவள் உயர்ந்துவிட்டாள் எங்கள் உள்ளங்களில்!
- மயிலை கோபி, சென்னை-83
`அவளும் நானும்... நானும் அவளும்' - இயக்குநர் பார்த்திபனின் காதல் அழகாகவும் மென்மையாகவும் உண்மையாகவும் பெண்மையைப் போற்றும்விதமாக இருந்தது. அதைக் கவிதையாகச் சொன்ன விதம் அருமை.
- எஸ்.வி.எஸ். மணியன், கோயமுத்தூர்-12
அவள் விகடனின் பல்வேறு முகங்கள்கொண்ட கட்டுரைகளை எப்படிப் பாராட்ட! `என் உடல் என்னுடையதல்ல’ நூல் பற்றிய மருதனின் கட்டுரை ‘வாவ்’. இதுபோன்ற புத்தகங்களை வாசிக்க என் போன்றோருக்கு வாய்ப்பே இல்லை. அதன் சாற்றைப் பிழிந்து கட்டுரையாசிரியர் தந்த விமர்சனம் சூப்பர்.
- சியாமளா ரங்கநாதன், சென்னை-28

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாலாட்சி இளையபெருமாள் அளித்த ‘இட்லி மேளா’ என்ற புதுமையான சமையல் குறிப்பு அருமை. அப்பப்பா... 17 வகை இட்லிகளா? குறிப்பாக... தயிர், தக்காளி, பர்கர், சாண்ட்விச் இட்லி ஆகியவை என்னைப் பெரிதும் கவர்ந்தன.
- வி.மோனிஷா பிரியங்கா, திருச்சி-18
பச்சை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு, வெள்ளை எனக் கலக்கிய கலர்ஃபுல் இணைப்பு இதழ் அட்டகாசம். ஒவ்வொன்றாகச் செய்து பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
- ஆர்.சாரதா, சென்னை-28